வேட்டையாடுவது பெண் சிங்கந்தான்…..

வேட்டையாடுவது பெண் சிங்கந்தான்…..

மூன்று ஆண்கள்,  சிறுசுகளும் பெண்களுமாக 12. சாதராணமாக ஒரு கூட்டத்தில் நாம் காணக்கூடிய தொகை இதுவாகத்தான் இருக்கும். அது எந்தக் கூட்டம் என்று நினைக்கின்றீர்கள்? ஒரு சிங்கக் கூட்டத்தில்தான் ஆணும், பெண்ணும் குட்டிகளுமாக இத்தனை தொகை இருக்கும். பெண் சிங்கக்குட்டிகள் வளர்ந்தாலும், கூட்டத்தை விட்டுப் பிரிவதில்லை. ஆனால் ஆண் சிங்கக் குட்டிகள் வளர்ந்ததும், தம் கூட்டத்தை விட்டுப் பிரிந்து , இன்னொரு கூட்டத்தோடு இணைந்து கொள்வதோடு, நாளடைவில் அந்தக் கூட்டத்தின்...

Read more
தொட்டகுறை விட்டகுறை

தொட்டகுறை விட்டகுறை

வெளிநாடுகளில் அவரவர் படிப்பிற்கு வேலை கிடைப்பது என்பது குதிரைக் கொம்பு போன்றதுதான். அந்தந்த நாட்டு மொழியைப் படித்தால் ஒருவேளை இது சாத்தியப்படலாம். ஆனால் 50 வயதைத் தாண்டி விட்ட எனக்கு இனியொரு மொழியைப் படித்து, பிறகொரு வேலைதேடுவது என்பது சுலபமான ஒன்றாகத் தெரியவில்லை. ஊரில் 25 வருடங்கள் லிப்டன் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்தவன் நான். அரபு நாடுகளில் அதிகமாக உழைக்கலாம் என்ற நப்பாசையோடு,  அங்கிருந்து இந்த அரபு...

Read more
சார்பு நிலையில் பயணிக்கும் நம் வாழ்வு

சார்பு நிலையில் பயணிக்கும் நம் வாழ்வு

இறைவனின் படைப்பின் அதிஅற்புதம் நம்மில் பலபேருக்கு மூடுமந்திரமாகவே இருந்து வருகின்றது என்பதே யதார்த்தம். இன்று நாம் தலையில் வைத்துக் கொண்டாடும் கணனியை விட மிகத்துல்லியமாக கோடானுகோடி நிகழ்வுகளை தினசரி இயக்கிவரும் ஆண்டவன் கையில் இருக்கும் கணினி பற்றி என்றாவது சிந்தித்திருக்கின்றீர்களா? இலைகள் பழுத்தல், பினபு மரத்திலிருந்து உதிர்தல், பகல் சுருங்கி இருள் நீள்தல், வெப்ப நிலைவீழ்ச்சி கண்டு குளிர் ஆக்ரமித்தல், பூபாளமாய் பனி கொட்டி புவனத்தில் தன் வெண் போர்வையைவிரித்தல்,...

Read more
உலகை உலுப்பும் (இணைய) ஊடுருவல்கள்

உலகை உலுப்பும் (இணைய) ஊடுருவல்கள்

ஒற்றர்கள் நாட்டுக்குள் ஊடுருவிய ஒரு காலம் இருந்தது. பல முக்கிய தகவல்களை அறிந்து தங்கள் அரசுக்கு இவர்கள் தகவல் கொடுக்கää பகை நாடுகள் இலகுவாக எதிரிகளை முற்றுகையிட்டு நாட்டையும் கைப்பற்றினார்கள்.  ஒற்றர்களாக வந்தவர்கள் பலர் கையும் மெய்யுமாக அகப்பட்டு உயிரிழந்த கதைகளும் ஏராளம். எலியும் பூனையுமாக இருந்த சோவியத் ஒன்றியமும் அமெரிக்காவும் இந்த வியடத்தில் பலே கில்லாடிகள். இரு நாட்டு அரசும் தலை சிறந்த உளவாளிகள் அமைப்பை வைத்துக் கொண்டிருந்ததால்,ஒருவரை...

Read more
இளமையும் இருபதும்

இளமையும் இருபதும்

பக்குவத்திற்கு  வந்து விட்ட வயதை ஜப்பானிய இளசுகள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றார்கள் . ஒவ்வொரு வருடமும் ஜனவரி பிறந்து இரண்டாவது திங்களில் 20வயதை முதன் முறையாகத் தாண்டும் இளசுகள் ஆர்ப்பாட்டமாக பெரும் பணம் செலவிட்டு கொண்டாடி வருகின்றார்கள் . இருபது பிறந்து விட்டால் ஜப்பானில் ஒரே கொண்டாட்டந்தான். காரணம் இருபது வயது பிறக்கும்போதுதான் இளவட்டங்கள் சட்டரீதியாக மது அருந்தவோ , புகைக்கவோ அல்லது தேர்தலில் வாக்களிக்க முடியும் ....

Read more
இழுவை மீன்பிடிப் படகுகளால் அழிக்கப்படும் மீன்வளம்

இழுவை மீன்பிடிப் படகுகளால் அழிக்கப்படும் மீன்வளம்

மீன்வளம் கொண்ட ஒரு நாடு இலங்கை என்பதில் எவருக்குமே சந்தேகம் இல்லை . மீன்பிடித் தொழில் வடக்கில் ஆகட்டும் கிழக்கில் ஆகட்டும் பல்லாயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களுக்கு சோறு போடும் தொழிலாக அமைந்துள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை . ஆனால் சமீப காலங்களில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறும் ஊடுருவல்களை மேற்கொண்டு வருவதால் , பல மீனவக் குடும்பங்கள் பெரும் பாதிப்பைக் கண்டுவருகின்றன . கடல் வளத்திற்கு பெரும் நாசத்தை...

Read more
அழிவுக்கு  அடிகோலும்  ஆனைத்தந்தங்கள்…

அழிவுக்கு அடிகோலும் ஆனைத்தந்தங்கள்…

“இன்று 1.37 பில்லியனைத் தொட்டு,  தினம் தினம் ஏறிக் கொண்டிருக்கும் சீன ஜனத்தொகையில் 80 வீதமானவர்களுக்கு,  தந்தத்தில் செய்த ஏதோவொரு பொருளை, அளவில் சிறியதாக இருந்தாலும் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆசை மேலோங்கி இருக்கின்றது. இந்த நிலையில் 500, 000 யானைகளின் தந்தங்கள் எங்ஙனம் சீனர்களின் தேவைக்கு போதுமானதாக இருக்கப் போகின்றது?” ஆசைப்படாதே அவதிப்படாதே என்கிறார்கள். ஆனால் ஆசைப்படாமல் மனிதர்களால் இருக்க முடிகின்றதா? ஆசை ஆசை என்று வளர்ந்து...

Read more
அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில்  அகப்பட்ட சிறீலங்கா எயர்லைன்ஸ்

அரசியல் சதுரங்கக் காய் நகர்த்தலில் அகப்பட்ட சிறீலங்கா எயர்லைன்ஸ்

  முன்னொரு காலத்திலே என்றுதான் எழுதுவதை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. அப்படியொரு காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக இலங்கையின் தேசிய விமானச் சேவையான எயர்லங்கா இலாபம் மேல் இலாபம் ஈட்டி தன் நாட்டிற்கு புகழ் சேர்த்துக் கொண்டிருந்தது. ஆனால் யார் கண்கட்டதோ தெரியவில்லை.கடந்த காலங்களில் கோடிக்கணக்கான  பணத்தை முழுங்கிய எயர்லங்கா, இப்பொழுது அரசுக்கே ஒரு சுமையாக நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2008இல் ஐக்கிய அரபுக் குடியரசின் எமிரேட் விமான நிறுவனம், விழுந்தவரை கைபிடித்து...

Read more
அந்நிய நாடுகளில் பத்திரிகைத் துறை…..

அந்நிய நாடுகளில் பத்திரிகைத் துறை…..

எழுத்தை நேசிப்பவர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். பிறருடைய எழுத்துக்களை வாசித்து ரசிப்பவர்கள் ஒரு சாரார் என்றால், இன்னொரு சாராரோ தாமும் இலக்கிய தாக மேலீட்டால் எதையாவது எழுதுபவர்கள். அந்நிய நாடுகளில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தவர்கள் பலர் ஆரம்ப காலகட்டங்களில் தனியனாகவே வாழ்ந்தபடியால், ஓய்வாக உட்கார்ந்து எதையாவது எழுத,  போதிய நேரம் கிடைத்தது. தனியனாகவோ, இன்னும் சிலரோhடு கூட்டுச் சேர்ந்தோ,ஒரு மாதாந்த சஞ்சிகையை வெளியிடும் வேகம் வந்தது. இந்த ரக எழுத்தாளர்கள் தங்கள்...

Read more
அட சும்மா இருங்க….

அட சும்மா இருங்க….

அடடா இந்தத் தமிழ் மொழியில் சும்மா என்ற சொல் நம்மை வந்து சும்மா படாத பாடுபடுத்துவதை அவதானித்திருக்கின்றீர்களா? சும்மா இருக்கத் தெரியாமல் நான் இந்தச் சிறு ஆக்கத்தை ஏன் எழுதுகிறேன் என்றால் இந்தச் சும்மா என்ற எளிய சொல் தரும் பல அர்த்தங்களின் பிரமிப்பில்தான்! எங்கள் பேச்சு வழக்கில் இந்தச் சும்மா எப்படி எப்படியெல்லாம் புகுந்து விளையாடுகின்றது என்பதைக் கவனித்தீர்களானால் அது நிச்சயம்  சுவாரஸ்ஸியமானதாகத்தான் இருக்கும். எதுக்கு இப்போ வந்தீங்க?...

Read more