கொக்கரக்கோ

கொக்கரக்கோ

11 views
0

கோழி முட்டைகள் சாப்பிடுவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். பொரித்தோ அவித்தோ முட்டையை ரசித்து ருசித்துச் சாப்பிடுவான் திலகன். இடையிடையே அம்மா வைக்கும் முடடைக்கறியின் சுவையில் அவன் தன்னையே மறந்து விடுவதுண்டு.

சரி எல்லாம் இருக்கட்டும். திலகன் ஒரு முட்டைப் பிரியன் என்பது நன்றாகவே தெரிகின்றது. ஆனால்  இந்த முட்டைகளை விரும்பிச் சாப்பிடும் திலகனுக்கு கோழிகளையோ சேவல்களையோ  ஏன்அடியோடு பிடிப்பதில்லை?

இரண்டும் இல்லையென்றால் முட்டையே இல்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். என்றாலும் அம்மா நான்கு பெட்டைக் கோழிகளையும் ஒரு சேவலையும் அவற்றின் இஸ்டத்திற்கு முற்றத்தில் மேய விடுவது திலகனுக்குப் பிடிப்பதில்லை.

முற்றமெல்லாம் கோழிகள் தங்கள் கழிவுகளை அகற்றி விட்டுச் செல்வதுதான்ää கோழிகள் மீதான கோபத்திற்குக் காரணம். என்ன செய்வது? தின்னும் முட்டைகளுக்காக கோழிகளை அவன் சுதந்திரமாக நடமாட விட்டிருந்தான்.

அவற்றைக் கொல்ல வேண்டும்  என்று தனக்கு இடையிடையே வரும் கொலைவெறியையும் அடக்கிக் கொண்டான்.

முட்டையிலிருந்து கோழியா அல்லது கோழியிலிருந்து முட்டையா என்று பழைய கதையைக் கிளறாமல்ää ஒன்றில்லை என்றால் இன்னொன்று இல்லை என்பது மட்டும் அவனுக்குத் திடமாகத் தெரிந்தது.

அவன் குடும்பத்தில் நான்கு பிள்ளைகள். 15 வயதாகும் இவன் இன்னமும் படித்துக் கொண்டிருக்கிறான். பத்து வயதாக இருக்கும்போதே தன் அப்பாவை மாரடைப்பு காரணமாக இழந்த துரதிஷ்டசாலி . அவன் மாமாதான் அவர்களுக்கு பலவழிகளிலும் உதவி செய்து கொண்டு வருகின்றார்.

35 வயதாகி விட்ட அக்கா கமலம் இதுவரையில் கல்யாணமாகமலே வீட்டோடு இருக்கிறாள்.  பட்டதாரி.  ஆங்கில ஆசிரியையாக இவளுக்கு வேலைகிடைத்திருக்கின்றது. வருகிற வரன்களையெல்லாம் ஆயிரத்தெட்டுக் காரணங்கள் சொல்லித் தட்டிக் கழித்து அவள் வயதும் ஏறிக் கொண்டே போகின்றது… கமலத்திற்கு இளையவர்களான அவனது இரு அக்காமார் திருமணமாகி ஆளுக்கு இரண்டு பி;ள்ளைகளையும் பெற்றுக் கொண்டு விட்டார்கள்……

…….அவன் வகுப்புகளுக்குப் போய்விட்டுää சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வீடு திரும்பியபோதுää அவன் அக்காளää கமலம் தான் கழுவிய உடைகளை கொடியில் காயப் போட்டுக் கொண்டிருந்தாள்.

திலகனைக் கண்ட குஷியிலோ தெரியவில்லை..முற்றத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கோழி மெல்லத் தன் கழிவை  முற்றத்தில் அகற்றி விட்டு சிறகைப் படபடவென அடித்தது. தூரத்திலிருந்து சேவல் ஓடிவந்து கோழியை ஆக்ரோஷமாக ஏறி மிதித்து விட்டு கொக்கரித்தது.

சைக்கிளை அப்படியே போட்டுவிட்டுää ஒரு கல்லை எடுத்து கோழி மீதும்ääசேவல் மீதும் எறிய வேண்டும் என்ற ஆத்திரம் அவனுள் மேலிட்டது. ஆனால் மதியச் சாப்பாட்டுடன் கிடைக்கும் முடடைப் பொரியலை நினைத்துக் கொண்டுää தன் வழமையான கொலைவெறியை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான் திலகன்…..

“வீட்டுக்காரர்….”

யாரோ ஒருவர் வீட்டு வாசலில் நின்று கூப்பிடுவது கேட்டு அவன் வீட்டு கேட் பக்கம் திரும்பினான்.

“இங்க கோழி விக்க இருக்கே…?”

 

திலகன் பதில் சொல்ல முன்பு முற்றத்திற்கு வந்த அம்மா வந்தவரை உள்ளே அழைத்தாள்.

“வாங்க தம்பி.. ஒரு கோழி இருக்கு….”

திலகனுக்கு ஆச்சரியமாக  இருந்தது. அம்மா கோழியை விற்கப் போகிறாளா?

அதே நேரம் அவனுக்கு மாமா முறையான சிவகடாட்சம் வந்தவரை அழைத்துக் கொண்டு உரிமையோடு “உள்ளே வாங்க தம்பி.. கோழி இருக்கு… நல்ல விலைக்குத் தரலாம்..” என்றபடி உள்ளே நுழைந்தார்.

திலகனுக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். அம்மா கோழியை விற்கப் போகிறாள் என்று காதில் விழுந்த செய்தி முதல் ஆச்சரியம். கோழி வாங்க வந்தவரை கையைப் பிடித்து உரிமையோடு மாமா வீட்டுக்குள் வரவழைத்துää உட்கார வைப்பது இன்னொரு ஆச்சரியம்.

“தம்பி இரும்.. வாறன்” என்று சொல்லிவிட்டு சிவகடாட்சம் பார்வதியை அடுக்களைக்குள் அழைத்துச் சென்றார்.

பார்வதியும் குழப்பத்தோடு சிவகடாட்சத்தைத் தொடர்ந்தாள்.

அவசரமாக அவர்களைத் தொடர்ந்த திலகனுக்கு சட்டென இருவரும் வெளியே வந்தபோது அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைக் கேட்டறிய முடியாதது உப்புக் குறைவான முட்டைக் கறியைச் சாப்பிட்டது போன்ற சப்பென்ற உணர்வைத் தந்தது.

முட்டை போடுவது குறைவாகி விட்டதால்ää இருப்பதில் ஒன்றை விற்றுவிட்டுää மேலும் இரண்டு கோழிகளும் ஒரு சேவலும் அம்மா வாங்கி முற்றத்தில் மேயவிடப் போகிறாள் என்ற தகவலை திலகன் அறிய நியாயமில்லை.

அட கோழி வாங்க வந்தவரை உட்கார வைத்து எதற்கு பால்ரீயும் பலகாரமும் கொடுக்கின்றார்கள் என்று குழம்பியபடி அவன் உடைமாற்ற தன் அறைக்குள் சென்றான்…அக்காளிடமும் கேட்க முடியாது. அவள் சிடுமூஞ்சி. உனக்கெதற்கு அதெல்லாம் என்று எரிந்து விழுவாள்..

…..கோழி வாங்க வந்த வசீகரன் திலகனை விட நன்றாகக் குழம்பிப் போயிருந்தான். தான் கோழி வாங்க வந்த இடத்தில் முன் பின் தெரியாத எனக்கு ஏன் இத்தனை உபசாரம் என்று அவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. தன்னை உட்கார வைத்து சுகம் விசாரித்துää குடும்ப நலன் விசாரித்துää பலகாரமும் தேநீரும் தந்து  கோழியோடு அனுப்பியபோது அவன் நன்றாகவே குழம்பி விட்டான். கோழிக்கு அதிக பணமும் வாங்கவில்லை.

அட இந்த ஊரில் கோழி வாங்க வருபவர்களுக்கு இப்படியொரு ராஜ உபசாரமா என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். முதலில் முற்றத்துக் கொடியில் உடுப்புக் காயப் போட்டுக் கொண்டிருந்த கமலத்தை நேரில் பார்த்தபோதுää வசீகரமான அழகிதான் என்று வசீகரன் நினைத்துக் கொண்டான். கதவிடுக்கில் இரகசியமாக தன்னை அவள் பார்த்துக் கொண்டிருந்தபோதுää அவனை அறியாமல் அவளில் ஒரு ஈர்ப்புத் தோன்றுவதை அவன் உணர்ந்திருந்தான்.

இங்கேதான் வாசகர்கள் குழப்பத்தைத் தீர்க்க வேண்டி இருக்கின்றது.

வசீகரன் இருபது வருடங்களுக்கு மேலாக இலண்டனில்தான் வசித்து வருகின்றான். பல இடர்களுக்கு முகம் கொடுத்த முடிவில் 2013இல்தான் அவனுக்கு இங்கிலாந்தின் பிரஜாவுரிமை கிடைத்தது. தனது 25வது வயதில் அப்பா ää  தொடர்ந்து அம்மா என்று இருவரையும் இழந்து விட்ட துரதிஷ்;டசாலி இவன்.  அதன் பிறகு இலண்டனில் ஒரு விபத்தில் சிக்கியதால்ää ஒரு நல்ல வேலையைத் தேடிக் கொள்ள முடியாமல் ஐந்து வருடங்கள்  கழிந்தன. பொறுமையாக இந்த ஐந்து வருட காலத்திற்குள் ஆங்கில மொழியைச் செவ்வனே படித்தான். அரசாங்க சலுகையைப் பயன்படுத்தி தொழிற்கல்வியைப் படித்தான்.

பொறுமையும்ää கற்ற கல்வியும் கைகொடுத்தன. பிரபல்ய சுவிஸ் நிறுவனமொன்றின் இலண்டன் கிளையில் மேற்பார்வையாளராக வேலை கிடைத்தது. மனதிற்கு திருப்தியான உழைப்பும் தேடிவந்தது. வேலை மீது இருந்த ஈடுபாடுää திருமணத்தில் அவனுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் காலவெள்ள ஓட்டத்தில் முப்பதுகளில் இருந்து அவன் வயது நாற்பதைத் தொட்டபோதுää அவனுள் ஓர் உண்மை உறைத்தது.

தான் இன்னமும் கட்டைப் பிரமச்சாரி என்ற உண்மைதான் அது. இறைவன் ஆணையும் பெண்ணையும் படைத்ததே ஒருவர் மீது இன்னொருவர் தங்கியிருந்து வாழக்கையை ஓட்டத்தான் என்று அவன் தீர்க்கமாக நம்பினான். இனியும் திருமணமாகாது விட்டால் வாழ்வின் பிற்பகுதி பெரும் சிக்கல்கள் கொண்டதாக இருக்கும் என்பது அவனுக்கு நிதர்சனமாகத் தெரிந்தது. அவன் ஒரு தீர்மானத்;திற்கு வந்து. முதல் கட்டமாக தன் வேலையை ராஜிநாமா செய்வது என்று தீர்மானிததான்.. தன் அனுபவம்ää படிப்பு தனக்கு இன்னொரு வேலையை நிச்சயம் தேடித்தரும் என்று அவன் திடமாக நம்பினான்.

யாழ்;ப்பாணம் சென்று எப்படியாவது ஒரு பெண் தேடுவது என்ற முடிவோடுதான் இவன் யாழ்ப்பாணப் பயணம் தொடங்கியது. ஒரு வருடமாவது  அங்கு நின்று ஒரு பெண்ணைத் துணைவியாகத் தேடிவிட்டுத்தான் இலண்டன் திரும்புவது என்பது அவன் திட்டம். வேலை இதற்கு இடையூறு. எனவே மனேஜரிடம் உண்மையான காரணத்தை  நேரில் விளக்கிய பின்னரே எழுத்தில் தன் இராஜிநாமாக் கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தான்.

அவனது நேர்மை அவனுக்குப் பரிசளிக்கத் தவறவில்லை.

ஒரு வருடத்தில் திரும்பி வந்தால் வேலை மீண்டும் தரப்படும். சம்பளமில்லா லீவில் போய்வரலாம் என்று மனிதபிமான அடிப்படையில் நிர்வாகம் அறிவித்தபோதுää அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான். பொய்யை மெய்யாக்க ஆயிரம் பொய் சொல்லாமல்ää உள்ளதை உள்ளபடி சொன்னதால்ää அவனுக்கு யோகம் அடித்திருக்கின்றது. 12 மாதகால அவகாசத்தில் ஒரு பெண்ணைத் தேடிவிட வேண்டும்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் அவனுடன் ஒன்றாகப் படித்த குபேரன் அவனுக்கு இந்த விடயத்தில் உதவுவதாக வாக்களித்து  தன் வீட்டில் தங்க ஓர் அறையும் கொடுத்திருந்தான் அந்த நல்ல மனம் கொண்ட பாடசாலைத் தோழன்.

8 மாதங்கள் கழிந்தும் அவர்கள் பெண் வேட்டை எந்த வழியிலும் பலன் கொடுக்காதது இருவருக்குமே ஏமாற்றமாக இருந்தது. மீண்டும் மீண்டும் கொழும்பு பயணித்து விசாவைப் புது;பபித்துக் கொண்டிருந்த வசீகரனுக்கு எரிச்சலாக இருந்தது. ஓர் இடத்தில் வயதுப் பிரச்சினைää இன்னொரு இடத்தில் சாத்திரப் பொருத்தப்  பிரச்சினை… அவன் பிரித்தானிய பிரஜை என்பதால் இன்னொரு புறம் பிறந்த மண்ணில் அந்நியனாகிää விசாவுக்காக கொழும்புக்கு ஓடித் திரியும் அவலம்…

கைவசம் இருக்கின்ற வேலையும் பறிபோகப் போகின்றது. தேடி வந்த பெண்டாட்டியும் கிடைக்காமல் போகப் போகிறாள் என்று வசீகரன் மனம் நொந்து கொண்டான். அவனை உற்சாகப்படுத்தி பெண் தேடும் வேட்டையை மும்முரமாக்கியிருந்தான். நண்பன்.

இந்த வேட்டையில்தான் 35 வயதான கமலத்தைப் பற்றிய தகவல் அவர்கள் காதில் வீழ்ந்தது. அவன் நண்பன் நம்பிக்கையான இடங்களில் விசாரித்ததில் நல்ல குடும்பம். பொறுப்பு எதுவும் வருகிற மாப்பிள்ளைக்கு இல்லை. பெண் படித்த பட்டதாரி. ஆங்கில ஆசிரியை. சுமாரான அழகி. மாநிறம் என்ற தகவல்கள் எல்லாம் கிடைத்தன.

பெண்ணின் போட்டோ கிடைத்திருந்தாலும் நேரில் ஒரு தடவை பார்க்க வேண்டும் என்ற சபலம் வசீகரனுக்கு.

Which came first, the chicken or the egg?

அப்படியானால் என்ன செய்வது? ஒரு திட்டம் வகுக்கப்பட்டதுää….

கொக்குவிலில் கமலத்தின் குடும்பத்தாரோடு தொடர்புடைய ஒருவரை வசீகரனின் நண்பன் குபேரனுக்குத் தெரியும். வீட்டுக் கோழியை விற்கும் நோக்கம் கமலத்தின் தாய்க்கு இருக்கின்றது. கோழி வாங்கும் காரணத்தோடு வீட்டுப் பக்கம் தலையை நீட்டினால்ää பெண்ணை நேரில் பார்க்கலாம் என்று குபேரன் காதில் போட்டு வைத்தார் அந்தக் கொக்குவில் நண்பர்.

பெண் வீட்டில் நிற்கிறாள். இப்பொழுது போனால் நேரில் பார்க்கலாம் என்று அவர் போனில் தகவல் தந்த காரணத்தால்தான்ää தன் பைக்கை எடுத்துக் கொண்டு வசீகரன் குறிப்பிட்ட வீட்டுக்கு கோழி வாங்கப் போயிருந்தான்………………………..

இப்பொழுது வாசகர்களுக்குக் குழப்பம் தீர்ந்திருக்கலாம்;.

வசீகரன் குழம்பியதில் நியாயம் இருக்கவே செய்தது. ஆனால் குபேரனுக்குத் தெரிந்த அந்தக் கொக்குவில் நண்பர் ää குபேரன் சங்கதி ரகசியமாக இருக்கட்டும் என்று  அடித்துச் சொல்லி வைத்தும் கேளாமல்ää கமலத்தின் மாமா காதில் சங்கதியைப் போட்டு வைத்து இரகசியம்.ää ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதீங்க எனறும் அவர் சொல்லத் தவறவில்லை. இதனால்தான் கோழி வாங்க வந்த தம்பியை “ கமலத்தைத் திருட்டுத்தனமாகப் பார்க்க வந்த பொடியன். நல்ல பொடியனாம். ஆளும் வாட்டசாட்டமா இருக்கிறார். இலண்டன் மாப்பிள்ளை. விட்டிராதை பார்வதி ” என்ற சங்கதியை பார்வதியின் காதில் போட்டு  அவளை அடுக்களையில் உஷார்படுத்தியிருந்தார் சிவகடாட்சம் மாமா……இதைத் தொடர்ந்ததுதான் பசுப்பால் கலந்த தேநீரும் பலகாரமும்! மனிதன் சுயநலவாதி. தன் இலாபத்திற்காக நேரத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதி அவன்..

திலகனுக்கு மகா குழப்பம்.. ஒருநாளும் இல்லாத திருநாளாய் அவனது அக்காள் அவன் கையில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுக்களைத் திணித்துää

“தம்பி இந்தா நீ கேட்ட காசு..அது சரி கோழி வாங்க வந்த மாமாவை உனக்கு யாரெண்டு தெரியுமே?”

என்று கமலம் கேட்டபோதுää அவன் குழப்பம் எல்லை மீறியது. இதென்ன கதையாக இருக்கிறது? கோழி வாங்க வந்தவரை மாமா என்கிறாள் அக்கா.  அம்மாவும் மாமாவும் வீட்டுக்கு வந்தவரை கதிரையில இருத்தி வைத்து பலகாரமும் பால்ரீயும் கொடுக்கினம். எப்பபவோ கேட்ட நூறு ரூபாய்க்காக இருநூறு ரூபாயைக் கையில திணிச்சுää கோழி வாங்க வந்த மாமாவைத் தெரியுமா எண்டு கேக்கிறாள் அக்காள்….

அவன் நன்றாகவே குழம்பிப் போனான்….

சேவல் கோழிகளை வெறுக்கும் அவன் வீட்டுக் கோழியொன்று வெளியிலிருந்து வந்த சேவல் ஒன்றின் மீது மோகம் கொண்டு விட்டதையும்ää வீட்டில் உள்ள இந்தப் பெட்டைக் கோழி இனி வந்த சேவலோடு வெளியேறப் போகிறது என்பதும் அவனுக்குப் புரிந்திருந்தால் ஒருவேளை .இந்தக் குழப்பம் தீர்ந்திருக்கலாம்…………வீட்டில் ஒரு பெட்டைக் கோழி குறைகிறது என்ற அற்ப சந்தோஷத்தையும் கொடுத்திருக்கலாம்…..

கொக்கரக்கோ……

நேரகாலம் தெரியாமல் தனிக்காட்டு ராஜாவாகத் தெரியும் திலகன் வீட்டுச் சேவல் கூவியது……

யாவும் கற்பனையே

20.01.2017

 

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *