காதும் கேளாது பேசவும் முடியாது

காதும் கேளாது பேசவும் முடியாது

6 views
0

அவர் ஒரு உயர் அதிகாரி . வெளிவேலை முடிந்து ரயிலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் . ஒரு புகையிரத நிலையத்தில் ஓர் அழகி ஏறினாள். இவர் அருகில் புன்முறுவலோடு வந்து உட்கார்ந்தாள் அந்த அழகி . அதிகாரியும் பதிலுக்கு புன்னகைத்தார் . அவருக்கு சந்தோஷமாக இருந்தது . சில நிமிடங்கள் கழித்து அவர் அருகில் நெருக்கமாக உட்கார்ந்த அழகி அதிகாரியின் காதுக்குள் மெல்லக் கிசுகிசுத்தாள் .

உங்கள் கைவசமுள்ள பணம்,  கடன் அட்டைகள் , கைக் கடிகாரம் எல்லாவற்றையும் என்னிடம் தந்து விடுங்கள் . இல்லையென்றால் என்னைக் கெடுக்க முனைந்தீர்கள் என்று நான் கூச்சலிடப் போகிறேன் –இதுதான் அவள் காதில் கிசுகிசுத்தது .

அந்த அதிகாரி அவளை முறைத்துப் பார்த்தார் . பின்பு தன் கைப்பைக்குள் இருந்து ஒரு வெற்றுத் தாளும் பேனாவும் எடுத்தார் . எனக்கு காதும் கேளாது . பேசவும் முடியாத ஊமை . என்ன வேண்டும் என்று இதில் எழுதித் தா என்று எழுதி விட்டு தாளை அவளிடம் பேனாவுடன் நீட்டினார். அவளும் உற்சாகமாக காதில் கிசுகிசுத்ததை அப்படியே எழுதிக் கொடுத்தாள்.

அதைப் புன்முறுவலுடன் வாங்கி நான்காக மடித்து காற்சட்டைப் பைக்குள் வைத்து விட்டு  அழகியை நிமிர்ந்து பார்த்த அதிகாரி எங்கே இப்பொழுது கூச்சலிடு பார்க்கலாம் பெண்ணே என்றார் அமைதியாக !

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *