அம்மா என்றால் சும்மாவா ?

அம்மா என்றால் சும்மாவா ?

527 views
2

அமெரிக்காவில்  வேலை செய்து கொண்டிருக்கும் தன் மகனை சந்திக்கும் ஆசையோடு  இந்தியாவிலிருந்து வந்தாள் தாய் .

மகிழ்ச்சியோடு தாயை வரவேற்றான்  மகன்.

ஒரு வருட இடைவெளியில் தன் மகனை நேரில் கண்ட பூரிப்பு தாய்க்கு ஏற்பட்டாலும் , அந்தக் குடியிருப்பில் தன் மகனோடு ஒரு அழகிய பெண்ணும் இருப்பது அவளுக்கு நெருடலாக இருந்தது .

இரவுச் சாப்பாட்டு வேளை வந்தது .

அந்தப் பெண்ணும் அவர்களோடு சாப்பிட வந்து உட்கார்ந்தாள் . இவள்தான் இந்தச் சமையலைச் செய்தவள் . இங்கேதான் அவளும் தங்கி இருக்கிறாள் அம்மா  என்று பெண்ணை அறிமுகம் செய்து வைத்தான் . அந்தப் பெண் நட்புறவோடு பல விடயங்களைப் பேசி பகிர்ந்து கொண்டது அந்தத் தாய்க்கு கொஞ்சம் மன ஆறுதலை அளித்தது . என்றாலும் மனதின் நெருடல் விட்டபாடாக இல்லை.

இரவு இருவரும் தனியாக இருந்தபோது யார் இந்தப் பெண் ? உண்மையைச் சொல் என்று கேட்டாள் தாய் .

அம்மா இந்த நாட்டில் ஒரு ஆணும் பெண்ணும் கூட்டாக வாழ்வது புதினமல்ல. எங்களுக்குள் அப்படி ஒன்றும் விசேஷமான உறவு இல்லை. அவள் தன் படுக்கையில் உறங்குகிறாள் . நான் ஏன் படுக்கையில் இரவைக் கழிக்கிறேன் . சந்தேகப்படும் அளவிற்கு ஒன்றும் இல்லை என்றான் மகன் .

அதன் பிறகு தாய் இது பற்றி மகனிடம் எதையும் கேட்பதில்லை . அந்தப் பெண்ணோடு தாய் வெகு சிநேகிதத்தோடு பழகினாள், மீண்டும் இந்தியா திரும்புவதுதற்கு  முதல் நாள் இரவு மூவரும் சேர்ந்து இரவுணவை இருந்தாள்உண்டார்கள் . அந்தப் பெண் பல வெள்ளிப் பாத்திரங்களை மேசையில் வைத்து உணவைப் பரிமாறி இருந்தாள்.

தன் கிராமத்திற்கு  திரும்பி வந்து விட்ட அம்மாவுடன் மகன் ஒரு நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டான் . சுக விசாரிப்புகள் முடிவில் ஒரு வெள்ளிப் பாத்திரம் காணாமல் போய் விட்டது என்று அம்மாவிடம் முறையிட்டான் மகன் .

யார் திருடியது என்று கேட்டாள் தாய் .

அம்மா இந்த வெள்ளித் தட்டு மீனாவுக்கு (அதுதான் அந்தப் பெண்ணின் பெயர் ) அவளது ஒரு பிறந்த தினப் பரிசாகக் கொடுக்கப்பட்டதாகும். இறுதியாக அம்மா நீதான் அதில் சாப்பிட்டாய். நீதான் கொண்டு சென்று விட்டாயோ என்று நான்  சந்தேகிக்கிறேன் கோபிக்காதே அம்மா என்றான் மகன் மறுமுனையில் சற்று கோபத்தோடு ..

தாய் கோபத்தோடு பதிலளித்தாள்,

அந்தப் பெண்ணின் கட்டில் தலையணைக்கு கீழ்தான் தட்டு இருக்கிறது . அந்தப் பெண் நேற்று இரவு அங்கு உறங்கப் போயிருந்தால் கண்டிருப்பாள். எனக்கு ஒன்று நிச்சயமாகத் தெரிகின்றது, நீங்கள் இருவரும் ஒன்றாக வாழ்கிறீர்கள் என்பதில் இப்பொழுது எனக்கு எந்தச் சந்தேகமுமே இல்லை என்று சொல்லிய தாய் பட்டென போனை வைத்து விட்டாள்.

அம்மா என்றால் சும்மாவா ? அனாவசியமாக அவளோடு விளையாடாதீர்கள்

05.06.2017

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *