பழம் பெரும் பொருள் இது

பழம் பெரும் பொருள் இது

12 views
0

எலுமிச்சை நம் உடலுக்குப் பல விதங்களில், நல்ல மருந்து பொருளாக பயன்படுகிறது. ஒரு முழு எலுமிச்சை பழத்தை, சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் கலந்து, நாள் முழுவதும் கொஞ்சம், கொஞ்சமாக குடித்து வந்தால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும்.

எலுமிச்சையில் விட்டமின் சி அதிகம் இருப்பதால், அது நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை, பல மடங்கு அதிகரிக்கிறது. இப்பழத்திலுள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாகத் தூண்டுகிறது. சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியைப் பெருக்கி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

உடலில் அமிலப் பண்புகள் அதிகரிக்கும் போது, நமக்கு உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. எலுமிச்சையில் உள்ள அல்கலைன் பண்புகள், இந்த உடல் நலக் குறைவை குணப்படுத்துகின்றன. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால்தான், உடல் எடையைக் குறைக்க முடியும். அல்கலைன் அதிகமுள்ள, எலுமிச்சை ஜூஸ் நம்மை எப்போதுமே சந்தோஷப்படுத்தி, மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இப்பழத்தில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து, பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதனால் நாம் சாப்பிடும் அளவு குறையும். உடல் எடை குறைந்துவிடும்.
எலுமிச்சை ஜூஸை சாப்பிடும் போது, அது உடலில் உள்ள அனைத்துக் கழிவுகளையும்  அடித்து இழுத்துக் கொண்டு வருவதால், சமிபாட்டுப்  பிரச்சினையே இல்லாமல் போய்விடும். தேநீரில் பாதி எலுமிச்சை பழத்தின் சாற்றை கலந்து, பருகி வந்தால் தலைவலி குணமாகும். கோடையில் ஏற்படும் அதிக தாகத்திற்கு எலுமிச்சை சாறு நல்ல பலன் தரும். எலுமிச்சை சாறு எடுத்து, தினமும் உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் வறட்சி நீங்கும். எலுமிச்சை சாற்றோடு தேன் கலந்து பருகி வந்தால், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் நீங்கும்; கல்லீரல் பலம் பெறும்.

 

எலுமிச்சை பழம், தாதுவை கெட்டிப்படுத்தி, உடலுக்கு புத்துணர்வை தரும். எலுமிச்சை சாறோடு சீரகம் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து, குடித்து வந்தால் பித்தம் குறையும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் உண்டாகும் வலிக்கு, சரியான தீர்வாக எலுமிச்சை சாறு இருக்கும். எலுமிச்சை ஜூசில் சிறிது துளசி மற்றும் தேன் சேர்த்து குடித்து வந்தால், தொண்டைப்புண் குணமாகும். இது பாதிப்படைந்த சரும செல்களை புதுப்பித்து, இளமையான  தோற்றத்தை தக்க வைக்கும்.

எலுமிச்சை சாறை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்தால், உடலில் தேவையில்லாத கொழுப்பு கரையும். தினமும் உடற்பயிற்சிக்கு பின், ஒரு டம்ளர் எலுமிச்சை சாற்றை குடிப்பது, சிறந்த பலனைத் தரும். பயணம் மேற்கொள்ளும் போது வாந்தி, குமட்டலை தவிர்க்க, எலுமிச்சையை நுகர்ந்து பார்த்தால் போதும்.
எலுமிச்சை சாற்றை அதிகம் பருகினால், உடலில் தங்கியுள்ள அதிகப்படியான நீரை சிறுநீராக வெளியேற்றிவிடும். தினமும் எலுமிச்சை ஜூஸ் குடித்து வந்தால், புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம். உடலில் சோர்வு, மன அழுத்தம் காரணமாக வரும் தலைவலியைப் போக்க, எலுமிச்சை தேநீர் மிகவும் சிறந்தது. குழந்தைகளின் வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றுவதற்கு எலுமிச்சை பயன்படுகிறது.
ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூசில் உப்பு, சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால், சமிபாட்டுப்  பிரச்சினை குணமாகி விடும். எலுமிச்சை சாற்றில் உப்பு மற்றும் கடுகு எண்ணெய் ஊற்றி, அதனை வாயில் ஊற்றி கொப்பளித்தால், பற்களில் உள்ள கறைகள், பாக்டீரியாக்கள், வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும். வெட்டுக் காயம் ஏற்படும் இடத்தில், சிறிது எலுமிச்சை சாற்றினை தடவினால், எளிதில் குணமாகிவிடும்.

எலுமிச்சை சாற்றில் இத்தனை வல்லமைகளா என்று ஆச்சரியப்படுகிறீர்களா ?

உண்மைதான் . பல அருங் குணங்களைக் கொண்டது இதன் சாறு !

Advertisements

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *