ஐயோ என் மனைவிக்கு காது செவிடு ……

ஐயோ என் மனைவிக்கு காது செவிடு ……

23 views
0

தன் மனைவிக்கு முன்னரைப்போல செவிப்புலன் இல்லையே என்று கவலைப்பட்ட கணவன் , தன் மனைவிக்கு காது கேட்க உதவும் கருவி ஒன்றை வாங்கத் தீர்மானித்தான் .

எப்படி மனைவியை அணுகுவது என்று தெரியாமல் , இது பற்றி கலந்தாலோசிக்க தன் குடும்ப மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டான் . ஒரு  இலகுவான பரிசோதனையை மேற்கொண்டால் தன்னால் நல்ல ஆலோசனை வழங்க முடியும் என்று மருத்துவர் அவனிடம் கூறினார்.

“முதலில் 40அடி தூரத்திலிருந்து கூப்பிட்டு பார்க்கவும் . பதில் வராவிட்டால் 30அடி தூரத்திலிருந்து அழைத்துப் பாருங்கள் . பின்பு 20அடி தூரம் என்று குறைத்துப் பாருங்கள் “ என்று மருத்துவர் கணவனுக்கு ஆலோசனை வழங்கினார்

அன்று மாலை மனைவி சமையல் அறையில் இரவுணவை தயார்பண்ணிக் கொண்டிருந்தபோது , கணவன் சுமாராக 40அடி தூரத்திலிருந்து மனைவியை அழைத்தான்.

“ டார்லிங்  இன்று இரவுக்கு என்ன சாப்பாடு ?” என்று அவன் கேட்டதற்கு பதில் இல்லை . எனவே கணவன் இன்னும் கிட்டப் போய் சுமாராக 30 அடி தூரத்திலிருந்து அதே கேள்வியை மீண்டும் கேட்டான் .

இப்பொழுதும் பதில் இல்லை .

20அடி தூரமாக நின்ற கணவன் மூன்றாவது தடவையாக அதே கேள்வியைக் கேட்டான் .

பதில் இல்லை .

இந்தத் தடவை மனைவியின் பக்கத்தில் போய் நின்று கொண்டு அதே வினாவை நான்காவது தடவையாகக் கேட்டான் .

“உங்களுக்கு நான்காவது தடவையாக பதில் தருகிறேன். கோழி” என்றாள் மனைவி அமைதியாக !

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *