கையைக் கடித்துள்ள இரவல் குடை வியாபாரம்

கையைக் கடித்துள்ள இரவல் குடை வியாபாரம்

9 views
0

மிதி வண்டிகளை வாடகைக்கு விட நகரின் பிரதான நிலையங்களில் நிறுத்தி வைப்பது போல இந்த நிறுவனமும் , குடைகளை விரும்பியவர்  எடுத்துச்செல்ல தயாராக அடுக்கி வைத்திருந்தது . ஆனால் இந்தக் குடைகளை எடுத்துச் சென்றவர்கள் , அவற்றைத் திரும்பவும் கொண்டுவரவில்லை .

இவர்கள் வைத்த 300,000 குடைகளில், அனேகமாக எல்லாமே மறைந்து விட்டன . இந்த நிறுவன இயக்குனர் இது விடயமாக கருத்து தெரிவிக்கையில் , தான் மக்களை தப்புக் கணக்கு போட்டு விட்டதாகவும் , மிதி வண்டி வாடகை போல இதையும் செய்ய முற்பட்டதாகவும் கூறி இருக்கின்றார் .

குடை தேவைப்படும் ஒருவருக்கு , கைத்தொலை பேசி மூலம் ஒரு கடவை இலக்கம் அனுப்பி வைக்கப்படும் . சீனப் பணத்தில் 50யுவான் செலுத்தி , பூட்டைத் திறந்து , குடையை எடுத்துச் செல்ல முடியும் .

மனம் தளராது இந்த வியாபாரத்தை தொடரப் போவதாக இந்த நிறுவனம் கூறி உள்ளமை  இவர்கள் விடாக்கண்டர்கள் கொடாக்கன்டர்கள் என்பதையே நமக்கு எடுத்துக் காட்டுகிறது

20.07

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *