எடை குறையாத ஏக்கம் நீங்க வேண்டுமா ?

எடை குறையாத ஏக்கம் நீங்க வேண்டுமா ?

8 views
0

 

உடல் எடையை குறைக்க, அதுவும் குறிப்பாக தொப்பையைக் குறைக்க பகீரத பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். .

ஏன் உங்களின் எடை குறையவில்லை என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.

மக்னீசியம் :

இதயம் சீராக துடிப்பதற்கு, மற்றும் ரத்தத்தில் சர்க்கரையளவு ஒரேயளவு பராமரிக்க என மொத்தம் 300க்கும் மேற்பட்ட உடலியல் செயற்பாடுகளுக்கு மக்னீசியம் தேவைப்படுகிறது. இவற்றுடன் உடல் எடையை குறைக்கவும், உடலுக்கு தேவையான வடிவத்தை கொடுக்கவும் மக்னீசியம் பெரிதும் உதவுகிறது.

ஜர்னல் ஆஃப் நியூட்டிரிசியன் என்னும் இதழில் வெளியான கூற்றுப்படி போதுமான அளவு மக்னீசியம் நம் உடலில் இருந்தால்,குளூக்கோஸ் எடுத்துக் கொள்வது குறையுமாம்.

இதனால் மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். கீரைகள்,பீன்ஸ் மற்றும் நட்ஸ்களில் அதிகளவு மக்னீசியம் இருக்கிறது.

வொர்க் அவுட் :

வருடக்கணக்கில் வாக்கிங், உடலுக்கு அதிகம் உழைப்பைக் கொடுக்காத பயிற்சிகள்  என இருந்தால் ஆண்டுகள் எவ்வளவு கடந்தாலும் உடல் எடை குறைப்பது என்பது கனவாகவே இருக்கும்.

தொப்பையைக் குறைக்க எளிய வழி பளு தூக்குதலில் ஈடுபடலாம். கனமான பொருட்களை தூக்கும் போது வயிற்றுத் தசைகள் எல்லாம் சுருங்கி விரிந்து செயற்படும். அப்போது வயிற்றில் உள்ள தசைகள் தொடர்ந்து செயல்படுவதால் தொப்பை குறையும்.

தொடர்ந்து ஒரே பயிற்சியை செய்ய வேண்டாம், வாக்கிங்,ரன்னிங், ஸ்விம்மிங்,சைக்கிளிங் என்று மாற்றி மாற்றி செய்து வாருங்கள்.

தூக்கம் :

சராசரியாக நாம் 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். உடல் எடை அதிகரிக்க 32 சதவீதக் காரணம் சரியான தூக்கம் இல்லாதது தான். இரவு நேரத்தில் மின்னியல் பொருட்களின் பயன்பாட்டை தவிர்த்திடுங்கள். இரவு நேர தூக்கத்தை சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

சோடா :

குளிர்பானங்கள்,சோடா, போன்றவற்றை தொடர்ந்து குடித்துக் கொண்டிருக்கிறீர்களா என்று யோசியுங்கள். அதில் செயற்கை நிறமூட்டீகள் மற்றும் சர்க்கரை மட்டுமே அதிகளவு கலந்திருப்பதால் அவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள். தண்ணீருக்கு பதிலாக கூல் டிரிங்ஸ் வேண்டவே வேண்டாம் . தண்ணீர் குடிக்க முடியவில்லை என்றால் அதில் லெமன் அல்லது புதினா போட்டு குடிக்கலாம்.

உணவுகளில் அதிகளவு உப்பு இருந்தால், அவை உடலில் உள்ள நீர்ச்சத்தை குறைத்துவிடும். ஒரு நாளைக்கு 2,300 மில்லி கிராம் சோடியம் எடுத்தால் போதுமானது ஆனால் பெரும்பாலானோர் அதிகப்படியாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். உணவுகளில் குறைவான உப்பை சேர்க்கவும்.

மன அழுத்தம் :

எப்போதும் எதையாவது ஒன்றை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் எடையில் அதன் வீரியம் தெரியும். கவனத்தை திசை திருப்பும் வகையில் புதிய வேலைகளை, பொழுது போக்குகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். யோகா பயிற்சி செய்யலாம். நீண்ட நேரம் ஒரேயிடத்தில் இருந்தால் சற்று வெளியே சென்று இளைப்பாறிவிட்டு வாருங்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இருங்கள்.

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *