மனிதனுக்கு  ஏனிந்தப் பேராசை ?

மனிதனுக்கு ஏனிந்தப் பேராசை ?

24 views
0

இன்னொன்றைக் கொன்று அதில்  வரும் வருமானத்தில்  நீங்கள் எப்படி ஜாலியாக வாழமுடியும் ? கொன்றால் நன்று என்று , வாய் பேசத் தெரியாத இந்த நாலுகால் விலங்கினங்களை எப்படி உங்களால் கொள்ள முடிகின்றது ? சம்பாதிக்க வந்தாயிற்று. இதிலென்ன குற்றம்  என்கிறீர்களா ?

அநியாயமாக  ஆனைகளைக் கொள்வது நின்றபாடாக இல்லை . களவில் ஆணைகளை வேட்டையாடுவது தொடர்ந்தபடிதான் இருக்கின்றது

சுமாராக 750,000பவுண்ட்ஸ் பெறுமதியான ஆனைத் தந்தங்களும் , பங்கோலின் எனப்படும் மிருகத்தின் தோலும் கோலாலம்பூர் விமான நிலையத்தில்  சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

.தந்தங்களின் பெறுமதி 275,500 ரிங்கட்ஸ்-அதாவது   48500 பவுண்ட்ஸ் தொகை என்று கணக்கிடுள்ளார்கள் .இது எமிரேட்ஸின் எட்டிஹாத் விமானமொன்றின் மூலம் நைஜீரியாவில் இருந்து அபுதாபி வழியாக கொண்டுவரப்பட்டபோதே , கடந்த ஞாயிறன்று பிடிபட்டதாக ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதே நாளில் 687,709 பவுண்ட்ஸ் பெறுமதியான 300கிலோ எடை கொண்ட பன்கொலின் ( pangolin )மிருகங்களின்  தோல்கள் விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளன . இது எத்தியோப்பியன் விமானம் ஒன்றின் மூலமாக கொங்கோ குடியரசிலிருந்து  கொண்டுவரப்பட்டுள்ளது . இந்த இரண்டுமே விமான நிலையத்தின் களஞ்சிய அறையில் பொய்யான முகவரிக்கு அனுப்பபட்டுள்ளன

பன்கொலின்( pangolin )என்பது ஆமடில்லோ (armadillo) என்ற மிருகத்தின் தோற்றத்தைக் கொண்டிருப்பதோடு , உலகில் மிக அதிகமாக வேட்டையாடப்படும் மிருகங்களில் ஒன்றாக இருக்கின்றது .கறுப்புச் சந்தையில் விற்பனையாகும் இத் தோல்கள் நோய்களைக் குணமாக்கும் மருத்துவக் குணம் கொண்டது என்று சொல்லப்படுகின்றது .

காட்டு மிருகங்களின் கொம்புகள் தோல்கள் போன்றவை அடிக்கடி கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிடிபட்டு வருவதாகவும் , விமான நிலைய அதிகாரிகள் சிலருக்கு இதில் பங்கு இருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

நாளாந்தம் தந்தங்களுக்காக ஆபிரிக்காவில்  55யானைகள் களவில் கொல்லப்பட்டு வருவதாக சந்தேகிக்கப்படுவது , இங்கே குறிபிடத்தக்கது.

இந்த வெறி , பேராசை தொடருமானால் நாளையை தலைமுறைக்கு , கரும்பலகையில் யானைப் படத்தை வரைந்து , முன்னொரு காலத்திலே … என்று கதை சொல்லும் நிலைதான் வரும் ..

12.08.17

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *