மலமும் நலமாகலாம்

9 views
0

ஆசை ஆசையாய் நமது நாக்கு பலதையும் சுவைக்கிறது . இனிப்பு , புளிப்பு , காரம் என்று பலவற்றை நாம் தினமும் உண்டு வருகிறோம் . உடலுக்கு வேண்டாதது மலம் என்ற பெயரில் கழிவாக வெளியேறுகின்றது . இனிப்போ புளிப்போ கசப்போ , எல்லாம் இந்தக் கழிவைக் கண்டால் மூக்கைப் பிடித்துக் கொண்டு தூர ஓடுகிறோம் . அந்த அளவுக்கு இதன் துர்நாற்றம் நம்மை விரட்டி அடிக்கின்றது ..

ஆனால் ஆபிரிக்காவின் கென்யா , நாறும் பொருளை நலமான ஒன்றாக்குவதில் வெற்றி கண்டுள்ளது  . எதையும் வீணாக்காதீர்கள் என்று இவர்கள் சொல்வது கேட்க நன்றாகத்தான் இருக்கின்றது . வெறும் போதனையாக இல்லாமல் அதைச் செயல்முறையிலும் நடைமுறைப்படுத்துவது இன்னும் நன்றாகத்தான் இருக்கின்றது

கென்யாவில் உள்ள ஒரு நிறுவனம் , மனித கழிவுகளைச் சேகரித்து அதை எரிபொருளாக உற்பத்தி செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன . “எதையும் வீணாக்காதீர்” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் , இந்தியாவில் சாணத்தைக் காய வைத்து அதை எரிபொருளாக பயன்படுத்துவதுபோல , இந்த நிறுவனமும் மனித மலத்தை பயனுள்ளதாக்குவதில் இறங்கி , வெற்றியும் கண்டுள்ளது  .

முதலில் மனித கழிவுகளைக் காயவிட்டு  அதனுடன் மரத்தூளைக் கலந்து , பின்பு கடும் வெப்பநிலைக்கு அதாவது 300பாகை செண்டிகிரேட்டுக்கு  அதை உட்படுத்தி , முடிவில் , இயந்திரங்கள் மூலம் இவை பந்துகளாக்கப்படுகின்றன. இந்தப் பந்துகள் மனித பாவனைக்கு விறகாக மாறி விடுகின்றன. .

கிலோக் கணக்கில் விற்கப்படும்  இந்த மலப் பந்துகள் நாற்றம் அடிக்காதா என்று நீங்கள் கேட்பது நியாயமான ஒரு கேள்வி !  இயந்திரங்கள் இந்த வேலையைச் செய்து விடுகின்றன  இதன் நாற்றமும், சுகாதாரக் கேடு விளைவிக்கும் கிருமிகளும் இரசாயணப் பொருட்களின் கலவையில் அகற்றப்பட்ட பந்துகளாகவே, இவை விற்பனைக்கு வருகின்றன .

மனித கழிவுடன் வேண்டப்படாத ஒன்று இருக்கின்றது என்று நம்பும் உள்ளூர்வாசிகளை   அப்படி ஒன்றுமில்லை . சமையலுக்கு உகந்த பொருள் இது என்று திருப்திப்படுத்த, இந்த நிறுவன அதிகாரிகள்  ஆரம்பத்தில் பகீரத பிரயத்தனம் எடுத்துளார்கள்.  .மெல்ல மெல்ல வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது . இங்குள்ள அடுப்படிகள் பலவற்றில் இந்தப் பந்துகள் எரிக்கப்பட்டு , பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளபபடத் தொடங்கி உள்ளன . இந்த எரிபொருள் சுற்றுப் புறச்சூழலை தூய்மைப்படுத்தவும் உதவுவதால் , இது பரவலாக எல்லோராலும் வரவேற்கக்கூடிய ஒன்றாக மாறி வருகின்றது .

கழிவுகள் அழிவுகளுக்கு உரியவை அல்ல என்று ஒரு பாடத்தை நாம் இதிலிருந்து கற்றுக்கொள்ளலாமோ ?

14.08.17

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *