கரங்களைக் கழுவுவோம் , பிணிகளைக் களைவோம்

கரங்களைக் கழுவுவோம் , பிணிகளைக் களைவோம்

10 views
0

ஒருவரைக் கைகழுவி விடுதல் கடினமானதல்ல . ஆனால் மீண்டும் அந்த உறவைக் கட்டி எழுப்புவது அப்படியொன்றும் சுலபமானதல்ல . கைகளைக் கழுவாமல் சாப்பிடுவது அப்படி ஒன்றும் சிரமமானதல்ல . ஆனால் அதனால் வரும் நோய்களுக்கு முகம் கொடுப்பதும் சுகமானதல்ல என்பதையும் மறந்து விடாதீர்கள் .

எனவே கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பது என்பது மிக முக்கியம் .“கைகளைச் சரியாகக் கழுவாமல் சாப்பிடுவதால் உண்டாகும் வயிற்றுப்போக்கால் (Diarrhoea), ஆண்டுக்கு பல  லட்சம் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்” என்கிறது உலகச் சுகாதார அமைப்பு. `குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் வயிற்றுப்போக்கு, ஜலதோஷம், வாந்தி, மயக்கம், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம் அவர்கள் கைகளை ஒழுங்காகச் சுத்தம் செய்யாமல் இருப்பதே’ என்கிறார்கள் மருத்துவர்கள். எனவே, குழந்தைகளுக்கு நன்கு சுத்தமாகக் கைகழுவும் பழக்கத்தைக் கற்றுத்தரவேண்டியதும் அதை அவர்களைக் கடைப்பிடிக்கும்படிச் செய்யவேண்டியதும் மிக அவசியம். அதே நேரத்தில் கட்டாயப்படுத்தி அந்தப் பழக்கத்தைக் கொண்டு வருவது தவறு. சில எளிய வழிமுறைகள் மூலம் கற்றுத்தரலாம்; அவற்றைக் குழந்தைகளைக் கடைப்பிடிக்கச் செய்யலாம்; அவர்களின் ஆரோக்கியம் காக்கலாம்.

கைகழுவும் பழக்கத்தை நீங்கள் முதலில் கடைப்பிடியுங்கள்; குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருங்கள். பெரியவர்கள் நாம் செய்வதைப் பார்த்துத்தானே அவர்களும் செய்வார்கள் ?எனவே கைகழுவும் விடயத்தில் நாம் முன்மாதிரியாக இருப்பது மிகமிக அவசியம்.   கைகழுவுவதால் கிருமித்தொற்றிலிருந்து தப்பிக்கமுடியும் என்பதையும்  அது ஆரோக்கியத்துக்கு அடிப்படை என்பதையும் புரிய வையுங்கள்.

20 விநாடிகளுக்கு நன்றாகக் கைகளைக் கழுவ வேண்டும்  பிறகு ஈரமின்றித் துடைத்துக்கொள்ளவும் சொல்லிக்கொடுங்கள். கை கழுவாததால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்கவும். சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும், வளர்ப்புப்பிராணிகளைத் தொட்டிருந்தாலும், இருமல், தும்மல் வந்தவுடனும், மூக்கில் கை வைத்திருந்தாலும உடனே  கைகழுவ வேண்டும் எனக் கற்றுக்கொடுங்கள்.
கைகளைக் கழுவத் தண்ணீரும் சவர்க்காரமும்  கிடைக்காதபோது, ஆன்டி பாக்டீரியல் சோப்புகள், கிருமி நாசினிகள் போன்றவை எளிதாகக் கிடைக்கும்படி வைத்திருங்கள்.

கற்கும்போது கசப்பாகத்தான் இருக்கும் . வெறுப்பாகவும் இருக்கும் . ஆனால் அதையே ஒரு புரிதலுடன் விரும்பிச் செய்யும் . இந்தக் கசப்பும் வெறுப்பும் ஓடி ஒளிந்து விடும் .சுத்தம் சுகம் தரும் என்று சும்மாவா முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள் ?

அம்மா அப்பா தினம்போல சரவதேச கைகழுவுதல் தினமும் இருக்கிறது

அந்த சர்வதேச கைகழுவுதல் தினம் ஐப்பசி மாதம் 15 ம் திகதி வருடம்தோறும் இலங்கையிலும் பல நாடுகளிலும் அனுசரிக்கபட்டு வருகின்றது.

25.07

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *