பலரும் தேடும் இஞ்சி -ஓர் அற்புத ஔடதம் இது

பலரும் தேடும் இஞ்சி -ஓர் அற்புத ஔடதம் இது

11 views
0

இன்று நாம் சந்தைக்கு போனால் 1000 ரூபாய் கொடுத்தால்தான் ஒரு கிலோ இஞ்சியை வாங்க முடியும் .அந்த அளவுக்கு இஞ்சியின் விலை நமது சந்திகளில் எகிறிக் குதித்துள்ளது .அப்படி என்னதான் இருக்கின்றது இந்த விலை கொடுத்து வாங்க என்று பலர் கேட்கக் கூடும் . அப்படி என்னதான் இல்லை என்று நாம் மாறிக் கேட்க வேண்டி இருக்கின்றது.

இஞ்சிக்கு எரிப்பு கொண்டாட்டம், எலுமிச்சம்பழத்துக்குப் புளிப்பு  கொண்டாட்டம் என்பது காவடி சிந்து பாடல். உடம்பு எரிந்தால் அது இஞ்சி . புளித்தால் அது எலுமிச்சை .

நாம் உண்ணும் உணவில், இஞ்சியை சேர்த்துக் கொள்வதால், உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்து, கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால், இஞ்சிச்  சாறில், சிறிது உப்பு கலந்து பருகினால், நிவாரணம் கிடைக்கும்.  அட அப்படியா என்று வாயைப் பிளக்க வேண்டாம் . இஞ்சி ஒரு அற்புதமான ஔடதம். இன்னும் பல சொல்ல இருக்கிறது

பசி எடுப்பதில்  உங்களுக்கு தொந்தரவு இருக்கிற? கவலயே வேண்டாம் . இஞ்சியுடன், கொத்தமல்லி துவையல் அரைத்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஜலதோஷம் பிடித்தால் இஞ்சி கஷாயம் போட்டு குடித்தால் குணமாகும்.. தொண்டைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு, அருமருந்தாகவும் இது  விளங்குகிறது.
இதைக் கிரமமாக சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். இதய அடைப்பை நீக்கும். இரத்த அழுத்தம் வராமல் தடுக்கும். சளித்தொல்லையை நீக்கும்; இஞ்சியை, தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில், விட்டமின் ஏ, சி பி6 பி12 கால்சியம், பொட்டாசியம், சோடியம் இரும்பு சத்து ஆகியவை அடங்கியுள்ளன. நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக வைக்கவும் உதவுகிறது.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா ? இஞ்சிப் புராணம் இன்னும் முடியவில்லை.

உடலில், ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில், இஞ்சி சிறந்து விளங்குகிறது. சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத் தலைவலி நீங்கும். நீரில், சிறிது இஞ்சியை தட்டிப்போட்டு, கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்ந்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
ஜீரணத்துக்கு உதவும்: பல் வலி இருக்கும் போது, இஞ்சித்  துண்டை, ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். குமட்டல், வாந்தி வருவதை தடுக்கும். காலையில் ஏற்படும் சோர்வையும் தடுக்கும். துரித உணவுகளால், செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டால், அதை சரிசெய்ய, இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வருவது நல்ல பலனைத் தரும்.

ஆஸ்துமா நோயாளிகள் தினமும் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர, ஆஸ்துமா பிரச்னையில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக, நுரையீரலுக்குள் செல்லும் இரத்த நாளங்கள், புத்துணர்வு பெற்று, இரத்த ஓட்டம் சீராகி, சுவாசப் பிரச்சினைகள் நீங்கும். இஞ்சி, தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, , வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும்.
இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்தைக் காண தொடர்ந்து, 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும். அதே சமயம் உணவுக் கட்டுப்பாடும் அவசியம்.
உற்சாகத்துக்கு உத்தரவாதம்: தேன் கலந்த இஞ்சி சாறு, புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து விடும். இஞ்சிச் சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து, ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர ஆரம்ப கால ஆஸ்துமா, இருமல் குணமாகும்.

இது போதுமா அல்லது இன்னும் கொஞ்சம்  வேண்டுமா ? இனியும்  அட இஞ்சிதானே என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள் . கைகண்ட ஔடதம் அது !

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *