கோப்பிக்கு கொட்டும் பணம்

கோப்பிக்கு கொட்டும் பணம்

10 views
0

கோப்பிக்கு கொட்டும் பணம்

நாம் தேநீர் பிரியர் ! ஆனால் வெள்ளைக்காரனுக்கும் அராபியர்களுக்கும் கோப்பி மீது காதல் ! அடிக்கடி விரும்பிக் குடிப்பார்கள் . ஒரு கையில் சிகரெட் மறுகையில் கோப்பி .இது அவர்கள் ஸ்டைல் . வைன் பருகுவதைப் போல வெகுவாக சுவைத்துப் பருகுவது இவர்கள் பழக்கம் .

சரித்திரம் படைத்த விலையில் அதாவது 100 இறாத்தல் எடை கொண்ட கோப்பிக் கொட்டையை, 37,000 பவுண்ட்ஸ் தொகைக்கு( சுமாராக 70 இலட்சம் ரூபாய் )  இணையஏல விற்பனையில் வாங்கப்பட்டுள்ளது  என்றால் நீங்கள் நம்பத் தயாரா ?  இதை வாங்கியவர் கோப்பி விடயத்தில் பெரும்  வல்லுனரான ஜேசன் கியு என்பவர்தான் ! மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் விளைந்த அதிஉயர் தரம் கொண்ட கோப்பிக் கொட்டைகள் இது என்கிறார்கள் . அதுவும் இணைய ஏலத்தில் , பெரும் போட்டியின் நடுவில்தான் இதை ஜேசனால் வாங்க முடிந்துள்ளது .

இதுகால வரை ஒரு இறாத்தல் 216 பவுண்ட்ஸ் என்ற தொகைக்கு வாங்கிய கோப்பிக்கொட்டையின் விலையே உலக சாதனையாக இருந்து வந்துள்ளது . இப்பொழுது அது முறியடிக்கப்பட்டு , இறாத்தல் 371 பவுண்ட்ஸ் என்ற  விலை , புதிய உலக சாதனையாகி உள்ளது .

இந்தக் கோப்பிக் கொட்டையுடன் ஜேசன் சிட்னி நகரின் வடக்கில் உள்ள கடற்கரைப் பிராந்தியம் ஒன்றில் கோப்பி சுவைக்கும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் . ஒருவர் ஒரு தடவை பருக 34 பவுண்ட்ஸ் அதாவது சுமார் 6000ரூபாய் செலவிட வேண்டும்.

நல்ல தரமான வைன் பருக பெரிய தொகை செலவழிப்பதுபோல்தான் இதுவும் என்கிறார் , இந்தக் கோப்பியைச் சுவைத்த ஒரு கோப்பிப் பிரியர் , ஜேசானுடன் இணையத்தில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தில் வந்தவருக்கு , 40 இறாத்தல் கொட்டையை  விற்றுள்ளார் . மிகுதி 60இறாத்தல் , இந்த நிகழ்வில் கோப்பியாக விலை போயிருக்கின்றது .

ஆசைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் ! ஏற்றுக் கொள்கிறீர்களா ?

 

மீண்டும் திரைக்கு வருகிறார் ஜேம்ஸ் பொன்ட்(James Bond) டானியல் கிரெய்க்

பொதுவாகவே காதல் கிளுகிளுப்பு ,  வாயைப் பிளக்க வைக்கும் நவீன தற்பாதுகாப்பு மின்னியல் கருவிகள் . மின்னல் வேக மோதல்கள், மாயாஜாலம் செய்யும் கதாநாயகனின் அசத்தல் கார்  என்று சகலமும் கலந்த பொன்ட் திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகின்றன. நீங்களும் நானும் அதற்கு விதிவிலக்கல்ல

ஹோலிவூட் திரைப்பட உலகின் அட்டகாச ஜேம்ஸ் பொன்ட்(James Bond) நடிகர் டானியல் கிரெய்க் இன்னொரு திரைப்படத்தில்,  தான் நடிக்கப் போவது பற்றி தீர்மானமாகக் கூறி உள்ளது பரபரப்பான செய்தியாகி இருக்கின்றது

007 என்ற இலக்கத்துடன் வரும் பிரிட்டனின் உளவாளியாக , இவர் 25வது பொன்ட் படத்தில் நடிக்கப் போவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இன்னமும் பெயர் இடப்படாத இந்தத் திரைப்படத்தில் , இவர் நடித்தால் , இது அவரது ஐந்தாவது பொன்ட் படமாக அமையும். இவர் வயது 49.

இவர் ஏற்கனவே நடித்த நான்கு திரைப்படங்களும் நல்ல வசூல் சாதனை செய்துள்ளன . 880மில்லியன் டாலர் வசூல் தொகை கிடைத்ததாகச் சொல்லப்படுகின்றது .தற்பொழுது பொன்ட் 25 என்று சுருக்கமாகக் கூறப்படும் இந்தத் திரைப்படம் 2019ம் ஆண்டு நவம்பர்  8 அன்று திரையிடப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

இதுவே தனது இறுதிப் படம் என்கிறார் . யார் கண்டது ? பேதலிப்பது மனம். ஆறாவது படத்திலும் இவர் தலைகாட்டக்கூடும்

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *