டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உயிர் கொடுத்துள்ள , இரு பெரிய மோதல்கள்

12 views
0

எல்லாமே வேகம் என்ற நிலையில் , ஆமைவேகத்தில் நகரும் டெஸ்ட் போட்டிகள் , தமது சுவாரஸ்ஸியத்தை இழந்து விட்டன என்று சமீபத்தில் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன ,இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மோதல்கள் மூன்று,  நான்கு நாட்களில் நடந்து முடிந்த போது, டெஸ்ட் போட்டிகள் “உயிரிழந்து விட்டன” என்றே எல்லோரும் பரிதாபப் பார்வை பார்த்தார்கள் . இலங்கை அணிக்கு 5நாட்கள் விளையாடும் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க , இந்த டெஸ்ட் போட்டிகளின் மவுசு நனறாகவே குறைந்து விட்டது என்று ஒரு சாரார் விவாதித்தனர் . இனிவரும் காலங்களில் ஒரு நாள் ஆட்டங்களே விரும்பிப் பார்க்கும் ஆட்டங்களாகப் போகின்றன என்பது பரவலான கருத்தாக இருந்தது .

ஆனால் இதையெல்லாம் உடைப்பதுபோல , அடுத்தடுத்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலைப் பெரிதும் தூண்டி விட்டுள்ளன. இங்கிலாந்திடம் மேற்கிந்திய அணி படு தோல்வி அடைந்தபோதும் , இலங்கை அணி இந்தியாவிடம் வரிசையாக வாங்கிக் கட்டிக்கொண்ட போதும் , 5நாள் டெஸ்ட் போட்டிகள் பார்த்து ரசிக்க வந்தவர்கள் நன்றாகவே ஏமாந்து போனார்கள் . இதுவும் ஒரு கிரிக்கெட்டா என்று விளையாட்டை நோக்கியவர்கள் அதிகம் .

ஆனால் இதையெல்லாம் அள்ளி குப்பைத் தொட்டிக்குள் போடுவதுபோல , இங்கிலாந்து-மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு நாள் ஆட்டத்திற்கு குறையாத வேகம் இருந்தது .. சுவாரஸ்ஸியம் இருந்தது , “நான் சாகவில்லை” என்று டெஸ்ட் போட்டி உரத்த குரலில் சொல்லிவிட்டுப் போயுள்ளது .

சூடோடு சூடாக பங்களதேஷ் அணியும் அவுஸ்திரேலிய அணியும்  ஒன்றுடன் ஒன்று மோதிய டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்கு மேலதிக விருந்தளித்தது, இதிலும் திடீர் திருப்பங்களுக்கு குறைச்சல் இல்லை . ஒரு நாள்  ஆட்டத்தின் வேகமும் இருந்தது.

ஒரு பக்க ஆட்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் , இரு அணிகளும் வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கி , நமக்கு விருந்தளித்துள்ளன.

இனியும் தொடருமா இந்த விருந்துகள் ?

01.09.17

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *