காட்டிக்கொடுக்கும் கமராக்கள்

காட்டிக்கொடுக்கும் கமராக்கள்

9 views
0

காலத்துக்கு ஏற்ற கோலம் என்பார்கள் . இன்றைய நாட்களில் பலரது வருமானம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளால் கணிசமான அளவு உயர்ந்துள்ளது . பணம் சேர , அது பறிபோய்விடுமோ என்ற பயமும் வந்து சேர்கின்றது . எனவே பாதுகாப்பும் அவசியப்படுகின்றது .

இந்தப் பாதுகாப்பு கருதி , வீடுகளில் , அலுவலகங்கக்ளில்,  தொழில்சாலைகளில் என்று  பல இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்துவது பெருகி வருகின்றது . சமீபத்தில் , கிரிக்கெட் போட்டிகளின்போது ரசிகர்கள் கலாட்டா செய்கிறார்கள் என்று கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன .

தொழிற்சாலைகள், வங்கிகள், பிரம்மாண்டமான கடைகள், ஏ.ரீ.எம். மையம் ஆகியவைதான் சிசிடிவி கமராவின்  CCTV camera களங்கள் என்பதைத் தாண்டி வீடுகளிலும், வீட்டைச் சுற்றிலும் சிசிடிவி கமரா பொருத்துவது என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவலாகிவருகிறது. எனவே இதுபற்றித் தெரிந்துகொள்வதும் தெளிவுகொள்வதும் நல்லது.

சிசிடிவி கமரா பல வடிவங்களிலும் அளவுகளிலும் தயாரிக்கப்படுகின்றது . எந்த அளவு துல்லியமான படங்களை அவற்றால் எடுக்க முடியும்,  ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு படங்களை எடுத்துத் தள்ளும், அந்த கமராக்களால் தங்கள் கோணங்களை மாற்றி நகர்ந்தபடி படமெடுக்க முடியுமா என்பதையெல்லாம் பொறுத்துததான் சிசிடிவி கமராவின் விலை மாறுபடும்.

குளோஸ்ட் சர்க்யூட் டி.வி.  Closed Circuit TV என்பதுதான் சிசிடிவி என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் படங்களை மட்டுமே இவை உள்வாங்கிக்கொள்ளும். சம்பந்தப்பட்டவர்கள் பேசுவதெல்லாம் பதிவாகாது (சில குற்ற வழக்குகளில் சிசிடிவியில் பதிவானவர்களின் உதட்டசைவைக் கொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள செவித்திறனற்ற – பேச்சுத்திறனற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பவர்களின் உதவி கோரப்படுவதுண்டு).

வழக்கமான டி.வி. என்பது ஒளிப்பதிவு சிக்னல்களைப் பொது மக்களுக்கு அளிக்கும். ஆனால், சிசிடிவி அப்படியல்ல. அது closed circuit.  சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமே அவற்றைப் பார்க்க முடியும். சின்னச் சின்ன கடைகளிலெல்லாம் இப்போது சிசிடிவி கமராவைக் காண முடிகிறது. பிற தளங்களிலுள்ள ஊழியர்கள் சரியாக வேலை செய்கிறார்களா,  வாடிக்கையாளர்களுக்கு ஒழுங்கான விதத்தில் சேவை அளிக்கப்படுகிறதா என்பதையெல்லாம் இருந்த இடத்திலிருந்தே கடையின் முதலாளியோ நிர்வாகியோ கவனிக்க முடியும்.

வெளிப்புறச் சுவர்களில் பொருத்திவிட்டால் வெளி நடமாட்டமும் தெரியும். நாம் கடையைப் பூட்டிக்கொண்டு சென்ற பிறகும்கூட வெளிப்புறங்களில் நடைபெறும் திருட்டு முயற்சிகளை இவை வெளிப்படுத்துகின்றன.

பிரிட்டனில்தான் உலகில் வேறெந்த நாட்டையும்விட இவ்வளவு பேருக்கு ஒரு சிசிடிவி கமரா என்கிற விகிதம் அதிகம் உள்ளதாம். சிசிடிவி கமராக்கள் பொதுவாகவே குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன என்கிறார்கள். இதுபோன்ற கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களைப் பல திருடர்கள் தவிர்க்கிறார்கள். திருடர்களைப் பிடிப்பதற்கு உதவுவதுடன் திருடர்களைத் தவிர்க்கவும் சிசிடிவி கேமராக்கள் உதவுகின்றன.

இணையத்துடன் இணைந்து செயல்படும் சிசிடிவி கேமராக்களும் உண்டு. ஃப்ளோரிடாவைச் சேர்ந்த ஜென்னி தாமஸ் என்ற பெண் தனது வீட்டில் திருட்டு நடப்பதைத் தனது அலுவலகத்திலிருந்தே பார்த்து காவல்துறையைத் தொடர்பு கொள்ள, அந்தத் திருடர்கள் பிடிபட்ட சம்பவம் நிகழ்ந்தது..

உலகம் வளர்கிறது . நாமும் வளர வேண்டாமா ? ஆனால் பணபலம் இருந்தால்தான் எதையும் சாதிக்க முடியும் .

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *