உங்கள் ஆன்லைன் நண்பன் அமேசன்

உங்கள் ஆன்லைன் நண்பன் அமேசன்

8 views
0

கனடாவில் தமது இரண்டாவது தலைமையகத்தை நிறுவத் திட்டமிடும் இணைய விற்பனை நிறுவனமான அமேசனுக்கு , டொரோண்டோவே முதன்மையான விண்ணப்பதாரி என்று  நம்புகிறார்கள் .

இந்த இராட்சத இணைய விற்பனை நிறுவனம் , தனது இரண்டாவது தலைமையகத்தை வட அமெரிக்காவில் நிறுவப் போவதாக அறிவித்திருந்தது . 5பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் இது தன்னுடைய இரண்டாவது தலைமையகமாக இருக்கும் என்றும் HQ2 என்றே இது அழைக்கப்படுமென, இந்த நிறுவனம் கூறி இருக்கின்றது .அமெரிக்காவின் வாஷிங்டனில்   உள்ள தனது தலைமையகம் போன்ற தரத்திலேயே இதுவும் இயங்கும் என்று சொல்லும் அமேசன் , 50,000 புதிய வேலை வாய்ப்புகளையும் இது அளிக்கும் என்று கூறி இருக்கின்றது . கனடிய பொருளாதாரத்தில் மில்லியன் கணக்கான டொலர் தொகை புரள்வதையும் ,  இது கொண்டுவருமென இவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட ஜனத்தொகை கொண்ட நகரையே தாம் விரும்புவதாகவும் , வர்த்தகரீதியாக நேசஉறவு கொண்ட ஓர் இடமாக அது இருக்க வேண்டும் என்றும் தாம் தேர்வு செய்யும் நகரம் இருக்க விரும்புவதாக அமேசன் பிரஸ்தாபித்துள்ளது .

தமக்கு முதலில் 2019அளவில் , 500,000 சதுர அடி நிலம் தேவை என்று கூறும் அமேசன் , 2027 இல்  தமக்கு தேவைப்படுவது 8மில்லியன் சதுர அடி என்றும் கோடிட்டுக் காட்டியுள்ளது

23வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த ஆன்லைன் விற்பனை நிறுவனம்,  இன்று 341,400ஊழியர்களுடன் பிரமாண்டமாக  உயர்ந்து நிற்கின்றது

08.09

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *