மிளகு உங்கள் சிநேகிதன் –ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிகோலுவது

மிளகு உங்கள் சிநேகிதன் –ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிகோலுவது

18 views
0

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்த மருத்துவ மொழி.`பைப்பர் நிக்ரம்’ (Piper nigrum) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட மிளகு, படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரம். சாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என சில வகைகளும் உண்டு.

உணவுப் பயன்பாட்டில் மிளகாய் வருவதற்குமுன், நம் நாட்டில் காரச்சுவைக்கு மிளகைப் பயன்படுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள். நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. அஞ்சறைப் பெட்டிகளில் தவறாமல் இடம்பிடிக்கும் மிளகு… ரசம், சாம்பார், புளிக்குழம்பு உள்ளிட்ட சைவ உணவுகளிலும், பல அசைவ உணவுகளி்லும் சேர்க்கப்படுகிறது. இது வெறுமனே உணவில் சுவை சேர்ப்பதோடு நின்றுவிடாமல் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.

நமது சமையலில் தினமும் ஒரேயொரு தேக்கரண்டி மிளகுத்தூளை சேர்ப்பது மிகவும் ஆரோக்கியமானதாகும். பசும்பாலுடன் சம அளவு தண்ணீர் சேர்த்துத் தோலுரித்த 10 பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்து மீண்டும் ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து கீழே இறக்கி நன்றாகக் கடைந்து இரவு உறங்கப்போவதற்குமுன் குடித்துவந்தால் நெஞ்சுச்சளி விலகுவதோடு ஜலதோஷமும் மூக்கடைப்பும் விலகும். மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால்  நெஞ்சுச் சளிக் கட்டுதல் நீங்கும். ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.

மிளகுத்தூளுடன் வெங்காயம், உப்பு சேர்த்துத் தலையில் புழுவெட்டு உள்ள இடங்களில் பூசிவந்தால் முடி வளரும். முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும். பல்வலி, சொத்தைப்பல், ஈறுவலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகளுக்கு மிளகுத்தூளும் உப்புத்தூளும் சேர்த்துப் பல் துலக்கினால் பலன் கிடைக்கும்.

வரலாற்று ஆசிரியர்கள் கூற்றுப்படி கிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு. மிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்த்துக்கல் நாட்டில் நடைமுறையில் இருந்தது. நம் நாட்டில் அப்படியெல்லாம் தண்டனை இல்லை . தண்டனை இல்லை என்பதால், மிளகை வீணடிக்காதீர்கள். ஆரோக்கியமான உடம்பே உங்கள் பெரும் செல்வம் . மிளகை யங்கள் மித்திரனாக்கிக் கொள்ளுங்கள் . வந்து சேரும் அற்புத வாழ்வு !

08.09

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *