தொந்தி தரும் தொல்லைகள்

தொந்தி தரும் தொல்லைகள்

5 views
0

அன்றாடம் அணியும் ஆடைகள் இறுக்கமாகி விடுவதுடன் , நம் இஸ்டத்துக்கு குனிந்து நிமிர விடாமல் தடுப்பதுதான் இந்தத் தொந்தி . . அடி வயிற்றில் சேரும் கொழுப்பு மகா மோசமான ஒன்று . எமது ஆரோக்கியத்தை அழிக்கவென்று வரிந்து கட்டிக்கொண்டு நிற்பதுதான் இந்தத் தொந்தி . பொல்லாத நீரழிவு நோய் வருவதற்கு தொந்தி ஒரு காரணியாகி விடுகின்றது

மது அருந்துவதே கூடாத ஒரு விடயம் , அதில் கூடுதல் குறைவு என்று இல்லை . என்றாலும் குறைவான அளவு மது அருந்துவதில் சில நன்மைகள் உள்ளன என்று சொல்லப்பட்டாலும் , அதிகம் அருந்துவது  நல்லதல்ல. இதே மதுவை  அதிகம் அருந்தினால் , வயிற்றுப் பகுதியில் சதை கூடும் என்று  கண்டறியப்பட்டுள்ளது.

நார்ச்சத்துள்ள உணவு வகைகளை அதிகம் உண்ணுங்கள் . கரையக்கூடிய நார்ச்சத்துள்ள உணவுகள் செரிமான மண்டலத்தின் வழியே குறைந்த நேரத்தில் பயணித்து முடிக்கின்றன, இதனால் வயிறு நிறைந்த உணர்வும் விரைவில் வந்துவிடுகிறது. அதிகமாக சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை குறைகிறது. கரையக்கூடிய நார்ச்சத்தானது, பல ஆண்டுகளாகச் சேர்ந்த தொந்திக் கொழுப்பைக் குறைப்பதில் நேரடியாகவே உதவுவதாக ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன..

மன அழுத்தம் உங்கள் பசியைத் தூண்டுகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா ?மன அழுத்தம், கோர்ட்டிசால்(cortisol) எனப்படும் மன அழுத்த ஹார்மோன் உற்பத்தியைத் தூண்டுகிறது, இதற்கும் இரைப்பையின் கொள்ளளவு அதிகரிப்பதற்கும் தொடர்புள்ளது, இது பசியைத் தூண்டுகிறது. இதே தொடர்பு எதிர்த்திசையிலும் சாத்தியம், அதாவது இடுப்புப் பகுதியில் கொழுப்பு அதிகம் இருப்பது உடலில் கோர்ட்டிசால் உற்பத்தியும் அதிகரிக்கிறது. ஆகவே, தொந்திக் கொழுப்பைக் குறைக்க, மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியம், அத்துடன் பிற சாதகமான வழிமுறைகளையும் சேர்த்துக் கடைபிடித்தால் இன்னும் அதிக பலன்கள் கிடைக்கும்.

கார்டியோ பயிற்சிகள், அதாவது ஏரோபிக் பயிற்சிகள் கலோரிகளை எரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்தவை. உடற்பயிற்சியின் கடினத்தன்மை வேறுபடலாம், ஆனால் உடற்பயிற்சி செய்யும் நேர அளவும் எத்தனை முறை உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்ற எண்ணிக்கையும்தான், எவ்வளவு தொந்திக் கொழுப்பு குறைகிறது, எவ்வளவு வேகத்தில் குறைகிறது என்பதைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாசிக்கும்போது கசப்பாக இருக்கலாம் .ஆனால் இனிப்பை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ அந்த அளவுக்கு தொந்தியும் குறையும்

சர்க்கரை ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதல் என்று கருதப்படுகிறது. சர்க்கரையில் பிரக்டோஸ் உள்ளது, இதை கல்லீரலின் மூலம் மட்டுமே வளர்சிதை மாற்றமடையச் செய்ய முடியும். கல்லீரலில் கிளைக்கோஜன் அளவுக்கு அதிகமாகச் சேரும்போது, பிரக்டோசை அது கொழுப்பாக மாற்றி, இடுப்புப் பகுதியில் சேமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சர்க்கரை சேர்த்துத் தயாரிக்கப்படும் பானங்களும் உடல் பருமனுக்குக் காரணமாக உள்ளன.

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *