முதலுக்கே மோசமா ? கலக்கத்தில் பாலியல் தொழிலாளிகள்  

முதலுக்கே மோசமா ? கலக்கத்தில் பாலியல் தொழிலாளிகள்  

5 views
0

இறை தொண்டு செய்பவர்கள் என்ற அர்த்தத்தில் வந்தவர்கள்தான் தேவதாசிகள் . இந்த தேவதாசிகள்தான் மெல்ல மெல்ல இன்னொரு வடிவம் எடுத்து விலைமாதுக்கள் ஆனார்கள் . சில் ஊடகங்கள் வர்ணிப்பதுபோல சதை வியாபாரிகள் ஆனார்கள் . இவர்கள் எல்லோருமே பணம் உழைக்கும் மோகத்தில் தங்கள் உடலை வாடகைக்கு விட்டவர்கள் அல்ல . அவர்களைப் பிடித்தாட்டிய வறுமை , பந்தாடியதால் , இப்படி தங்கள் உடலை தாங்களே ஊனப்படுத்திக் கொண்டவர்கள் ,  சிறுவயதிலேயே சில காமுகர்களின் வெறிக்கு இரையாகி விட்டதால் , தலைக்குமேலே வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்ற விரக்தியில் இத்தத் தொழிலுக்கு வந்தவர்கள் .பெற்றவர்களே விற்று. விலை போன இடத்தில் ஜடமாய் தம்மைத் தினமும் தொலைத்து வரும் அபாக்கியவதிகள் என்று இந்தத் தொழிலுக்கு வந்தவர்களின் சோகக் கதைகள் ஏராளம் .

ஆசிய நாடுகளின் கதை வேறு . மேலைத்தேய நாடுகளின் கதை வேறு . இங்கே சட்டமே அனுமதிக்கிறது . சிவப்பு விளக்குப் பிராந்தியங்கள் இதற்காகவே இயங்குகின்றன. தொலைபேசியில் வீட்டுக்கு அழைத்தும் பசியாறலாம் . இவர்கள் “பாதுகாப்போடு” தொழில் செய்கிறார்களா என்பதில் அரசு விழிப்பாக இருக்கிறது.

இந்த இரவு இராணிகளின் தொழிலுக்கு உலை வைக்குமால் போல் , பெண் ரோபோக்கள் போட்டிக்கு கிளம்பி இருக்கிறார்கள் . ஏனைய தொழில்களுக்கு ஆப்பு வைப்பதுபோல , ரோபோக்கள் இவரகளது அடிமடியிலும் கைவைக்கத் தொடங்கி இருக்கிறார்கள்

உயிருள்ளது போன்ற பெண் ரோபோக்கள் புதிது புதிதாக முளைப்பது , அவர்கள்  தொழிலுக்கு உலை வைத்து விடுமோ என்ற கலக்கத்தை பாலியல் தொழிலாளிகளிடையே ஏற்படுத்தி இருக்கின்றது . , இவை பெரு விலையில் விற்கப்பட்டாலும் , அதை வாங்குபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது . ஒரு பொத்தானை அழுத்தினால்இந்த ரோபோ தன் “திருவிளையாடல்களை” தொடங்கி விடும்  வசதிகள் உள்ளன என்று அறியப்படுகின்றது . ஆங்கிலேய  ஆன்லைன் பத்திரிகையான நியூ ஸ்டாருக்கு ஒரு பாலியல் நட்சத்திரம்  அளித்த பேட்டியில் , “இந்தப் புது வரவு சிவப்பு விளக்குப் பிராந்தியத்தோடு ஒரு புது விளையாட்டை ஆம்பித்துள்ளது “ என்று கூறி இருக்கிறார் . “ஒரு புதுத் தொழில் நுட்பம் சந்தைக்கு வந்துள்ளது . மக்கள் இதை விரும்ப ஆரம்பித்துள்ளார்கள் சந்தையில் பொருட்கள் நிறைய , விலை மலிவாக மாற , ஒவ்வொருவர் வீட்டில் உள்ள ஒன்றாக இது மாறலாம் “ என்று மேலும் கூறியுள்ளார் இந்தப் பெண் .

சமீப காலங்களில் செக்ஸ் ரோபோக்களின்  உற்பத்திகள் அதிகரித்துள்ளன . புதிய புதிய தொழில் நுட்பங்களோடு வருடத்துக்கு வருடம் அறிமுகமாகும் ஐபோன்கள் போல , புதிய புதிய வசதிகளுடன் , ஆண்களைக் குஷிப்படுத்த , புதிய புதிய தொழில் நுட்பங்களுடன் பெண் ரோபோக்களை அறிமுகம் செய்யத் தலைப்பட்டுள்ளார்கள்.

ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் ரோபோக்களையே தேடும் நிலை வருவது நிச்சயம் என்று அவதானிகள் கருதுகிறார்கள் இன்னொரு பாலியல் தொழிலாளி வேறு ஒரு கோணத்தில் இந்தப் பிரச்சினையை நோக்குவதாக கூறி இருக்கிறார் . “இந்தச் செயற்கை நுட்பத்தின் ஆளுமை அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை . உண்மையைச் சொல்லப் போனால் , ஒருவருக்குள்ள வேட்கையை மேலும் தூண்டி  , எங்களிடம் ஆண்கள் ஓடிவர இவை உதவலாம் “என்று இவர் அபிப்பிராயப்பட்டுள்ளார் . அமேசன் 1300பவுண்ட்ஸ் தொகைக்கு , ஆன்லைனில் செக்ஸ் ரோபோக்களை விற்று வருகின்றது.

இன்று ஒருவேளை  எங்களை மிஞ்சிய றோபோக்களா என்று இவர்கள் கேட்கலாம் . ஆனால் அசுர வேகத்தில் இயங்கும் தொலை நுட்பம் இனி  எப்படியான மோகனாம்பிகளை கொண்டு வரப்போகிறது  என்பது படைத்தவனுக்கே வெளிச்சம் .

12.10.17