சோழியன் குடுமி சும்மா ஆடுமா ?

8 views
0

 சோழர்கள் வம்சத்திற்கு சம்மந்தப்பட்டவர்கள் என்பதாலேயே சோழியர் என்ற பட்டம் வந்திருக்கலாம். சோழியன் குடுமி சும்மா ஆடுமா சோழியன் தனக்கு லாபமில்லா எந்த செயலிலும் ஈடுபடமாட்டான் என்று எண்ணக் கூடியாத இருக்கிறது.

ஆனால் இதை மறுக்கும் ஆன்மீகப் பேச்சாளர் சுகி சிவம் “சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள் முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் . இதற்கு சும்மாடு என்று பெயர். ( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.” என்கிறார்.

முதலுக்கே மோசமா ? கலக்கத்தில் பாலியல் தொழிலாளிகள்  

உயிருள்ளது போன்ற பெண் ரோபோக்கள் புதிது புதிதாக முளைப்பது , அவர்கள்  தொழிலுக்கு உலை வைத்து விடுமோ என்ற கலக்கத்தை பாலியல் தொழிலாளிகளிடையே ஏற்படுத்தி இருக்கின்றது . , இவை பெரு விலையில் விற்கப்பட்டாலும் , அதை வாங்குபவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது . ஒரு பொத்தானை அழுத்தினால்இந்த ரோபோ தன் “திருவிளையாடல்களை” தொடங்கி விடும்  வசதிகள் உள்ளன என்று அறியப்படுகின்றது . ஆங்கிலேய  ஆன்லைன் பத்திரிகையான நியூ ஸ்டாருக்கு ஒரு பாலியல் நட்சத்திரம்  அளித்த பேட்டியில் , “இந்தப் புது வரவு சிவப்பு விளக்குப் பிராந்தியத்தோடு ஒரு புது விளையாட்டை ஆம்பித்துள்ளது “ என்று கூறி இருக்கிறார் . “ஒரு புதுத் தொழில் நுட்பம் சந்தைக்கு வந்துள்ளது . மக்கள் இதை விரும்ப ஆரம்பித்துள்ளார்கள் சந்தையில் பொருட்கள் நிறைய , விலை மலிவாக மாற , ஒவ்வொருவர் வீட்டில் உள்ள ஒன்றாக இது மாறலாம் “ என்று மேலும் கூறியுள்ளார் இந்தப் பெண் .

 

சமீப காலங்களில் செச்ஸ் ரோபோக்களின்  உற்பத்திகள் அதிகரித்துள்ளன . புதிய புதிய தொழில் நுட்பங்களோடு வருடத்துக்கு வருடம் அறிமுகமாகும் ஐபோன்கள் போல , புதிய புதிய வசதிகளுடன் , ஆண்களை\க் குஷிப்படுத்த , புதிய புதிய தொழில் நுட்பங்களுடன் பெண் ரோபோக்களை அறிமுகம் செய்யத் தலைப்பட்டுள்ளார்கள்.

ஒரு காலகட்டத்தில் மனிதர்கள் ரோபோக்களையே தேடும் நிலை வருவது நிச்சயம் என்று அவதானிகள் கருதுகிறார்கள் இன்னொரு பாலியல் தொழிலாளி வேறு ஒரு கோணத்தில் இந்தப் பிரச்சினையை நோக்குவதாக கூறி இருக்கிறார் . “இந்தச் செயற்கை நுட்பத்தின் ஆளுமை அச்சுறுத்தும் அளவுக்கு இல்லை . உண்மையைச் சொல்லப் போனால் , ஒருவருக்குள்ள வேட்கையை மேலும் தூண்டி  , எங்களிடம் ஆண்கள் ஓடிவர இவை உதவலாம் “என்று இவர் அபிப்பிராயப்பட்டுள்ளார் . அமேசன் 1300பவுண்ட்ஸ் தொகைக்கு , ஆன்லைனில் செக்ஸ் ரோபோக்களை விற்று வருகின்றார்கள்

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *