ஆடவந்த இடத்தில் ஆளவந்தவர்கள்!

14 views
0

இன்று பலரது அபிமான விளையாட்டாக மாறியிருப்பது கிரிக்கட். அதிலும் தெற்காசிய நாடுகள் கிரிக்கட் பைத்தியம் என்று சொல்லுமளவிற்கு,  இந்த விளையாட்டுடன் ஒன்றிப் போயிருக்கின்றார்கள்.ஒரு போட்டி என்று வந்துவிட்டால்பார்வையாளர் அரங்கம் நிரம்பி வழிவதும்,   ரசிகர்கள் கூச்சல் கும்மாளத்தினால் அரங்கம் அதிர்வதும் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. அதிலும் இந்த ஒருநாள் ஆட்டங்கள் வந்தபின்பு,   இந்த விளையாட்டு நன்றாகவே சூடுபிடித்து விட்டது என்று சொல்வது மிகையான ஒன்றல்ல!

காலத்துக்குக் காலம்  வெவ்வேறு அணிகள் பலம் மிக்கதாகக் காணப்படுவது வழமை. அப்படிப் பார்க்கும்போது. இன்றுஅசுரபலம் பெற்றுள்ள ஓர் அணியாக இந்தியா மாறியிருப்பதை நாம் காண்கிறோம்.. விராத் கோலியின் தலைமையின் கீழ்,  வெற்றி மேல் வெற்றியாகக் குவித்து வரும் இந்திய கிரிக்கட் அணியை எதிர்கொள்ள முடியாமல் ஏனைய அணியினர் திணறுகிறார்கள். பந்து வீச்சிலும்,   துடுப்பாட்டத்திலும் மிகச் சிறந்து விளங்கும் இந்த அணியின் பலம்,   இன்று எந்த அணிக்குமே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.

தனது 32து ஒரு நாள் ஆட்ட சதத்தை, நியூசிலாந்து அணிக்கு எதிராகஇந்திய அணித்தலைவர் விராத் கோலி ஆடி எடுத்ததன் எதிரொலியாக , இவர் உலக  ஒரு நாள் துடு;ப்பாட்டக்காரர்கள் தரப்படுத்தலில் முதலாம் இடத்தைக் கைப்பற்றி இருக்கின்றார். நியூசிலாந்துக்கு எதிராக சமீபத்தில் விளையாடிய மூன்று  மோதல்கள் கொண்ட ஒருநாள் தொடரில்,  263 ஓட்டங்கள் எடுத்து அசத்தியுள்ளார். இதுவரையில் முதலாம் இடத்திலிருந்த தென் ஆபிரிக்க துடு;ப்பாட்ட வீரரான ஏ.பி.டி. வில்லியேர்ஸின் மகுடம் இப்பொழுது கோலியின் தலையில் ஏறியிருக்கின்றது. இப்பொழுது ஐசிசி  தரப்படுத்தலில் கோலிக்கு கிடைத்திருக்கும் 889புள்ளிகள்,  இதுவரையில் எந்த இந்திய அணி வீரரும் எடுத்திராத ஒன்று என்பதை இங்கே கவனித்தாக வேண்டும்.1998இல் இந்தியாவின் இன்னொரு தலைசிறந்த துடு;ப்பாட்ட வீரரான சச்சின் டென்டுல்காருக்கு கிடைத்த அதிகபட்ச புள்ளிகள் 887!

 

28 வயதான கோலி இப்பொழுதும் விளையாடிக் கொண்டிருப்பவர். இன்னும் பல வருடங்கள் விளையாட இருப்பவர். அதிலும் மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருப்பவர். எனவே இந்த நிலையில்இவரது சாதனைகளை இன்னொரு இந்தியரால் முறியடிப்பது என்பது இலகுவில் சாத்தியப்படும் ஒன்றாகத் தெரியவில்லை.

இந்திய அணியின் சிறந்த ஆரம்ப துடு;ப்பாட்ட வீரரான றோகித் சர்மாவுடன் இணைந்து எடுத்த 230 ஒட்டங்கள்,   நான்கு தடவைகள் இருநூறுக்கு மேற்பட்ட ஒட்டங்களை ஆடியெடுத்த முதல் இந்திய இணை வீரர்கள் என்ற சாதனையை நிலைநாட்ட உதவியிருக்கின்றது.

இது மாத்திரமா?

இருபது ஓவர்கள் கொண்ட ஒரு நாள் ஆட்டங்களில் ,   மிக வேகமாக 9000 ஒட்டங்கள் என்ற இலக்கை எட்டிய துடு;ப்பாட்ட வீரராக முதலிடத்தைப் பிடித்துள்ளார் இந்த அசாதாரண கிரிக்கட் வீரர்!

19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான போட்டியொன்று,  2008இல் மலேசியாவில் இடம்பெற்றது. இந்திய அணியின் தலைவராக விளையாடி,  வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரித்தவர் இளைஞனான கோலி என்ற விடயம் பலருக்கு தெரியர்மல் இருக்கலாம். 2011இல் உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் இவரும் இருந்துள்ளார். இந்த உலகக் கிண்ணத்தை வென்ற கையோடு, சூடோடு சூடாக அதே ஆண்டில் ,  இவருக்கு இந்திய டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்புக் கிடைத்தது.

*

2013இல் அவுஸ்திரேலியதென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிராக விளையாடியபோது, இவர் அடித்த இரு சதங்கள் ,  இவர் ஒரு நாள் ஆட்டங்களில் மட்டும் கைதேர்ந்தவர் அல்ல. ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடக்கூடியவர் என்று முத்திரையைப் பதிந்து வைத்தன.

இந்த ஒரு நாள் ஆட்டங்களில், முதலிடத்தைப் பிடித்துள்ள இது முதற் தடவையல்ல. 2013இலும் இவர் முதல் தர ஒரு நாள் ஆட்டக்காராக இருந்துள்ளார். 2014இலும்,  2016இலும் ,   ரீ20 ஆட்டத் தொடர் நாயகனாக இரு தடவைகள் தேர்வாகி இரு;ககிறார் இந்தப் புயல் ஆட்டக்காரர்.

டெஸ்ட் அணித் தலைமை என்பது 2012இல் இவர் தலையில் விழுந்துள்ளது. இந்தியாவின் ஒரு நாள் ஆட்ட துணைத் தலைவராக2012இல் நியமிக்கப்பட்டார். 2014இல் மகேந்திரா தோனி,   அணித் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற,  அந்தப் பதவி இவரிடம் போயிற்று! 2017இன் ஆரம்பத்தில் தோனி ஒரு நாள் ஆட்டங்களின் தலைவர் பதவியிலிருந்து விலக,   மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளின் அணிக்கும் தலைவராக்கப்பட்டார் கோலி!

படிப்படியாக தன் திறமைகளை வெளிப்படுத்தி,  இவரைத் தூணாகக் கொண்டுள்ள இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளிலோ அல்லது ஒருநாள் ஆட்டங்களிலோ வெல்வது மிகக் கடினமான ஒன்றாக எதிரணிகளுக்கு மாறியிருக்கின்றது. இராஜாவுக்கு கிடைத்த நல்ல மந்திரிகள் போல, நிலைத்து நின்று ஆடக்கூடிய,  சாதுர்யமாகப் பந்து வீசக்கூடிய,   பந்து வீ;ச்சிலும்,   துடு;பபாட்டத்திலும் ஒளிரக் கூடிய திறமை வாய்ந்த வீரர்கள்,   இந்திய அணியை நிறைக்கின்றார்கள்.

மிகப் பொறுமையாக ஆடுவதில்  கைதேர்ந்த  ஆரம்ப துடுப்;பாட்ட வீரர்களான ,றோகித் சர்மா,  தவான் போன்றவர்களும்,  ஒரு நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி,   ஆட்டத்தின் போக்கை அடியோடு மாற்றும் சகால்புர்மா,   புவனேஸ்குமார்  போன்ற பந்து வீச்சாளர்களும்,   இந்திய அணியின் பெரும் பலம் . இப்பொழுது அதிரடி ஆட்டக்காராக இந்திய அணிக்கு வாய்த்திருக்கும் பன்முக ஆட்டக்காரர் கார்த்திக் பாண்டி,   இன்னொரு பலம்! இப்பொழுது அணியில் ஆடுவதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும் ஜடேஜா,   அஸ்வின் ஆகிய இரு சுழல் பந்து வீச்சாளர்களும் எதிரணியினருக்கு சிம்ம சொர்ப்பனமாகத் திகழ்பவர்கள்.

இந்தியாவின் தலைசிறந்த பத்து கிரிக்கெட் நடசத்திரங்கள் என்று தரப்படுத்தினால்,  அதில் விராத் கோலியும் ஒருவாராகின்றார். எவராலும் நிரப்ப முடியாத முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டென்டுல்கார். இரண்டாம் இடம் இ;னறும் சிறப்பாக விளையாடும் தோனிக்கு போகின்றது. மூன்றாம் இடத்தைப் பிடிப்பவர் சுரவ் கங்குலி. அடுத்து வருபவர் விராத் கோலி! இவர் நான்காவது இடத்தில் இப்பொழுது தரப்படுத்தப்பட்டாலும்,  அடுத்தடுத்து 5 செஞ்சரிகளை அடித்த  ஒரேயொரு இந்திய துடுப்பாட்;ட வீரரான இவர்தான்இனி இந்தியாவின் அடுத்த சச்சின் டென்டுல்கார் என்கிறார்கள் அவதானிகள். இந்தத் தரப்படுத்தலில் பல வேறுபாடுகள் தலைதூக்குகின்றன. முதல் ஐவருக்குள் கவஸ்கார்,  கும்ளே , கபில் தேவ் ஆகியோரின் பெயர்களைப் புகுத்துபவர்களும் உண்டு.

எது எப்படி இருப்பினும்,  சாதனைகள் மேல் சாதனைகளைக் குவித்துக் கொண்டு வரும், குவிக்கப் போகும் விராத் கோலி, ஒரு வித்தியாசமான சிறந்த இந்திய நட்சத்திர வீரர் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை. ஒரு நாள் ஆட்டங்களில் மிக வேகமாக சதம் எடுத்த சாதனையாளர் கோலிதான்! அதேபோல அதிவேகமாக 5000 ஓருநாள் ஆட்ட ஓட்டங்கள் என்ற இலக்கை எட்டியவரும் கோலிதான்! பல விருதுகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு,  2013இல் அர்ஜூனா விருதும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இளைஞர் விவகாரம்,  விளையாட்டு அமைச்சு, விளையாட்டுத் துறையில் சாதனையாளர்களைக் கௌரவித்து அளிக்கும் விருதுதான் அர்ஜூனா விருது. வெண்கலத்தாலான அர்ஜூனனின் சிலையொன்றும்,   பணப்பரிசாக இந்திய ரூபாய் பத்து இலட்சமும் பரிசாக வழங்கப்படுகின்றன.

பொறுக்கப்பட்ட ,  சிறந்த பன்னாட்டு கிரிக்கெட் வீரர்களை ஒன்று சேர்க்கும் களமாகஇந்தியாவில் வருடாவருடம் இடம்பெறும் ஐபீஎல் இருபது ஓவர் மோதல்கள்உலகப் புகழ்பெற்றவையாகத் திகழ்கின்றன. 2016இல் நிகழ்ந்த ஐபிஎல் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது கோலியின் ரோயல் சலென்ஜேர்ஸ் என்ற அணிதான்! இந்த சீசனில் அதிகூடிய ஓட்டங்களாக 973 ஓட்டங்களை 16 போட்டிகளில் ஆடியெடுத்து சாதனை படைத்தவர் இந்த கோலி! இந்தச் சுற்றுப் போட்டியில் இவர் அடித்த மொத்த சதங்கள் 4! இந்த ஐபிஎல் போட்டிகளில்,  4000 ஓட்டங்கள் என்ற இலக்கை,   முதலில் எட்டியவரும் கோலியேதான்!

இவர் இந்திய நட்சத்திர வீரராக இருப்பதால்,  விளம்பரதாரர்கள் இவரை மொய்க்கிறார்கள்.2016இல் எடுத்த ஒரு கணக்கின்படி>  இவரின் விளம்பர மதிப்பு 92 மில்லியன் டொலர்கள் என்று கணக்கிட்டுள்ளார்கள். இந்திய பிரபல்யங்களில் அதிக பெறுமானம் மிக்கவர் என்பதில் இவர் இரண்டாம் இடத்தைப் பெறுகிறார்.

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பது போல>   தன் அசாத்திய திறமையினால் . தன் நாட்டுக்கு பெருமை சேர்க்கும் நட்சத்திர வீரர்nவிராத் கோலியின் பயணம் நீண்டது. இன்னும்பல சாதனைகள் இவரால் படைக்கப்படும் என்பது நிச்சயம். விளையாட்டை>  விளையாட்டு விளையாட்டாக ஒரு தொழிலாக மாற்றிகோடி கோடியாகச் சம்பாதிக்கும் இவர்கள் மாறுபட்டவர்கள். திறமை இருந்தால் திரும்பும் இடமெல்லாம் திரும்பிப் பார்ப்பார்கள் என்பதற்கு உதாரண புருசர்கள்.!ஆடவந்த இடத்தில் ஆளவந்தவர்கள்! விளையாட்டு உலகின் முடிசூடா மன்னர்கள்! டென்னிசுக்கு ஒரு பெடரர்>   காற்பந்தாட்டத்துக்கு ஒரு றொனால்டோ> மின்னல் ஓட்டத்துக்கு ஒரு போல்ட் என்பது போல> கிரிக்கெட் விளையாட்டுக்கு ஒரு கோலி என்று சுலபமாகச் சொல்லிவிடலாம்.

உதயன் வாரமலர் 05.11.2017

 

 

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *