ஊசிகள் உடலில் விளைவதில்லை

ஊசிகள் உடலில் விளைவதில்லை

11 views
0

அசலை அசத்துகின்ற நகல்

அசலைப் போல நகல் இருப்பது இலேசுப்பட்ட விடயமல்ல. எப்படித்தான் அசலைப் போன்று இருக்க விரும்பினாலும், முடிவில், அட இது வெறும் நகல்தானே என்ற அலட்சிய மனப்பான்மை நம்மிடம் தொற்றி விடுவதுண்டு.
மனாபு கஸாக்கா என்ற பெயர் கொண்ட இந்த ஜப்பானியாிடம் உள்ள திறமை அனைவரையும் வியக்க வைக்கிறது. பிரபல்யமான விலையுர்ந்த, சுவிஸ் றொலெக்ஸ் கடிகாரகமாகட்டும் அல்லது கஸ்ஸியோ கைக்கடிகாரகமாகட்டும், அச்சொட்டாக அவற்றின் வடிவில் ,காகித அட்டை கொண்டு செய்வதில் இவர் படு கில்லாடியாக இருக்கிறார். இதற்கு இவர் கென்ட் அட்டை எனப்படும் பிரத்தியேக அட்டையை உபயோகிக்கிறார். இங்கிலாந்தின் கென்ட் கவுன்ரியிலிருந்து இந்த அட்டை வருவதால்தான் இந்தப் பெயர். இந்த அட்டை பல சிறப்பம்சங்களைக் கொண்டதால், ஓவியர்களின் கலைத்திறமையை வெளிப்படுத்த , இது பொிதும் கைகொடுக்கின்றது. கைக்கடிகாரத்தில் காணப்படும் மிகச் சிறு விபரங்களையெல்லாம், துல்லியமாக இந்த அட்டை கொண்டு உருவாக்கும் தன் கடிகாரங்களை, கடந்த 15 வருடங்களாகக் காண்பித்து, பார்ப்போரை மலைக்க வைக்கிறார் இந்த மனிதர்.

கழிவுக்கொரு விலையும் காண்கின்ற உணவும்.

வயிற்று்ப் பசி போக்கும் உணவகங்கள், நம் வாழ்வில் இணைந்தவை . கிராமப்பு மக்களுக்கு அதன் அவசியமும், தேவையும் பொிதாக இல்லையென்ற போதிலும், நகரப்புற வாழ்க்கையில் , இது அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.
இங்கு ஒரு அசாதாரண உணவகத்தைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வோமே. கணவனும் மனைவியும் இணைந்து நடத்தும் இந்த உணவகத்தில் அப்படி என்னதான் விசேசம் இருக்கின்றது? இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இந்த உணவகம் அமைந்திருக்கும் இடந்தான் இதை அசாதாரணமான ஒன்றாக்கி இருக்கின்றது. குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கும் இடத்தருகே இந்த உணவகம் இருப்பதுதான் புதுமை. கொடுக்கும் உணவுக்கு பணம் வாங்காதது இனனொரு அதிசயம்.
பணம் வாங்காமல், கோவில் சாதம் போல இவர்கள் பிறருக்கு உணவளிப்பதன் மர்மந்தான் என்னவோ? என்ன அவசரம்? சொல்லத்தானே போகிறேன். பணம் இல்லாத உணவு என்றதும் , இலவசம் என்று நினைத்து விடாதீர்கள். இந்த உணவகத்தை நடாத்தும் 56 வயதான சரமின் என்பவர், தன்னிடம் உண்ண வருபவர்கள் வெறுங்கையோடு வந்தால் உணவளிக்க மாட்டார். இவாகள் குப்பையிலிருந்து பொறுக்கி வரும் பிளாஸ்டிக் இவர்களுக்கு உணவு போடுகின்றது. இவர்கள் பெறும் உணவு கொண்டுவரும் பிளாஸ்டிக்கை விட பெறுமதி குறைவு என்றால், உணவோடு மேலதிக பணமும் கொடுபடும்.

இப்படியும் வாழ்கிறார்கள் இவர்கள்.

தங்கள் குடும்ப அங்கத்தவா் ஒருவர் இறந்துவிட்டால் , தங்கள் கைவிரல்களில் ஒன்றைத் துண்டித்துக் கொள்ளும் இனத்தவரைப் பற்றி அறிந்திருக்கிறீாகளா?
இந்தோனேசியாவின் பலீம் பள்ளத்தாக்கில் வாழ்கின்ற ”டனி” எனப்படும் இனத்தவர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள். இப்படியொரு இனம் இருக்கின்றது என்று 1938இல் தற்செயலாகக் கண்டுபிடித்திருந்தார்கள்.. இப்பொழுது மார்க்கஸ் றொத் என்ற ஜேர்மனிய படப்பிடிப்பாளர், அவாகளுடன் ஒரு வார காலத்தைக் கழித்ததில், பல சுவையான செய்திகள் கசிந்துள்ளன.
ஒரு காலத்தில் இங்கு வாழந்த போர்வீரனான ஒருவனின் ”மம்மி”யை இவர்கள் பெருமையோடு இங்க வருபவர்களுக்கு காட்டி வருகிறார்கள் . இந்த மம்மி குறைந்த பட்சம் 370 வருடததிற்கு முற்பட்டது என்று அறியப்படுகிறது. ஒரு எதிரியைக் கொன்றழித்தால், ஒரு மாலையை இந்த மம்மியின் கழுத்தில் அணிவிப்பது இவர்கள் வழமை.

இவர்கள் தம் திருவிழாக்களில் காட்டுப்பன்றிகளைக் கொல்வது இங்கே பிரசித்தம். இவர்கள் மிக விலைவாக மதிப்பிடுவது பன்றியைத்தான். எனவே அரிதான விருந்தாளிக்கு உணவு அளிக்க, பன்றியைக் கொன்றே விருந்து படைக்கிறார்கள். நெருப்பில் வேகவைத்தே இறைச்சியை உண்கிறார்கள். ஆண்கள் ,பெண்கள் என்று வெவ்வேறு வீடுகளில்தான் வசித்து வருகிறார்களாம்.

பல பெண்கள் தம் பெருவிரல்கள் தவிர்ந்து ஏனைய கைவிரல்களுடன் காணப்படுவதைப் படம் பிடித்துள்ளார், இந்தப் படப் பிடிப்பாளர். உறவு முறையில் ஒருவர் இறந்து போனால், தங்கள் கைவிரல் ஒன்றைத் துண்டித்து விடுவார்களாம் இந்தப் பெண்கள்.
கணனி உலகத்தில் இப்படியும் சிலர் வாழ்கிறார்கள்.

ஊசிகள் உடலில் விளைவதில்லை

இந்தியப் பெண்னாண அவள் வயது 35 .அனுசூரியா என்ற பெயர் பெயர் கொண்ட அவளது இரண்டு கால்களிலும் முழந்தாள் வரையில் ஆணிகள் . இவைகள் எப்படி உள்ளே புகுந்தன என்று அவளுக்கு தெரியாதாம். நீண்ட காலமாக மரண வேதனை அனுபவித்து வந்த இவளுக்கு, மருத்துவர்களும் சிகிச்சை அளிக்க அறுத்து வந்து்ளளார்கள். தனக்குத்தானே ஊசிகளை ஏற்றிக் கொள்கிறாள் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. அவளோ இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறாள். அவள் சகோதரனும் இதற்கு ஆதரவாகவே கருத்து சொல்லி வந்திருக்கிறான். இறுதியாக இந்த ஒக்டோபர் மாதம் அவள் கால்களை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, ஆணிகள், ஊசிகள்,சிரிஞ் ஊசிகள் உட்பட 70 உலோக ஊசிகளைக் கண்டெடுத்துள்ளார்கள் மருத்துவர்கள்.
2012 தொடக்கம் தனக்கு வேதனையளித்து வந்த இந்த ஊசிகள் எப்படி உள்நுழைந்தன என்று தெரியாது முழிக்கிறாள் பெண். உடம்பில் ஊசிகள் விளைவதில்லை. வெளியில் இருந்து வந்தவைதான் இவை என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனால் இன்று வரையில் மூலம் கண்டுபிடிக்கப்படவில்லை. இது ஒரு கற்பனைக் கதையுமல்ல.
யாரோ இவளை மயக்க நிலையில் கிடத்தி விட்டு, கால்களுக்குள் ஊசியை ஏற்றினார்களோ? ஏன் முழந்தாளுக்கு கீழ் மட்டும், இந்த ஊசிகள்?
புரியாத புதிர்களில் இதுவும் ஒன்று.

தண்ணீராக செலவிடப்படும் பணம்

93 வயதான சிம்பாவே அதிபர் முகாபேயைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்லத் தேவையில்லை. ஆனால் பணத்தை வாரியிறைக்கும் அவர் மனைவி பற்றி சொல்லித்தான் தீரவேண்டும்.. பத்துப் பேரில் ஏழு பேர் வறுமைக் கோட்டில் உள்ளவர்கள் என்ற நிலையில், மக்களின் பணத்தில் குளிக்கிறார் இந்தச் சீமாட்டி.
சமீபத்தில் இவர் வாங்கிய றோலெக்ஸ் கடிகாரத்தின் விலை 80,000 பவுண்ட்ஸ். (ஒரு பவுண்ட்ஸ் என்பது 200 ரூபாய்) உலகெங்கும் சொந்தமாக இவருக்கு மாளிகைகள் இருக்கின்றன. தலைஅலங்காரத்திற்கு வைரம் பதித்த ஒரு நகையை 200,000 பவுண்ட்ஸ் தொகைக்கு வாங்கி இருக்கிறார். ஒரு தடவை இவர் பாரிஸ் நகருக்குச் சென்றபோது, 120,000 பவுண்டஸ் தொகையை தன் ஆடம்பர ”ஷொப்பிங்”குக்கு வாரி இறைத்தபோது, முழு உலகமுமே அதிர்ந்தது.
1996இல் இவர்களது திருமணம் நடந்தபோது, சிம்பாவே நாட்டில், அந்த நுாற்றாண்டின் அதி ஆடம்பர திருமணமாக இது நோக்கப்பட்டுள்ளது. முகாபேயின் 90 வது பிறந்த தின ஆடம்பரக் கொண்டாட்டங்கள் முழுங்கிய பணத்தொகை 600,000 பவுண்ட்ஸ்.
20வது திருமண ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக ஒரு வைர மோதிரம் வாங்கப்பட்டுள்ளது . இதன் விலை 900,000 பவுண்ட்ஸ். இவர்களது ஒரேயொரு மகளான பொனா என்பவளின் திருமணச் செலவுக்காக 2014இல் செலவிடப்பட்ட பணம் 3 மில்லியன் பவுண்டஸ். 4000பேர் விருந்தாளிகளாக அழைக்கப்பட்டுள்ளார்கள்.
சிம்பாவேயில் விலையுர்ந்த கற்களை அகழும் சுரங்கமொன்று சீனாவுடன் கூட்டாக இயங்குகின்றது. 800 பில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கற்கள் , சாதாரண குடிமக்களைச் சென்றடைவதில்லை.
பத்துப் பேரில் எழுவர் வறுமையில் வாட, ஒருவர் பணத்தை வாரியிறைக்கும் அநியாயம் கண்டீர்களா?

24.11.17

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *