சதைவெறியும் கொலைவெறியும்-2

சதைவெறியும் கொலைவெறியும்-2

29 views
0

கொலைக்களம்2

படப்பிடிப்பாளனாக தொடர்ந்த வதை

1957இல்  இவன் நியூயோர்க் நகருக்கு தன் இருப்பிடத்தை மாற்றியபோது. அட்டகாசங்கள் புதுவடிவமெடுத்துள்ளன.  தான் ஒரு தொழில்ரீதியான படப்பிடிப்பாளன் என்று சொல்லிக்கொண்டு, கைகள் பிணைக்கப்பட்ட நியைில் இளம் பெண்களை படமெடு்க்க ஆரம்பித்துள்ளான். இதற்கு இவன் பணமும் கொடுத்துள்ளான்.  பிரபல்யமான கிளுகிளுப்புச் சஞ்சிகைளின் அட்டைப் படமாக இவர்களின் படம் வரும் என்று ஆசைகாட்டி, தன் இருப்பிடத்துக்கு  இளம் பெண்களை அழைத்து வரத் தொடங்கினான். கைகால்களைக் கட்டி படமெடுத்து விட்டு, பின்பு அவர்களத் தாக்குவது இவன் வழமையாக இருந்துள்ளது. சில சமயங்களில் படம் பிடித்தவர்களைக் கொன்று, வனாந்தரப் பிரதேசத்தில் எறிந்து விடுவதும் உண்டு

சரியான நேரத்தில் பொருத்தமானவளைத் தேடிவிடுவதில் இவன் படு கில்லாடி. இவன் வேட்டையில்  19 வயதான ஜூடித் டல் என்பவள் சிக்கிக் கொண்டாள். விவாகரத்துச் செய்து கொண்ட ஒரு  குழந்தைக்கு தாய் அவள். “பிள்ளையைப் பராமரிப்பது யார்” என்ற இழுபறி விவகாரத்தில், அவள் தன் வக்கீலுக்குக் கொடுக்க ஒரு தொகைப் பணம் தேவையாக இருந்தது.

 

மோப்பநாய் போல இதை  எப்படியோ அறிந்து கொண்டான் கிளாற்மான்.  தொலைபேசியை எடுத்தான். “தான் ஒரு படப்பிடிப்பாளன்“ என்று  தன்னை  அறிமுகப்படுத்திக் கொண்டான். ஒரு கிளுகிளு சஞ்சிககைக்கு  அட்டைப் படங்கள் எடுப்பவன் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ”நீ போஸ் கொடுத்தால் தாராளமாகப் பணம் தருவேன்” என்று ஆசை காட்டினான். மறுமுனையில் ஜூடித் தடுமாறினாள்.

பணம் தேவையாக இருந்தது. “போஸ் கொடுத்தால் எதை இழந்து விடப் போகிறேன். பணம்தானே எனக்குத் தேவை” சம்மதம் தெரிவித்தாள்.

முதலில் காமப் பசி பின்பு கொல்லும் பசி

குறித்த நேரத்தில் கிளாற்மானின் வீடு வந்து சோ்ந்தாள் ஜூடித். எடுப்பான உடலோடு, இறுக்கமான ஆடை அணிந்து வந்த  ஜூடித், கிளாற்மானுக்கு போதையூட்டினாள். தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான். நான் எடுக்கும் படங்களில் சில கால்கள் கட்டப்ட்ட நிலையில் இருக்க வேண்டும். எனவே அதற்கு நீ சம்மதிக்க வேண்டும்  என்று அவன் கூறியபோது, அவள் முதலில் மறுத்தாள். கொடுக்க வேண்டிய படங்கள் அப்படித்தான் அமையவேண்டும் என்று கிறாற்மான் பிடிவாதமாக நின்றபோது, அவளால் எதிர்க்க முடியவில்லை. பணத்தேவை அவளை எதற்கும் வளைந்து கொடுக்க வைத்தது.

சில போட்டோக்களை எடுத்ததும், கமராவை மேசையில் வைத்து விட்டு, மெல்ல ஜூடித்தை நெருங்கினான். ”உன் மேலாடையைக் கழற்ற வேண்டும்” என்று அவன் அவளிடம் கூறியபோது, தான் ஒரு மனித மிருகத்திடம் சிக்கியிருப்பது அவளுக்கு தெளிவாகப் புரிந்தது. என்றாலும் துணிவாக, என்னால் முடியாது என்று சீறினாள்  அவள். பளீரெனக் கன்னத்தில் அறைந்தான் கிளாற்மான். வேதனையில் துடித்தாள் ஜூடித். வேறு வழியின்றி தன்  மேலாடைகளைக் கழற்ற ஆரம்பித்தாள். கிளிக்! கிளிக்! கிளிக்!

அவன் கமரா விசுவாசமாக எஜமான் எதிர்பார்த்த பணியைச் செய்தது.

உருண்டு திரண்ட அவள் அழகுகள் அவனுள் ஒரு வெறியை ஏற்படுத்தின.

உள்ளாடைகளையும் களையும்படி அவன் கூறியபோது, அவளால் எதிர்க்கத் திராணி இல்லை.

அவள் நிர்வாணத்தை  கமரா  தனது கிளி்க் கிளிக் சப்தத்துடன் உள்வாங்கிக் கொண்டது.

அவளின் எழிலான , கவர்ச்சியான தேகம் இவனுக்குள் காம போதையை ஏற்படுத்தியது.

மெல்ல அவளை நெருங்கினான்.

அடுத்து என்ன செய்யப் போகிறது இந்த மிருகம் என்று நினைத்து மிரண்டாள் ஜூடித். வகையாக மாட்டிக் கொண்ட தனக்கு மீள வழியில்லை என்று அவளுக்கு நன்றாகத் தெரிந்தது.

அவன் கைகள் அவள் உடலில் படர்ந்தபோது, அவள் உடல் நடுங்கியது. அவனது குரூரமான முகம், அவளைப் பேசாமடந்தையாக்கியது.

தன் இஸ்டத்துக்கு அவள் உடலை மேய ஆரம்பித்தான் கிளாற்மான். கையில் எதாவது கிடைத்தால், அவனை் தலையில் அடித்துக் கொன்று விடலாம் என்ற வெறி அவளுக்குள் எழுந்தது. ஆனால் அவளால் அது முடியவில்லை. தன் உடலைப் பகுதி பகுதியாக அனுபவித்துக் கொண்டிருக்கும் அவனை எதிர்த்துப் போராடும் பலம் அவனிடம் இல்லை.

மெல்ல மெல்ல அவள் தன்னை அவனிடம் இழந்து கொண்டிருந்தாள்.

தன் காமப் பசி தீர்ந்தபோது, அவளை முரட்டுத்தனமாகத் தள்ளிவிட்டு மெல்ல எழுந்தான் கிளாற்மான். அவளை இடு்பபில் பிடித்து நிமிர்த்தி நிற்க வைத்தான்.

கழுத்தை நெரிப்பதுவே  இவன் கொல்லும் வழி

இனி என்ன செய்யப் போகிறது இந்த மிருகம் என்ற கலவரத்தோடு, மிரண்டாள் ஜூடித்.

இடுப்பில் இருந்த அவன் முரட்டுக் கைகள் கழுத்துக்கு தாவின. இரு கைகளாலும் குரல்வளையை நெருக்க ஆர்ம்பித்தான்.

அவனிடம் இப்பொழுது இருந்தது கொலைவெறி. தன் கையில் சிக்கியவளைக் கொல்ல வேண்டும் என்ற வெறி! துடித்து உதறும் உடல் அவனை வெறியனாக்கிக் கொண்டிருந்தது.

அவளின் உடல் துடிப்பு ஒய்ந்ததும்,கழுத்திலிருந்த கைகளை அவன் எடுக்க, உடல் தொப்பெனத் தரையில் வீழ்ந்தது.

மெல்ல நடந்து சென்று கமராவைக் கையில் எடுத்தான். மரணத்தின் பயங்கரத்தை அவள் முகம்  காட்டியது.

கிளிக்! கிளிக்! கிளிக்!

வாய்க்குளிலிருந்து துருத்திக் கொண்டிருந்த நாக்கு, மேற்குழிக்குள் போய்விட்ட கண்கள் அவன் போட்டோக்களில் பதிவாகிக் கொண்டிருந்தன.

இப்பொழுது அவனுக்கு முழுத் திருப்தி.

ஒரு பெண் உடலை முழுமையாக அனுபவித்து, அவளைத் தீர்த்துக் கட்டும் வரை அவன் இச்சை ஓய்வதில்லை. .

1958ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இவன் கைதாகியபோது, பல பெண்கள் இவனால் கொலையுண்டு போயிருந்தது தெரியவந்துள்ளது. இவன் கைதாகிய போது, வழக்கம்போல, கைகள் பிணைக்கப்பட்ட ஒரு இளம்பெணணுடன் இவன் வல்லுறவு வைக்க முயன்று கொண்டிருந்தான். அதாவது கையும் மெய்யுமாக இவன் மாட்டியிருந்தான்.

ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல

இந்தக் கைதின் பின்னர், நுாற்றுக்கணக்கான இளம் அழகிகளின் போட்டோக்கள் இவனிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. தனது ”ஆயுதப் பெட்டிக்குள்“ தான் எடுத்த படங்களின் சேகரிப்பு இருப்பதை அவனே தன் வாயால் சொல்லியிருந்தான். இந்தப் படங்களைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள். ஒரு பெண்ணை எந்தெந்த வழியில் சித்திரவதைப்படுத்தி, அவர்களைக் கொன்றானோ, அநத வரிசையில் தொடர்ச்சியாக போட்டோக்கள் எடுத்திருந்தான். இறந்த உடலை ஒரு கோணத்தில் எடுக்கும் வரை இவன் “படப்பிடிப்பு“ தொடரும் வழக்கம் இருந்துள்ளது.  இவர்கள் எல்லோருமே கைகள் கட்டப்பட்ட நிலையில்தான் காணப்பட்டுள்ளார்கள். காணாமல் போனவர்கள் என்ற பட்டியலில் இருந்த மூன்று பெண்களின் போட்டோக்களும் இதில் உள்ளடக்கம்.

இவன் வக்கிரமான இச்சைகள் அவன் எடுத்த போட்டோக்களில், பளிச்செனத் தெரிந்தன.

இப்படி ஒரு மனித மிருகமா? அதிர்ந்து போனார்கள் அதிகாரிகள். ஒரு படத்தில் கிழிந்த உள்ளாடைகளுடன் கசக்கப்பட்ட மலராக, ஒரு இளம் பெண்ணின் உடல், இன்னொரு போட்டோவில், கழுத்து நெரிக்கப்பட்டு, துடிதுடித்து இறந்த அடுத்த கணம் எடுத்த போட்டோக்கள். மரணத்தின் தளும்புகள் ஒருவர் உடல்ல எப்படி எப்படியெல்லாம் படிகின்றன என்பதை இவன் போட்டோக்கள் தத்ரூபமாகக் காட்டின. கால்கள் கட்டிய நிலையில் பெண்களின் நிர்வாணக் கோலங்களைக் காட்டும் போட்டோக்கள். மார்பகங்களைக் குறிவைத்து, பிறப்பு உறுப்புகளைக் குறிவைத்து பல கோண்ங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்கள்,  பெண்ணின் மிரட்சியை, வேதனையை, அங்கலாய்ப்பை வெளிக்காட்டும் போட்டோக்கள்….. பெருந்தொகையான போட்டோக்கள். நாம் சுற்றுலாவில் வெவ்வேறு இடங்களுக்குச் சென்றால் ஞாபகார்த்தமாக போட்டோக்கள் எடுத்துக் கொள்வோமல்லவா? இப்படித்தான் இவனுடைய குரூர சிந்தனையில், தன் சித்திரவதைகள்‘ பதிவில்‘ இருக்க வேண்டும் என்பதில் இவன் குறியாக இருந்துள்ளான்.

கிளுகிளுப்பு அழகிக் கொலைகாரன்

கிளாற்மான், இந்த மூன்று பெண்களையும் , கழுத்தை நெரித்துக் கொன்றதாக ஒப்புக் கொண்டதையடுத்து, இந்தப் பாதகன் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டது. எப்பொழுதுமே மாடல்களைாகப் பணிபுரியும் அழகிகளையே இவன் குறிவைத்து வந்ததால், கிளுகிளுப்பு அழகிக் கொலைகாரன் என்ற அடைமொழியோடு இவன் செய்திகள் வெளிவரலாயின. நயமான வார்த்தைகள் சொல்லி, ஒரு பெண்ணை தன் இருப்பிடத்துக்கு அழைத்து வந்தவுடன் எடுக்கும் முதல் போட்டோ தொடக்கம்,  அதே பெண்ணை பலவழிகளில்;  சித்திரவதை செய்த போதெல்லாம், இந்த நிகழ்வுகள் பல போட்டோக்களாக,  இவன் கமெராவுக்குள் சிக்கியிருக்கின்றன.  பெண்ணைக் கொன்றபின்பும், அந்த உடலை  இவன் படமெடுக்கத் தவறவில்லை. . கொல்லப்பட்ட பின்பு உடலை எப்பொழுதுமே தன் விருப்புக்கு ஏற்ப, கிடத்தி விட்டு படமெடுப்பது இவன் வழமையாக இருந்துள்ளது. கொல்லப்பட்ட பெண் எப்படியான வேதனையை அனுபவித்தாள்  என்பதை தன் இறுதி போட்டோ பிரதிபலிக்க வேண்டும் என்பதில் அவன் தீர்மானமாக  இருந்துள்ளான். இதுவெ அவனை அதிகிகள் இனங் கண்டுகொள்ள உதவியிருக்கின்றது.

ஒரு தொடர் கொலையாளியின்  ஒரே மாதிரியான செய்கைகளை வைத்து,  புலனாய்வர்கள் இதைக் கொலையாளியின் ”கையொப்பம்” என்று வர்ணிக்கிறார்கள். பொதுவாக தொடர் கொலைகளைச் செய்பவர்கள் , கொலை செய்யும் பாணியில் எங்கோ ஓர் ஒற்றுமை இருக்கும். இதை வைத்தே, நடந்த கொலை ஒரே நபரால் செய்யப்பட்டதா என்பதைத் தீர்மானிக்கிறார்கள். இவர்களை ”சீரியல் கொலைகாரர்கள்“ என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.சரி கொலைகாரனைப் பிடித்தாயிற்று. இவன்தான் கொலை செய்தான் என்ற ஆதாரம் வேண்டாமா? இல்லாது போனால் யாரோ ஒரு பைத்தியக்காரனை கொலைகாரன் என்று பிடித்து வைத்திருப்பதாக கதை மாறி விடும்.

கொடூரம் தொடரும்………..

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *