கழிவிலே கலைவண்ணம் கண்டாளோ?

கழிவிலே கலைவண்ணம் கண்டாளோ?

7 views
0

கழிவு என்றதுமே முகத்தை சுளிப்பவர்கள் நாம். கழிவு யாருக்குமே பிடிப்பதில்லை. ஆனால் சிலர்  கழிவை வைத்து களிப்படையும் இரகசியத்தை உங்களுக்குச் சொல்லப்போகின்றார்கள். இதை  ஆடை அதிசயத்தை அறிமுகம் செய்தவர் 26 வயதான ஆடை வடிவமைப்பாளர் ஒருவர்.

அமெரிக்காவின் வடகரோலினா பிராந்தியத்தைச் சேர்ந்த இவர் பெயர் மியேர்ஸ். இவர் ஏற்கனவே சில உடைகளை வித்தியாசமாக வடிவமைத்த உலகப்புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் என்பதை நாம் இங்கு கவனித்தாக வேண்டும்.

கிறிஸ்மஸ் காலப் பாிசுகளைப் பொதிகளாக்க, விசேடமான பொதி சுற்றும் தாள்களை விற்பனைக்கு விடுவார்கள். இந்த வடிவமைப்பாளர்,  ஒலிவியா மியேர்ஸ், கிழிக்கப்பட்டு, கழிக்கப்பட்டு வீசப்படும் இந்த பொதி உறைகளைக் கொண்டு, மிக அழகிய ஆடையை வடிவமைத்து அசத்தியிருக்கின்றார். 2014இலும் இப்படியான ஆடைகளை இவர் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்து்ள்ளார். இந்தப் பொதியிலு்ளள அழகிய தாளும், றிபனும் அநியாயமாகப் போகக்கூடாது என்ற நினைப்பில் எழுந்ததுதான் இந்த ஆடை என்கிறார் இந்தப் பெண். மேலதிகமாகத் தேவைப்படுவது ஒட்டும் பசையும், அளவுகளைக் கணடறிய ஒரு அளவை நாடாவுந்தான் என்கிறார் இவர் உற்சாகமாக!  2016இல் இப்படியான ஆடைகளை வடிவமைப்பதை  இவர் நிறுத்தியிருந்தார்.  இனிஇது வருாவருடம்  தொடரும் என்கிறார் இந்த இளமங்கை.கழிவிலும் களிப்படைதல் கண்டீரோ?

 

மாண்டவர் மீண்ட கதை இது

 

7 மாதங்களுக்கு முன்பு தகனம் செய்தவர், வீட்டு முன்கதவு வழியாக, எதுவுமே நடக்காதவர் போல , உள்ளே நுழைந்து வந்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?

நிஜத்தில் இது சம்பவித்துள்ளது. தாய்லாந்து குடும்பம் ஒன்றில்தான் இந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

இந்த ‘இறந்து மீண்ட‘ 44 வயதான சக்கோர்ன் சச்சீவாவா, நாட்டின் வேறொரு பிராந்தியத்தில் ஒரு மீன்பிடிப் படகில் தொழிலாற்றி விட்டு, 2 வருடங்களின் பின்பு தன் வீட்டுக்கு திரும்பியிருந்தார். இந்த 2 வருட இடைவெளியில், தன் குடும்பத்தாரோடு இவர் எந்தவித தொடர்பையும் வைத்துக் கொள்ளவில்லை.  எனவே தனக்கு நல்ல வரவேற்பு கிடைக்காது என்பது அவருக்கு நன்றாகவே தொிந்திருந்தது. ஆனால் தன்னை ஒரு ‘ஆவியாக‘ நினைத்து வீட்டுக்காரர்கள் அலறியடித்து ஓடுவார்கள் என்று அவர் எப்படி நினைத்திருப்பார்?

கடந்த வருடம் மே மாதம் சச்சீவா தொழில் செய்யும் பிராந்தியப் பொலிஸார், சமிபாட்டுக் கோளாறு காரணமாக இவர் இறந்துவிட்டதாக இவர் குடும்ப அங்கத்தவர்களுக்கு அறிவித்திருந்தார்கள். இறந்த உடலை நோில் வந்து பார்த்து எடுத்துச் செல்லும்படியும்  அறிவித்திருந்தார்கள் . பாங்கொக் நகரம் பயணமாகிய குடும்பத்தவர்கள், அங்குள்ள பல்கலைக்கழக சவக்கிடங்கிலிருந்து உடலை எடுக்கப்  போயிருந்தார்கள். அடையாளம் காணமுடியாத வகையில் உடல் உப்பியிருந்தது. முன்பல்வாிசையைப் பார்த்து விட்டு சச்சீனாவின் 55வயது மைத்துனன் இது தன் மைத்துனன் அல்ல. பற்கள் இரண்டைக் காணோம்  என்று அதிகாாிகளிடம் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர்களோ உடம்பை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள். உடலும்  எடுத்துச் செல்லப்பட்டு. வழமையான 3 நாள்  மதச் சடங்குகளின் முடிவில் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது.

எப்படி இது சம்பவித்தது? சச்சீனாவின் அடையாள அட்டை ஒரு தடவை மயன்மாரில் அவருடன்  கூட வேலைசெய்த ஒருவனால்  திருடப்பட்டு விட்டது. இதை பொலிஸாரிடம் அறிவித்த போது, அவர்கள் புது அட்டையொன்றை கொடுத்துள்ளார்கள். இத்துடன் இந்த அடையாள அட்டை களவு விவகாரம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்பட்டு விட்டது.   ஆனால் அதிகாரிகளின் இந்த அசமந்தப் போக்கு எத்தனை விபரீதங்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது பார்த்தீர்களா?

06.1.18

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *