தீர்த்துக்கட்ட முடியாத தீரரோ இவர்?

தீர்த்துக்கட்ட முடியாத தீரரோ இவர்?

8 views
0

காலத்துக்குக் காலம் பத்திரிகைத் தலைப்புச் செய்திகளை அலங்கரிப்பவர்கள் பலர் வந்து வந்து போகின்றார்கள். சிலர் தொடர்ச்சியாக வருகிறார்கள். 2017இல்  அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜொங்கும் தமது “கோமாளிக் கூத்துக்களால்” அடிக்கடி பத்திரிகைகளில் வந்துபோனார்கள். 2018இன் ஆரம்பத்திலும் “சமாதானப் பேச்சுவார்த்தை” என்று பல்டி அடித்துள்ளார்கள்.

சமீபத்தில் பதவி ஓய்வுபெற்றுவிட்ட ஒரு தென் கொரிய இராணுவ அதிகாரி , கிம் ஜொங்கை ஆட்சியிலிருந்து துாக்கியெறிய முடியாத அளவு, அங்குள்ள மக்கள் “மூளைச்சலவை” செய்யப்பட்டுள்ளார்களென இவர் கூறியிருக்கிறார். ஈராக்கின் சடாம் ஹூசேயினைத் துாக்கி எறியவது போன்ற விடயமல்ல இது. ” அல்லாவை இல்லாததொழிப்பது” போன்ற காரியமிது என்ற ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டால், உடனடியாக 1000 தற்கொலை விமானப் படைகள் வட்டமிட்டு நின்று “கமிக்காஸேப்” பாணியில்  தற்கொலைத் தாக்குதல்களை ஆரம்பித்து விடுவார்கள் என்கிறார் இவர். நாடு முழுவதுமே இராணுவத் தளம்போல்தான் இருக்கின்றது. எவரையும் விட்டு வைக்காமல், பிள்ளைகளுக்குக் கூட இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. குண்டுத் தாக்குதல்கள் மூலம் வட கொரியாவை “கற்கால யுகத்திற்குக்” கொண்டுவருவது என்பது அசாத்தியம் என்கிறார் முன்னாள் லெப்ரினட் ஜெனரல் சுன்!

ஒரு 14 வயதுப் பிள்ளைக்கு 100 மணி நேரத்திற்கு மேற்பட்ட இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. இந்தப் பிள்ளைக்கு ஒரு ஏகே47 ரகத் துப்பாக்கியைக் கையாள நன்றாகவே தெரியும். ஒரு கைக்குண்டை வெடிக்க வைக்கவும் தெரியும். எந்தக் குடும்பமாவது பிழையாக நடந்து கொண்டால் , கூட்டாகத் தண்டனை வழங்கப்படுகின்றது. ஒன்றில் சிறை அல்லது மரண தண்டனை! தென் கொரிய தலைநகரைக் குறிபார்த்தபடி, 1000 ஆர்ட்டிலரிகள் தயாராக இருக்கின்றனவாம். 5000 தொன் எடை கொண்ட இரசாயண வெடிமருந்துகள் தலைநகரை நாசமாக்கக் காத்திருக்கின்றன. இதைவிட சைபர் தாக்குதல்களுக்கு, 12 வயது தொட்டே பிள்ளைகள் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறார்களாம்.

எல்லாத் தாக்குதல் ஏற்பாடுகளுமே,  நிலமட்டத்திற்கு அடியில் நிர்மாணி்க்கப்பட்டிருப்பதால், இவற்றை அழிப்பது என்பது எதிரிகளுக்கு சுலபமான ஒன்றல்ல என்று எச்சரிக்கின்றார், 40 வருட அனுபவசாலியான இந்த இராணுவ அதிகாரி! ஒரு மோசமான எதிரியுடன்தான் அமெரிக்கா மோதுகின்றது……..

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *