அறிந்த மிருகம் அறியாத கதை(7) கரடிகள் சொல்லும் கதை.
கரடியாய் கத்தியும் பயனொன்றும் இல்லையே இந்தப் பழமொழி உங்களுக்கு ஞாபகத்திற்கு வருகிறதா? இந்தப் பழமொழி நமக்குச் சொல்லும் பாடந்தான் என்ன? அதைச் சொல்வதற்கு முன்பு, ஆக்ரோஸமான இந்தக் காட்டு விலங்கைப் பற்றி, நமக்குத் தெரியாத கதைகளை அறிவோம். மாமிசமும் உண்ணும் மாம்பழமும் உண்ணும் ஒரு முலையூட்டி இது. இது மாமிச பட்சணி மாத்திரமல்ல தாவர பட்சணியும் கூட! இதற்கு முதுகெலும்பு உண்டு, உடல் முழுவதும் உரோமம் உண்டு. சூடான குருதி...
வீடுகட்டிக் கொடுக்க விற்பனையாவது பெண்மையா?
எந்தச் சுவரில் போய் முட்டிக் கொள்வது? தன் பெற்றோருக்கு வீடு கட்டிக் கொடுக்க, தன் பெண்மையை ஏலத்தில் விற்பனை செய்ய முன்வந்துள்ளார் ஒரு 18வயது மொடல் அழகி! மாணவியான இவர் தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கவும், தன் பெற்றோருக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கவும், தன் பெண்மையை ஒரு மில்லியன் யூரோ பணத்தொகைக்கு ( சுமாராக 19கோடி ரூபாய்) ஏலத்தில் விற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார். இது...
ஆண்டுக்கொரு குளியலா? ஐயோ வேண்டாமே!
மனைவியை விவாகரத்துச் செய்ய, ஒரு வினோதமான காரணத்தை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார் கணவர். ஆண்டுக்கொரு தடவை குளியலறைப் பக்கம் தலைகாட்டும் என் மனைவியோடு என்னால் தொடர்ந்து வாழமுடியாது என்பதுதான் அந்த முறைப்பாடு! தாய்வானின் தலைநகரான ரைபேயின் மாவட்ட நீதிமன்றத்தில்தான் இந்த முறைப்பாடு செய்யப்பட்டு்ள்ளது. முறைப்பாட்டுக்குள்ளாகிய பெண்ணின் பெயர் லின். இவர் இடையிடையே பற்களைத் துலக்குவதுண்டு. தலைமுடியையும் கழுவிக் கொள்வாராம். அவ்வளவுதான். திருமணம் செய்த சமயம், இந்தப் பெண் வாரத்திற்கு ஒரு...