ஆண்டுக்கொரு குளியலா? ஐயோ வேண்டாமே!

   ஆண்டுக்கொரு குளியலா? ஐயோ வேண்டாமே!

7 views
0

 

மனைவியை விவாகரத்துச் செய்ய, ஒரு வினோதமான காரணத்தை  நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார் கணவர். ஆண்டுக்கொரு தடவை குளியலறைப் பக்கம் தலைகாட்டும் என் மனைவியோடு என்னால்  தொடர்ந்து வாழமுடியாது என்பதுதான் அந்த முறைப்பாடு!

தாய்வானின் தலைநகரான ரைபேயின் மாவட்ட நீதிமன்றத்தில்தான்  இந்த முறைப்பாடு செய்யப்பட்டு்ள்ளது.  முறைப்பாட்டுக்குள்ளாகிய பெண்ணின் பெயர் லின். இவர் இடையிடையே பற்களைத் துலக்குவதுண்டு. தலைமுடியையும் கழுவிக் கொள்வாராம். அவ்வளவுதான்.

திருமணம் செய்த சமயம், இந்தப் பெண் வாரத்திற்கு ஒரு தடவை குளிக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருந்தாராம்.  பின்பு அதுவே மாதமொரு முறை என்று நீண்டிருக்கின்றது. ஆனால் இதுவே வருடம் ஒரு முறை என்று மாற்றம் கண்டபோது கணவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக தான் வருடத்தில் ஒரு தடவைதான் தன் மனைவியுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக, கணவன். நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளான். இதன் காரணமாக இந்தத் தம்பதியனருக்கு இன்று வரை பிள்ளைகளும் இல்லை. வயதாளியான தனது தந்தையைப் பராமரிக்கும் நோக்கோடு, மனைவி கணவன்  பாதுகாப்பு ஊழியராக செய்து வந்த தொழிலையும்  அனுமதிக்கவில்லை.. லின்னின் தாய் தினசரிச் செலவுக்குக் கொடுக்கும் சிறு தொகையில்தான் குடும்பம் ஒடிக் கொண்டிருந்தது.

மனைவி  எதிர்த்து வாதாடி இருக்கிறாள். கணவன் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் என்பது இவள் கதை. தன் பெற்றோர் தன் கணவன் மீது பிரியமாக இருந்திருக்கிறார்கள் என்றொல்லாம் சொல்லி இருக்கிறாள்.

ஆனால் நீதிமன்றம் விவாகரத்தை அனுமதித்து விட்டது. விசித்திரமான உலகமிது. குளியாது 12 மாதங்கள்…அதிலும் ஒரு பெண்… அப்பப்பா நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருக்கின்றது. ..

“ஐஸ்” ஆகிய கண்புருவங்கள்.

உறைய வைக்கும் குளிர், உலக நாடுகளை உலுப்பியெடுப்பது தொடர்கின்றது. இங்கே விடிகாலைப் பனிக்குளிரை நாம் நமது மண்ணில் பொறுக்க மாட்டாமல் அதுப்றறிக் கூறிக் கொண்டிருக்கிறோம். ஆனால் ருஷ்யாவிலோ. யக்குட்டியா என்ற பிராந்தியத்தில், வெகுவேகமாக இறங்கும் “வெப்ப நிலையை” கருவிகக் கூட அளவிட முடியாமல் திணறுகின்றன என்கிறார்கள்.

கடந்த செவ்வாயன்று இந்தப் பிராந்தியத்தின் சில பகுதிகளில் மைனஸ் 67 பாகை அளவுக்கு உறைநிலை கிடுகிடுவென இறங்கியிருக்கின்றது .  தலைநகரான மொஸ்கோவின் கிழக்கே  5300 கிலோ மீற்றர் துாரத்தில் உள்ள இந்தப் பிரதேசத்தின் ஜனத்தொகை சுமாராக 1 மில்லியன்.. மைனஸ் 40 சென்டிகிரேட்டாக இருந்தாலும், இங்குள்ளவர்க்ள மாணவர்க்ள பாடசாலை சென்றுவரும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் கடந்த செவ்வாயன்று பொலிஸார் பிள்ளைகளபை் பாடசாலை செல்ல அனுமதிக்கவில்லை. . பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு பொலிஸார் அறிவித்தல் அனுப்பியிருந்தார்கள். சில  பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.

ஒய்ம்யக்கோன் என்ற இந்தக் கிராமம் உலகிலேயே மிகவும் குளிரான பகுதிகளில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றது. தொலைக்காட்சியில் வெப்பநிலையைக் காண்பிக்கும் தெர்மோமீற்றரில் அதிகூடிய குளிராக மைனஸ் 50 வரையே, 2013இல்  அமைத்திருந்தார்கள். இப்பொழுது அதையும்..தாண்டி குளிர் இறங்கி விட்டதால், தெர்மோமீற்றரில் அடிவரை வெப்பநிலைகாட்டும் முள் இறங்கிவிட்டது. சென்ற வார முடிவில், தமது வாகனம் இடைநடுவே பழுதாகி விட்டதால், பொடி நடையில் வீடு போகலாமென்று புறப்பட்டவர்கள், கடுங்குளிரில் விறைத்து, சாவைத் தழுவி இருக்கின்றார்கள்.

வெளிப்புற ஊடகங்கள் இந்தக் கடுங்குளிரைப் பெரிதுபடுத்தினாலும், இப்படியான காலநிலைக்கு நன்கு பழகி விட்ட இந்தக் கிராமத்தவர்கள் குளிரைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.  இந்த நிலை எங்குமே ஒன்றுதான்! ஒன்றில் ஊறிப்போனவருக்கும், அதையே புதிதாய்ப் பார்ப்வருக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கத்தானே செய்கின்றது?

28.01

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *