வீடுகட்டிக் கொடுக்க விற்பனையாவது பெண்மையா?

வீடுகட்டிக் கொடுக்க விற்பனையாவது பெண்மையா?

5 views
0

 

எந்தச் சுவரில் போய் முட்டிக் கொள்வது? தன் பெற்றோருக்கு வீடு கட்டிக் கொடுக்க, தன் பெண்மையை ஏலத்தில் விற்பனை செய்ய முன்வந்துள்ளார் ஒரு 18வயது மொடல் அழகி! மாணவியான இவர் தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கவும், தன் பெற்றோருக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கவும், தன் பெண்மையை ஒரு மில்லியன் யூரோ பணத்தொகைக்கு ( சுமாராக 19கோடி ரூபாய்) ஏலத்தில் விற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார். இது தனது பெற்றோருக்கு தெரியாது என்று கூறும், இந்த இத்தாலிய அழகி,  ஏலத்தில் முடிந்த அளவு பணத்தை நான் சம்பாதித்து, எனது சகோதரியின் படிப்புக்கு உதவுவதோடு, பெற்றோருக்கு வீடும் வாங்கிக் கொடுக்க விரும்புகிறேன் என்று ”சண்” .இணையப் பத்திரிகைப் பேட்டியில் கூறியுள்ளார்.

தன்னை விட வயதில் அதிகமான ஒருவருடன் தான் உறவு வைத்திருந்ததாகவும், , அந்த மனிதர் தன்னைக் காதலித்ததாகவும், தன்னுடன் காலம் பூராவும் வாழ, தன் விருப்பத்தை வெளியிட்டிருந்ததாகவும் கூறும் இவர், தனக்கு வயது 16 மாத்திரமே இருக்கும்போது நிகழ்ந்த சம்பவம் இதுவென்றும், சிறிய வயதென்பதால் தான் உறவைத் துண்டித்து விட்டதாகவும் இவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பல இளம் பெண்கள் 3.1 மில்லியன் பவுண்ட்ஸ் (சுமாராக 66 கோடி ரூபாய்) வரை இணையத்தில் விற்பனையாகி இருப்பதை அறியவந்தேன். எனவேதான் இந்த ஏலத்தை நடாத்தும் இணையப் பக்கத்தை நான் அணுகியிருக்கிறேன் என்று இவர் கூறியிருக்கிறார். இந்த இளம் பெண் தெரிவு செய்து கொடுக்கும் மருத்துவர், இந்தப் பெண்ணை உடல் பரிசோதனை செய்து, அதற்கான அறிக்கையை , இந்தப் பெண்ணை வாங்குபவரிடம் கொடுப்பார். தன்னை வாங்குபவர் தன்னை அன்போடு அணுகுவாரா என்பதில் தனக்கு ஒரு சின்னப் பயம் இருப்பதாக இந்தப் பெண் தெரிவித்திருக்கிறார். அதே சமயம் இவ்வளவு பெரிய தொகையைத் தர முன்வரும் கனவான், தன்னோடு நிச்சயம் அன்போடு பழகுவார் என்ற நம்பிக்கையும் இருப்பதாக இவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வை எப்படிப் பார்க்கலாம்? “உடலை விற்று” படிக்க நினைப்பதோ, வீடு வாங்குவதோ, கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வதை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறதா?

அன்னாசிப் பழங்களும் அட்டகாசக் கடத்தலும்

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்னொரு சினிமாப் பாடல் வரி இருக்கின்றது. இனி அந்த வரியை மாற்றி கடத்தல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று பாடலாம் போல் இருக்கின்றது.

கடத்தலில் மன்னர்கள் தென்அமெரிக்கர்கள். இவர்க்ள இராஜாங்கம் இங்கு மிக மிக விரிந்த ஒன்று.. கோடி கோடியாய் டெலர்கள் புரளும் சாம்ராஜ்யம் இது. காட்டிக் கொடுப்பவர்களை ஈவிரக்கமின்றி கூறுபோடும் சாம்ராஜயம் இது. இந்தக கொழுத்த பணக்கார சாம்ராஜயம் கடத்தல்களில் இடறி விழுந்தாலும், மனம் சலித்து விடுவதில்லை. விடாக்கண்டர்கள் கொடாக்கண்டர்களாக  என்னதான் பின்னடைவைக் கண்டாலும், கடமையே கண்ணாகி விடுவதுண்டு.

ஸ்பானிய, போர்த்துக்கீஸ் பொலிஸார் இணைந்து, 745 கிலோ எடைகொண்ட கொக்கெயினைக் கைப்பற்றி இருக்கிறார்கள். இலத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து, அன்னாசிப் பழங்கள் வழியாக இவை “ஏற்றுமதி” செய்யப்பட்டிருக்கின்றன. மாதக்கணக்காக கசிந்த இந்த “அன்னாசிக் கடத்தல்” விவகாரம், கொலம்பியர்கள் சம்பந்தப்பட்ட, பன்னாட்டு கடத்தல் குழு சம்பந்தப்பட்டது என்ற தகவலை பொலிஸார் எப்படியோ மோப்பம் பிடித்து விட்டார்கள்.

கடந்த நவம்பர் மாதம் ஸ்பானிய பொலிஸார் மட்ரிட், பார்சலோனா நகரங்களில் 400 கிலோ எடை கொண்ட கொக்கெயினைக் கைப்பற்றி இருக்கிறார்கள்.  இந்தச் சம்பவம் பனாமாவிலிருந்து போர்த்துக்ல் நாட்டுக்கு அன்னாசிப் பழங்கள் ஏற்றுமதி செய்யும் ஒரு நிறுவனத்தினுடாக நடந்துள்ளது. இந்தக் கைதின் மூலம் கடத்தல்களில் நீண்டகாலமாக ஈடுபட்டு வரும் ஒரு  பன்னாட்டுக் குழுவினர் மாட்டியிருக்கிறார்கள். லிஸ்பன் துறைமுகத்தில் தரித்து நின்ற கப்பல்கள் சோதனையிடப்பட்டதன் முடிவிலேயே, இந்த “அன்னாசிப் பழங்கள்” அதிகாரிகளிடம் சிக்கியிருக்கின்றன. அன்னாசிப் பழங்களுக்குள் மெழுகினால் மூடபபட்ட சிறிய சிலிண்டர்களில் மொத்தம் 300 கிலோ கிராம் எடைகொண்ட கொக்கெயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..  பணமாக 400,000 யூரோவும் கைப்பற்றப்பட்டுள்ளது. . இத்ன பெறுமானம் சுமாராக 489,000 டொலர்கள்!

இனி அன்னாசிப் பழ ஏற்றுமதிக்கு ஒரு கும்பிடு போடவேண்டியதுதான். அடுத்த தடவை எந்தப் பழவியாபாரியின் தலை உருளுமோ தெரியவில்லை.

28.01

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *