ஊற்றும் பாலால் உன்னதமாகும் தாய்!

ஊற்றும் பாலால் உன்னதமாகும் தாய்!

10 views
0

வற்றாத நீர் ஊற்று நமக்குத் தெரியும் . ஆனால் “வற்றாத” பால் வளங் கொண்ட ஒரு தாய் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார். வழமையான ஒரு தாயின் மார்பகங்களிலிருந்து சுரக்கும் பாலை விட, நான்கு மடங்கு அதிகமான பால் இவரிடமிருக்கின்றது.

நம்பினால் நம்புங்கள். இவரிடமிருந்து 6 பைன்ட்-சுமாராக 11 போத்தல் பால் பெற முடிகின்றது. முதல் தடவையாக அம்மாவாகி உள்ள இவர், அலுவலகத்தில் பணிபுரிபவர். எனவே தினமும் இந்தப் பாலைச் சேகரிக்க, காலை5.45இலிருந்து இரவு 11.00 மணிக்குள் ஆறு தடவைகள் தன் மார்புப் பாலைச் சேகரிக்கிறார்.

31 வயதான இந்த அமெரிக்கப் பெண்மணியின் பெயர் கேற் கச்மான்.. இவருக்கு 4 மாதக் குழந்தையொன்று இருக்கின்றது.

இவ்வளவு பாலையும் இவர் என்ன செய்கிறார்? பாலைச் சேகரித்து, உள்ளூரில் உள்ள பால் வங்கிக்கு அனுப்பி வருகிறார். பல தாய்மார்களுக்கு தம் குழந்தைகளுக்கு கொடுக்க போதிய பால் சுரப்பதில்லை. இது அவர்களுக்கு உதவுவது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது என்கிறார் இந்தத் தாய்!

அலுவலகம், வீடு என்று ஓயாது நான் பாலைச் சுரந்து சேமித்து வைப்பது களையைத் தந்தாலும், இது பிறருக்கு உதவும் என்ற நினைப்பு , அந்தக் களைப்பைப் போக்கடித்து விடுகின்றது என்கிறார் இந்த உன்னதத் தாய்!

 

மண்கோட்டையில் வாழ்கின்றமன்னர்

மண்கோட்டை சிறுவர்களுக்கு பிடித்திருந்தாலும், பெறுமதி இல்லாத ஒன்று என்பதால், மண்கோட்டை கட்டும் பெரியவர்களை எவருக்குமே பிடிப்பதில்லை. ஆனால் பிரேசில் நாட்டிலுள்ள ஒருவர், இந்த மண்கோட்டையில்“அரசாட்சி” நடாத்தி வருவது, பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த 44 வயது “மன்னரின்” பெயர் Marcio Mizael Matolias . பிரேசிலின் தலைநகரில் வாடகை அதிகம் என்றும், தன்னால் அப்படியொரு வீட்டில் வாழ முடியாது என்று கூறும் மற்றோலியாஸ் , கடந்த 22 வருட காலமாக இந்த மண் கோட்டைக்குள் தன் “ராஜ்யத்தை” பரிபாலித்து வருகிறார் என்பது அதிசயத்தில் அதிசயம்.

தன் வீடு “இடிந்து” விழக்கூடாது என்பதற்காக, தினமும் தண்ணீா ஊற்றி, வீட்டைப் பலப்படுத்தி வருகிறார்.

உள்ளூர் மக்களால் “மன்னர்” என்ற பட்டப் பெயரைப் பெற்றிருக்கும் இவர், கட்டைப் பிரமச்சாரி. நிறைய வாசிப்பார். மீன் பிடிக்கச் செல்வார்.

மணல் வெப்பத்தை நன்றாக உள்வாங்கும் என்பதால் சில நேரங்களில், நான் நண்பனின் வீட்டில் இரவு துாங்குவதும் உண்டு என்று சொல்லும் இவர், வீட்டுத் “திருத்தல் பணிகளுக்கு” தானே முழுப் பொறுப்பு என்று கூறுகிறார்.

3 சதுரக் கிலோமீற்றர் பரப்பளவை ஆக்ரமிக்கும் , இந்த மணல் வீட்டுக்குள் ஏராளமான நுால்கள் நிறைந்து கிடக்கின்றன என்கிறார்கள்.

வித்தியாசமான மனிதர்களின் விசித்திரமான வாழ்வு!

03.02.18

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *