லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்  லேகோ!

லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்  லேகோ!

5 views
0

ஐபாட் ஐபோன் என்று குட்டிகள் தங்கள் புலனைக் கெடுத்துக் கொள்வதைத் தடுக்க இருக்கவே இருக்கிறது லேகோ! ஐரோப்பிய நாட்டுத் தமிழ் பிள்ளைகளுக்கு பல பெற்றோர்கள் இந்த லேகோவைக் கொடுத்துத்தான் ஐபாட்டை மெல்ல மெல்ல மறக்க வைத்துவருகிறார்கள். இந்த வியடத்தில் ஐரோப்பாவிலுள்ள பெற்றோர்கள், “லேட்” என்றாலும், இப்பொழுதாவது லேகோ பக்கம் தம் பிள்ளைகள் பார்வையைத் திருப்ப வைத்திருப்பது வரவேற்கத் தக்கதே!

தனது 60வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது லேகோ. சிறு சிறு பிள்ளாஸ்டிக் துண்டுகளைப் பொருத்தி, ஒரு உருவத்தைக் கொண்டுவருவதே நாம் செய்ய வேண்டியது. சிறுவர் தொடக்கம் பெரியவர் வரை, அவரவர் வயதிற்கேற்ப இந்த லேகோ ஆயிரக்கணக்கான உருவங்களில் வருகின்றது.

டென்மார்க்தான் இந்த லேகோவை அறிமுகப்படுத்தியது. இதன் விலை அதிகம். ஆனால் விலைக்கேற்றவாறு தரமான பொருள். மிகச் சிறிய அளவிலான துண்டுகளை மிகச் சரியாகப் பொருத்தி, வேண்டிய உருவத்தைக் கொண்டுவருவது பெரிய சவாலான விடயம்.

“leg” “godt” என்ற இரு டானிஷ் மொழிச் செற்களின் இணைப்பே “லேகோ”! இதன் பொருள் “நன்றாக விளையாடுங்கள்” என்பதாகும்.

டென்மார்க்கிலுள்ள இவர்களது கண்காட்சியகத்தில் இருக்கும் லேகோ மரம் புதுமையானது. 15.5 மீற்றர் உயரமான இதைச் செய்து முடிக்க எடுத்த நேரம் 24,350 மணித்தியாலங்கள். இதில் உபயோகிக்கப்பட்டது 6.3மில்லியன் துண்டுகள்! இந்த மரத்தில் ஏறி நிற்கும் அளவுக்கு இது பலமானது.

நீங்களும் “லேகோ” விசிறியா?

 

இனிப்பைக் கெடுக்கும் செய்தி இது

யாழ்ப்பாண வெயிலுக்கு, வெளியில் சாக்லெட்டை வைத்து, பின்பு சாப்பிடுவது என்பது முடியாத ஒன்று! குளிர்சாதனப் பெட்டியில் வைத்தே இனிப்பைச் சுவைக்க முடியும்.

ஆனால் இங்கே புதினம் என்னவென்றால், சாக்லெட்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால், அதன் சுவை கெட்டு விடுமாம். இது பிந்திய செய்தி. சாக்லெட்டின் சுவையை குளிர்சாதனப் பெட்டியின் குளிர்மை கெடுத்து விடும் என்று எச்சரிக்கிறார்கள் வல்லுனர்கள்!

பொதுவாகவே தரமான சுவையான சாக்லேட்டுகளுக்கு, நல்லதொரு வாசனை உண்டு. நாசியில் வைத்து முகர்ந்து பார்க்கும் போது உணரலாம். குளிர்சாதனைப் பெட்டியில், வைக்கப்பட்டால், சுவை மட்டுமல்ல இந்த வாசமும் குறைந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள்.

சரி குளிர்சாதனப் பெட்டியை மறந்து விடுவோம். கிடைப்பதை ஒரேயடியாகச் சாப்பிட்டு, “சீனி வியாதி”  என்ற வில்லங்கத்தை விலைக்கு வாங்காமல், எப்படி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது?

இருட்டான வரட்சியான இடத்தில் உங்கள் சாக்லெட்டை பாதுகாப்பாக வைக்கலாம். 10-20 செல்சியஸ் வெப்பநிலை கொண்ட அலுமாரியில் வைத்தால் சாக்லெட் உருகாது என்கிறார்கள். அதே வல்லுனர்கள்.

இனிப்பும் வாசமும் பெற இந்த முறையை முயற்சித்துப் பார்க்கலாமே!

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *