அறிந்த மிருகம் அறியாத கதை(8)மூர்க்கத்தனமான காட்டெருமைகள்

9 views
0

சிங்கம், புலிகளைப் பற்றி நாம் பெரிதாகப் பேசி வருகிறோம். ஆனால் இந்த மிருகங்களுக்கு எந்த விதத்திலும் குறையாத பலசாலிகளாக காடுகளில் திரிகின்ற  காட்டெருமைகள் பற்றி  நாம் எவ்வளவு துாரம் அறிந்து வைத்துள்ளளோம்?

அடர்ந்த காடுகளில் திரிகின்ற மிக ஆபத்தான விலங்குகளில், காட்டெருமையும் ஒன்று என்பதை நீங்கள் அறிவீர்களா? பார்ப்போரை மிரள வைக்கும் உறுதியான தேக அமைப்புடனும், கூரிய கொம்புகளையும் கொண்ட  ஆபிரிக்க காட்டெருமைகள் மிக மிக  ஆபத்தானவை. ஆபிரிக்ககாடுகளில் மிகவும் ஆபத்தானவை என்று பட்டியலிடுபவர்கள், காட்டெருமைக்கும் ஓர் இடம் கொடுக்கின்றார்கள்.

சிங்கம் ஒரு காட்டெருமையைத் தாக்க முற்படும்போது, பெரும் அச்சத்தோடுதான் தாக்குகின்றது. எருமை கூட்டம் வந்துவிட்டால், சிங்கத்தை்க குத்திக் குதறிக் கொன்று விடும். அந்த அளவுக்கு பலசாலி மட்டுமல்ல, மூர்க்கத்தனம் கொண்ட மிருகங்கள் இவை!

சுமாராக 500 தொடக்கம் 1000கிலோ வரை எடை கொண்டவை இந்தக் காட்டெருமைகள். கேப் எருமை இனந்தான் அளவில் பெரியது.  ஒரு நாளில் 18 மணி நேரம் மேய்ச்சலு்க்காக அலைந்து கொண்டிருக்கும் தன்மை கொ்ண்டவை! இவற்றின் பலமே கொம்புகள்தான். குறுகிய கழுத்தும், பெரிய தலையும் கொண்ட, கட்டுமஸ்தான உடலமைப்பை இவை கொண்டு்ளளன.

ஆணாக இரு்நதாலென்ன பெண்ணாக இருந்தாலென்ன இரண்டுக்குமே வளைந்த நீண்ட கொம்புகள் உள்ளன. ஆண் எருமைகளது கொம்புகள் 20 வீத அதிகரித்த நீளத்தைக் கொண்டுள்ளன.. இவை நெற்றியடியில் தலைமேல்  திரண்டு, ஒரு பாதுகாப்புக் கேடயமாகமாறியிருப்பதோடு, ‘நான்தான் தலை‘ என்ற ஒரு  தோரணையையும் ஏற்படுத்தி விடுகின்றன. ஒரு ஆபிரிக்க காட்டெருமையின் மு்ன உடற் பகுதி, பிற்பகுதியை விட எடை கூடியது என்பது பலர் அறிந்திராத ஒரு தகவல்தான். அதிகமாக உள்ள முன் பக்க எடையை கால்கள் தாங்கும் விதமாக, முன்னங்கால்களின் குளம்புகள் அகன்று விரிந்துள்ளன. எருமை என்பது பொதுவாகக் கறுப்பு நிறம் என்று தோற்றினாலும், இனத்து்க்கு இனம் நிறங்களில் மாற்றங்கள் உண்டு. கறுப்பு, தடித்த பிரவுண், சிகப்புக் கலந்த பிரவுண் என்று வேறுபட்ட நிறங்களில் வெவ்வேறு இனங்களைக் காணமுடியும்.

பிரபல்ய ஆங்கில  அமெரிக்க  எழுத்தாளர் ஏர்ணஸ்ட் ஹெமிங்வே  தன்னால் வேட்டையாடப்பட்ட   பாரிய காட்டெருமையுடன் ஒன்றாக நின்றெடுத்த படம்(1953-54)

தெற்கத்தய சவான்னா புல்வெளிக் காட்டெருமை என்றும், கேப் காட்டெருமை என்றும் அழை்ககப்படும் இனமே அளவில் பெரியது. இது தென் ஆபிரி்க்காவிலும், தென் கிழக்குஆபிரிக்காவிலும் காணப்படுகின்றது. தென் ஆபிாி்க்கா, பொட்ஸ்வானா, கென்யா ஆகிய நாடுகளின் காடுகளே இவற்றின் வதிவிடங்கள்!மேற்கு ஆபிாிக்க புல்வெளிகளில் திரிபவை சூடான் எருமைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இவை சூடான், கானா, பெனின். கமரூன் காடுகளில் காணக்கூடியவை . மத்திய ஆபிரிக்க காடுகளில் இருப்பவை நைல் எருமைகள்! மத்திய ஆபிரிக்க குடியரசிலும், சாட்  என்ற நாட்டிலும் இ்நத இன எருமைகளைக் காணலாம்.  இன்னொரு மிகச் சிறிய இனம், கொங்கோ எருமை என்ற பெயர் கொண்டது. இது மேற்கத்திய மத்திய மழைக் காடுகளில் காணப்படுகின்றது.

‘ஐந்து தலைகள்‘ என்ற வகையில், ஆபிாிக்க காடுகளில் வேட்டையாடுபவர்கள், ஐந்து மிருகங்களை இலக்கு வைக்கின்றாார்கள். சிங்கம்,சிறுத்தை, காண்டாமிருகம்,யானை என்ற நான்கு மிருகங்களோடு அடுத்து வுருவது ஆபிரிக்க காட்டெருமைதான்! இந்த ஐந்து பலசாலிகளையும் பார்க்க வருவதோடு நிறுத்திக் கொண்டால், இவை அழியாது பாதுகாக்கப்படும் என்பது உறுதி.

மேய்வதற்கு நிறையப் புல்லும், தாகசாந்திக்கு போதுமான அளவு நீர்வசதியும், மறைந்து கொள்ள பற்றைக்காடுகளும் உள்ள இடத்தையே காட்டெருமைகள் நாடும். தாம் இரு்ககும் இடத்திலிருந்து 20 மீற்றர் தொலைவில் நீர் நிலைகள் இருப்பதை இவை விரும்புகின்றன. கடல் மட்டத்திலிருந்து 4000மீற்றர் உயரமான  பிராந்தியங்களிலும் இவற்றைக் காண முடியும். பொதுவாக தென் மேற்குஆபிாிக்காவின் வரண்ட பிரதேசங்களிலும், கிழக்கிலும்  காட்டெருமைகள் வாழ்வதில்லை.

பொதுவாக இவை கூட்டமாகவே வாழ்கின்றன. கடுமையான ஆட்சி நிலவும் எருமைக் கூட்டத்தில், பலசாலியான ஒரு ஆண் ‘தலை‘ பதவியை வைத்துக் கொண்டு, கூட்டத்தை தன் கட்டு்ப்பாட்டுக்குள் வைத்திருக்கும். தங்கள் உடலை ஒன்றோடு ஒன்று தேய்த்து, எந்தத் திசைியில் செல்வது என்பதை வெளிப்படுத்துகின்றன. பெரும்பான்மை சொல்வதை ஏனையவை ஏற்றுக் கொள்கின்றன.  வரட்சியான கால்ஙகளில் ஆண் பிரமச்சாரிகள் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று, பிரமச்சாரிக்ள அணியம்   ஒன்றை உருவாக்கிக் கொள்ளும். , மிருகங்கள் ‘உறவு‘ கொள்ளும் காலங்களில் , இந்தஆண்கள் மீண்டும் வந்து  கூட்டத்தோடு இணைந்துகொ்ள்ளும். கன்றுகளை காவல் செய்வது இவற்றின்பொறுப்புத்தான்.

இந்த மிருகங்கள் உறவு வைத்துக் கொள்ள ஒரு ‘ஸீஸன்‘ என்பது இல்லாதபோதும்,ஆபிரிக்க காட்டெருமைகள் மழைகாலத்தில்   கூடுதலாக இணைகளோடு சேர்கின்றன.  ஒரு கன்றை ஈன இவற்றிற்கு  ஏறத்தாழ 12 மாத காலம் தேவை! அதிலும் அவை ஒரு கன்றை மாத்திரமே ஈனுகின்றன. பொதுவாக 2 கன்றுகள் ஈனுவது என்பது அபூர்வமானது. முதல் இரண்டு வாரங்கள் கன்று பற்றைகளுக்குள் ஒளித்து வைத்தே வளர்க்கப்படும்.  சுற்றிவர ஒரு வேலி போல பெரிய காட்டெருமைகள் பாதுகாப்பாக நின்று கொள்வது வழமை.குட்டிகளுக்கு 6 மாத கால வயதாகும்போது, தாய்ப் பாலை மறந்து,  புல் மேய்ச்சல் கற்றுக் கொடுக்கப்படுகின்றது

எருமை வேட்டை என்பது சிங்கங்களுக்கு சுலபமாக அமைவதில்லை.ஒரு கூட்டம் சிங்கம்  வந்தால்தான், ஒரு காட்டெருமையைக் கொன்று உண்ண முடியும். ஆற்று முதலைகள் வயதாளிகளான அல்லது  தனித்து விடப்பட்ட காட்டெருமைகளையே கொல்கின்றன.  புதிதாகப் பிறந்த கன்றுகளை சில சமயங்களில், சிறுத்தைகள் அல்லது கழுதைப் புலிகள் பிடித்து தமக்கு இரையாக்கிக் கொள்வது்ண்டு. இந்த மூர்க்கத்தனமான மிருகங்கள், ஆரம்பத்தில் கூறியதுபோல மக ஆபத்தானவை. ஒவ்வொரு வருடமும் இந்த மிருகங்களால் 200 பேர் வரையில் கொல்லப்பட்டு வருகிறார்கள்.  ‘கறுப்பு மரணம்‘ ‘விதவை உருவாக்குபவர்‘ என்ற இரு ஆங்கில அடைமொழிகளும் காட்டெருமைகளுக்கே சொல்லப்படுகின்றன. ஏனைய காட்டு விலங்குகளை விட எருமைகளால் கொல்லப்படும் மனிதர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

எடைபோட முடியாத இதன் மூர்க்கத்தனமான சுபாவம் காரணமாக ஆபிரிக்க காட்டெருமைகளை  இன்றுவரையில் எவராலும் கட்டுப்படுத்த முடியாது்ள்ளது. இது அழியும் ஓர் இனம் இல்லை என்பது மனதுக்கு ஆறுதலளிக்கும் விடயம்.  என்றாலும் இவை வதியும் பிரதேசங்கள் விவசாயத்திற்காக அழிக்கப்பட்டு வருவதால், சில பிரதேசங்களில் இவற்றின் தொகை அருகிவருகின்றது. ……

04.02.2018

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *