
எதுவாக இரு்நதுவிட்டுப் போட்டும். இரட்டைச் சந்தோஸம் ஏதோவொரு விடயத்தில் எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை. இவருக்கு அது கிடைத்திருப்பது மாத்திரமல்ல் மூன்று மடங்கு சந்தோஸத்திலும் இவரை ஆழ்த்தியிருக்கின்றது.
அப்படி என்னதான் நடந்தது?
500,000 பேரில் ஒருவருக்கு்க கிடைக்கும் அரிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்து்ளளது.
மூன்றாவது ஜோடி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார் மிஸ்டி லாங் என்ற இந்த 35 வயதுப் பெண்! இவருக்கு முதலில் கிடைத்த இரட்டையர்கள் பெயர் அலெக்ஸ், லெக்ஸி. இருவருக்கும் வயது 9. இரண்டாவது பிரசவத்தின் போது பிறந்தது கலிஸ்ரா. இப்பொழுது 7 வயது. அதையடுத்து லேஸி, நாஸ் என்று இரட்டைக் குழந்தைகள். இவர்களது தற்போதைய வயது 5. இதையடுத்து, இப்பொழுது வயது 10 வாரங்களாக உள்ள லானா, பீனிக்ஸ் என்ற இரட்டைக் குழந்தைகள். இந்த 35 வயதுத் தாயின் மூன்றாவது ஜோடி இரட்டைக் குழந்தைகள்தான் இவர்கள்!.
ஒன்றோ இரண்டோ பிள்ளைகள் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன் என்றிருந்தவருக்கு, இறைவன் குழந்தைச் செல்வத்தை வஞ்சனையின்றி அள்ளிக் கொடுத்திரு்க்கின்றார்.
மிஸ்டி என்ற இந்தப் பெண் ஓர் அமெரிக்கப் பிரஜை!அவரே பிறக்கும்போது இரட்டைக் குழந்தைகளில் ஒருவராகத்தான் பிறந்திருக்கின்றார். தனது மகள் கலிஸ்ரா , தான் இரட்டைப் பிள்ளைகளில் ஒருவராக இல்லாதததால், ஒரு பிள்ளையாக தனித்து விடப்பட்டு விடுவோமா எனப் பயப்பிடுவதாக தாய் குறிப்பிடுகிறார். அதனால் வீட்டில் உள்ள எமது நாய் றோசியுடன் இரட்டைப் பிள்ளை போல மிகவும் நட்பாக இருக்கிறாள் என்று மேலும் கூறுகிறாள். தனது முதல் கணவனுக்கு ஒரு ஜோடி இரட்டைக் குழந்தைகளும், கலிஸ்டாவும் கிடைத்ததாகவும், இரண்டாவது திருமணத்தின் பி்ன்னர்தான் ஏனைய குழந்தைகள் கிடைத்தன என்று இவர் மேலும் கூறுகிறார்.
செலவை எப்படிச் சமாளிக்க முடிகின்றது?
7 சிறு பி்ள்ளைகளைப் பராமரிக்கும் செலவு என்றுமே சிறிதாக இருப்பதில்லை. பால், உடுப்புகள், விளையாட்டுப் பொருட்கள் என்று மாதாந்தச் செலவு, சுமாராக 70000 ரூபாயை எட்டும் என்கிறார் இவர்.
இந்தச் செலவு, பராமரிக்கும் பொறுப்பு, என்பதையெல்லாம் தாண்டி, வீடு நிறைந்து கிடப்பது பெரு மகிழ்வைத் தருகின்றது. என்று குதுாகலத்தோடு சொல்கிறார் இவர்!
யார் இன்று கொழுத்த பணக்காரர்?

வருடாவருடம் உலகின் அதிசிறந்த பண்ககாரர் பட்டியலை எடுத்து வருகின்றார்கள் . இந்த முதலிடம் கிடைக்கும் மனிதரும் மாறிக்கொண்டேயிருக்கி்னறார். இந்த உலகி்ல் பாதித் தொகையாக , வறுமையில் வாடுபவர்களது மொத்தச் சொத்து, உலகின் எட்டுக் கொழுத்த பணக்காரர்களது மொத்தச் சொத்துக்கு நிகரானது என்கிறார்கள். இந்த எட்டுப் பேரின் கைகளிலும் பல இராட்சத நிறுவனங்களின் நிர்வாகம் இருக்கின்றது. இவர்களது நிறுவனங்கள் கொழுத்த இலாபம் ஈட்டிவருகின்றன என்பது கவனிக்கத் தக்கது.
இந்த வருடம் பெப்ரவரிமாத அறிக்கையின்படி, Jeff Bezos தான் முதலிடத்தில் நிற்கின்றார்.
யார் இவர்?
இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் இணைய வியாபாரியான அமேசன் நிறுவனத்தின் சொந்தக்கார்தான் இவர்! இவருடைய சொத்து மதிப்பை 1,68,000 பில்லியன் ரூபாய்களென மதிப்பிடுகின்றார்கள். கிறிஸ்மஸ் கொண்டாட்ட காலத்தில், இணைய வர்த்தகம் ஓஹோவென்று இருந்தமை காரணமாக, உச்சத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார் இந்தப் பணக்காரர்.
இந்தப் பணக்காரர்களை வருடாவருடம் பட்டியலிடும் உலகப் பிரபல்ய சஞ்சிகையான Forbes 2017க்கான அதி உச்ச பணக்காரர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி முதலிடம் பெறுபவர் மைக்ரோசொப்ட் நிறுவன முன்னாள் அதிபர் பில் கேட்ஸ்! அவரது சொத்து மதிப்பு அமேசன் அதிபரை விட 172 பில்லியன் ரூபாய்கள் அதிகமெனக் கூறுகின்றது. இன்னொரு அமெரிக்க முதலீட்டாளரான Warren Buffet இரண்டாம் இடத்தில் சுமாராக 150 பில்லியன் ரூபா சொத்து மதிப்புடன் நிற்க, மூன்றாம் இடந்தான் அமேசன் உரிமைாளருக்குக் கிடைக்கின்றது
ஆனால் களைகட்டிய நத்தார் வியாபாரம், அமேசனை இந்த வருடம் முதலிடத்திற்கு தள்ளியிருப்பதைக் கவனித்தீர்களா? முகநுால் உரிமையாளருக்கு 5ம் இடம் என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்!