வந்தது புதுவருடம் வாங்குவோம் கைவிசேசம்

வந்தது புதுவருடம் வாங்குவோம் கைவிசேசம்

8 views
0

சீனாவில் இனித்தான் ‘தை‘ பிறக்கப் போகின்றது. அதாவது நமக்கெல்லாம் பிறந்து விட்ட புதுவருடம், சீனாவில் இந்த மாதம் 16இல்தான் பிறக்கப் போகின்றது. தமிழருக்கு சிததிரை14இல் புதுவருடம் பிறப்பது போல, சீனர்கள் பெப்ரவரி 16இல்தான் தங்கள் புதுவருடப் பிறப்பைப் பொண்டாடுகிறார்கள்.

வண்ணமயமான விழா இது! ஒரு நாளில் முடியும் கொண்டாட்டம் அல்ல இது! இரு வாரங்களுக்கு மேல் தொடர்வது இந்த விழா. தங்கள் உறவினர்களைச் சந்திக்க நெடுந்துாரம் பயணித்து, உறவினர்களுடன் ஒன்றாக உண்டு களிக்கும் பெருவிழாஇது! சந்திரனை அடிப்படையாக வைத்து கணிக்கப்படும்  சீனர்களது நாட்காட்டியில், புதுவருடப் பிறப்பு தினம், ஆண்டுக்குஆண்டு மாறிக்கொண்டே இருக்கும் பொதுவாக ஜனவரி 21க்கும் பெப்ரவரி 20க்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில்தான் வருடப் பிறப்பு வருவதுண்டு.

பாரம்பரியமாக இடம்பெறும் புதுவருட நிகழ்வுதான் சிங்க நாட்டியம்! வருடப் பிறப்பிற்கு முதல் நாளன்று, வீட்டின் துரதிஸ்டங்கள் போய்த் தொலையட்டும் என்பது போல், வீடு முழுவதும் பெருக்கப்படும். உறவினர்கள் ஒன்றாக உட்கார்ந்து  இரவு உணவருந்துவார்கள். நம் வழமைப்படி, ஆனால் சற்று வித்தியாசமாக, சிகப்பு நிற காகித உறைகளில் வைத்து ‘அதிஸ்டப் பணம்‘ சிறார்களுக்கு வழங்கப்படுவதுண்டு. இது டிஜிட்டல் உலகமல்லவா? சிகப்பு நிறத்தில் ஒரு ‘அப்ஸ்‘ இருக்கிறது. சில பெற்றோர்கள் கணனி மூலம், இதற்குப் பணம் அனுப்புவதுண்டு. பிறக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு மிருகத்தின் பெயர் கொடுபடுவது வழமை. 12 வருடங்கள் கழித்த பின்பே அதே மிருகத்தின் பெயர் வரும். அந்த முறையில் இந்த வருடம் ‘நாய் வருடம்‘ என்றே அழைக்கப்படும். இறுதியாக 2006இல் நாய் வருடம் பிறந்திருக்கின்றது.

அதென்ன 12 மிருகங்கள்?

எருது, குதிரை, ஆடு, சேவல், பன்றி, நாய் வீட்டு வளர்ப்பு மிருகங்களாகவும்,சீனர்களுக்கு விரும்பிய காட்டு உயிரினங்களாக எலி, முயல், புலி, டிராகன், பாம்பு, குரங்கு ஆகியனவும் , ஆண்டுகளுக்கு இடப்படும் பெயர்களாகின்றன. கொண்டாட்டங்களிலும் வித்தியாசங்கள் இருக்கவே செய்கின்றன.

பத்தொன்பது வயதாகியும்‘ பயணத்தடை இல்லை!

பெரிய தொகை கொடுத்து ஒரு விமானச் சீட்டை வாங்கிவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் பயணம் ரத்தாகும் போது, வேண்டாத பண விரயத்தால் மனம் வலிக்கின்றது. ஆனால் என்ன செய்வது,? ஒரு விபத்துப் போல இடம்பெறும் நிகழ்வுகளை நாம் என்றுமே தவிர்க்க  முடிவதில்லை..

அவர் பெயர் ஜோண் வோக்கர்.  199இல் தனது மைத்துனனின் திருமண வைபவத்தில் கலந்துகொள்ளும் நோக்கோடுதான் அவர், விமானச் சீட்டை வாங்கியிருந்தார். ஆனால் எதிர்பாராத காரணங்களால் அவருக்கு பயணிக்க முடியாமல் போயிற்று.

பணத்தைத் திருப்பித் தருமாறு கோரியபோது அதிகாரிகள் சம்திக்கவில்லை. ஆனால் எதிர்காலப் பயணமொன்றில் இந்தப் பயணச்சீட்டை உபயோகிக்க முடியுமென்பதே அவர்கள் தமது கடிதத்தில் அளித்த விளக்கமாக இருந்தது,

அந்த நேரம் எந்தப் பயணத் திட்டமும்  ஜோணிடம் இருக்கவில்லை என்பதால், பயணச் சீட்டை

யம், நிறுவனத்தின் பதில் கடிதத்தையும்   பாதுகாப்பான ஓர் இடத்தில் வைத்துவிட்டு, அதைப் பற்றியே அடியோடு மறந்து விட்டார். சமீபத்தில் வீடு துப்பரவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோதுதான், ‘பழைய  குப்பைகளை‘   கிளறும் வாய்ப்பு  இவருக்குக் கிடைத்துள்ளது.

பயணச்சீட்டு  ஒன்றைக் கண்டார். அது சம்பந்தமான  நிறுவனக் கடிதத்தையும் கண்டார்.  அதே நிறுவனம் இன்னமும்இயங்கிக் கொண்டிருப்பதால், ஒருவேளை இனிவரும் கால்ஙகளிலும் பயணிக்க அதிஸ்டம் கிட்டலாம் என்ற நப்பாசையுடன் நிறுவனத்தின் பல பிரிவுகளுக்கும் சென்றார். ஆனால் எவருமே உருப்படியான ஒரு முடிவை எடுக்கவில்லை., டுவிட்டர் மூலம்  அந்த நிறுவனத்துடன் தொடர்பு கொண்டுள்ளார். ஒரு சில நாட்களுள் பதில் வந்தது.

நிஜத்தில் இந்தப் பயணச் சீட்டை விநியோகித்த யுனைட்டெட்ஸ் நிறுவனம், வங்குரோத்தில்  2002ம் ஆணடு மூடப்பட்டு விட்டது என்றும். அவர்களது நிலுவைகள் கடன்கள் எல்லாமே விலக்கப்பட்டு விட்டன.  என்றும் அப்படியொரு நிலையில் இந்தப் பயணச் சீட்டு மதிப்பற்றது என்ற விளக்கமளித்தவர்கள். இப்படியொரு இகட்டான நிலையில் , அந்தப் பயணச் சீட்டுட்ன மீண்டும் பயணிக்க அனுமதிக்கிறோம் என்ற கூறியுள்ளார்கள்.

இன்றைய நிலையில், சுமாராக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான, இந்தப் பயணச் சீட்டில், மீண்டும் பறக்கத் தயாராகின்றார் இந்த மனிதர்.

ஆனால் எங்கே பறப்பது எ்னபது, இந்த மனிதரைக் குழப்பியடிப்பதாகக் கூறுகிறார்கள.

இருந்தாலும் குழப்பம். இல்லாவிட்டாலும் குழப்பம் இதென்ன பொல்லாத உலகமப்பா?

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *