முப்பத்தாறு வயதில் மீண்டும் முதலிடம்.

முப்பத்தாறு வயதில் மீண்டும் முதலிடம்.

6 views
0

மின்னல் வேகத்தில் வரும் பந்தின் போக்கை, அதே வேகத்தில் கண்டறிந்து, அதை எதிர்கொண்டு சரியாக அடிப்பது என்பது சுலபமான ஒன்றல்ல. எதிலும் வேகம் எங்கும் இன்றைய தாரக மந்திரமாக இருக்க, டென்னிஸ் விளையாட்டு மட்டும் என்ன விதிவிலக்காக, அசுர வேகத்தில், பந்தை அடித்து ‘ஏஸ்‘ மழை பொழிந்து, வெல்பவர்கள் இன்று அதிகரித்து வருகிறார்கள். ஆணென்றாலும் சரி, பெண்ணென்றாலும் சரி இதற்குவிதிவிலக்கல்ல..

வருடக்கணக்காக விளையாடி வரும், சுவிஸ் நட்சத்திர டென்னிஸ் வீரர் றோஜர் பெடரர், மீண்டும், உலக தரத்தில் முதலாம் இடத்தைக் கைப்பற்றி, தனது ரசிகர்களை திகைக்க வைத்திருக்கிறார். 1998இல் ஆரம்பித்த தனது டென்னிஸ் விளையாட்டை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறார் 37 வயதைத் தொடப்போகும் இந்த அசத்தலான வீரர்.!

மிக அதிக வயதில், முதலாம் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனையை இவர் உருவாக்கி இருக்கின்றார். பெப்பரவரி19 தொடக்கம், 36 வயதான இவர்,  முதலாம் இடத்தைத் தனதாக்கிக் கொள்கிறார். 2005ல் தனது 33வது வயதில், அமெரிக்கடென்னிஸ் வீரர் அன்டரே அகாசி முதலாம் இடத்தைப் பிடித்து செய்த காதனை, 13 வருட இடைவெளியில் பெடரரால், உடைக்கப்பட்டுள்ளது.

 

இந்த உலக தரத்தை நிர்ணயிக்கும் டென்னிஸ் அமைப்புக்காக(ATP)  இவர் இதுவரையில் கலந்து கொண்ட சுற்றுப்போட்டிகளின் தொகை 95!முதலாம் இடத்தைக் கைநழுவவிட்டு, மீண்டும் முதலாம் இடத்தைப் பிடிக்கும் காலத்தைப் பற்றியபுள்ளி விபரங்களைப் பார்ப்போம். 5 வருடங்களும், 106 நாட்களும் பெடரருக்கு. மீண்டும் முதலிடத்தைக் கைப்பற்ற தேவைப்பட்டுள்ளது. அகாசி 3வருடங்கள் 142 நாட்கள் இடைவெளியில் இதைச் சாதித்துள்ளார். இன்னொரு அமெரிக்கரான ஜிம்மி கொன்னேர்ஸ்  எடுத்த காலம் 3வருடங்கள் 65 நாட்கள்.

முதற்தடவையாக முதலாம் இடத்தைப் பித்த காலத்திற்கும், இறுதியாக முதலாம் இடத்தைப் பிடித்த காலத்திற்கும் இடையில் உள்ள காலத்தைக் கணக்கிட்டால், அதில் நஅதி நீண்ட காலத்தோடு, றோஜர்தான் முன்னிற்கிறார். 14வருடங்கள் 17 நாட்களின் பின்னர், முதலிடத்தில் ஏறி  உடகார்ந்திருக்கிறார் பெடரர். ஸ்பானியவீரர் நடாலுக்கு 9 வருடங்களும் 184 நாட்களும் தேவைப்பட்டுள்ளன.  ஜிம்மி கொன்னேர்ஸ்  எடுத்த காலம் 8வருடங்கள்339 நாட்கள்.

கோடி மேலே கோடி சேர்த்து மாடி மேலே மாடிகட்டும் இந்தச் சீமான் கொழுத்த பணக்காரர்! அதிலும் டென்னிஸ் வீரர்களுக்கு கொடுபடும் பணமும் பெரிதென்பதால், வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்துவரும் பெடரர், பண மழையில் குளிப்பவர்!சமீபத்தில் விடுத்த ஓர் அறிக்கையின் பிரகாரம், ஒரு குழுவாக இல்லாமல் தனியனாக விளையாடும் விளையாட்டு வீரர்கள், வருமானத்தில் முதலிடம் சுவிஸ் வீரருக்குததான் என்று அறிவித்துள்ளார்கள்.

 

டென்னிஸ் சம்மேளனததின் இறுதி மோதலில் இவர் வென்றபின்பு, இவர் வருமானம் 110 மில்லியன் டெலர்களைத் தாண்டிவிட்டதாக அறிவித்துள்ளார்கள். முன்னர் Golf  விளையாட்டில் மின்னிய அமெரிக்கரான ரைகர் வுட்ஸின் சம்பாத்தியத்தை  போர்ப்ஸ் சஞ்சிகை முதலாம் இடத்தில் வைத்து கௌரவித்திருந்தது.

கடந்த ஆண்டில் இவர் மிக முக்கியமான இரு சுற்றுப் போட்டிகளை(அவுஸ்திரேலிய ஓபின், விம்பி்ள்டன்) வென்றபோது, பெருந்தொகையான பணத்தை வென்றெடுத்திருந்தார். சமீபத்தில் போப்ஸ் சஞ்சிகை வெளியிட்ட ஓர் அறி்க்கைியல் இவரது வருமானம் 110,235,68 டொலர்கள் என்ற அறிவித்திருந்தது. இந்த அறிக்கை வெளியிட்ட பின்னர், இவரடைந்த இன்னும் சில வெற்றிகள், இவரது வருமானத்தை, மேலும் உயர்த்தி இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஒல்லாந்து நாட்டின் றொட்டர்டாம் நகரில் இடம்பெறும் சுற்றுப் போட்டியில், கால் இறுதியில், எதிராளியைவென்றபோதே, இவருக்கு இந்த முதலிடம் கைவசமானது.‘கிரான்ட் ஸ்லாம்‘ என்று அழைக்கப்படும், முக்கிய டென்னிஸ் சுற்றுப்போட்டிகளில் 20ஐ வென்ற வீரர் இவர்!  இறுதியாக வருட ஆரம்பத்தில் இடம்பெறும் அவுஸ்திரேலியன் ஓபின் கிண்ண்த்தை தனதாக்கினார்.

2016இல் முழந்தாள் காயம் காரணமாக. பின்னடைவு ஏற்பட்டபோது, மீண்டும் முதலாம் இடத்தைப் பிடிப்பது மிகச் சிரமம் என்றே இவர் அப்பொழுது கூறியிருந்தார். 2016இல் காயம் காரணமாக விளையாட்டை நிறுத்தி, மீண்டும் ஆரம்பித்த காலந் தொடக்கம் இன்றுவரையில் சூறாவளி வேகத்தில், 3 கிரான்ட் ஸ்லாம் கிண்ணங்கள் உட்பட, எட்டு சுற்றுப் போட்டிகளை வென்றெடுத்துள்ளார்.

*2004 தொடக்கம் 2008வரை தொடர்ந்து இவர் முதலாம் இடத்தைப் பிடித்துக் கொண்ருந்தது, இதுவரையில் எந்த வீர்ரும் சாதித்திராத ஒன்று.

* ஆணாக இருந்தாலென்ன பெண் வீராங்கனையாக இருந்தாலென்ன, முதலிடத்தை  மீண்டும்பிடித்த வயதாளி என்ற பெருமை பெடரருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க பெண் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் தனது 35வது வயதில் இதைச் சாதித்திருந்தார்.

* ஐந்து வருட கால வறட்சியின் பின்னர் அதாவது 2012இலிருந்து எந்த கிரான்ட் ஸ்லாம் போட்டியையும் வெல்ல முடியாது திணறிய இவர், 2017இல் தன் ‘காட்டில் மழை‘ பொழிய ஆரம்பிப்பதைக் கண்டுள்ளார்.

ஓர் அற்புதமான வீர்ர் இவர்!. ‘வயது என்பது எதற்குமே தடையாக இருந்ததில்லை‘ என்ற பாடத்தை இவரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள முடியும்.

18.02.18

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *