கற்க கசடற……..(சிறுகதை)

கற்க கசடற……..(சிறுகதை)

  வீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா  தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்பொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில  தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன,  பெரிதாக  இருந்தாலென்ன  கிடைக்கும் சுகானுபவம்  அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு...

Read more
மரத்தை மணஞ் செய்வோம்

மரத்தை மணஞ் செய்வோம்

ஏவாளுக்கு ஆதாமைப் படைத்து, இவன் உன் வாழ்க்கைத் துணைவன் என்று சொல்லி வைத்தார் கடவுள். ஆனால் மனிதனோ புத்தி தலைக்கேறி, அவன் இஸ்டப்படியெல்லாம் வாழ ஆரம்பித்து விட்டான். “ஏவாளுக்கு இன்னொரு ஏவாள்”, “ஆதாமுக்கு இன்னொரு ஆதாம்” என்றெல்லாம் வாழத் தலைப்பட்டு விட்டது உலகம். இதையெல்லாம் ஓரங் கட்டுவது போல, வெறும் ஜடங்களையும் , வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக் கொள்ளும் காலம் வந்திருக்கின்றது. சட்டரீதியான திருமணம் இல்லையென்ற போதிலும், மெக்சிக்கோவில், இளம்...

Read more
மறைந்து நின்று தாக்கும் கொரில்லாக்கள்-தெரிந்த மிருகம் தெரியாத கதை

மறைந்து நின்று தாக்கும் கொரில்லாக்கள்-தெரிந்த மிருகம் தெரியாத கதை

மனிதனைப் போலவே பல வழிகளில் நடந்து கொள்ளும், ஒராங் உட்டான் என்ற மனிதக் குரங்குகளைச் சென்றவாரம் சந்தித்தோம். இந்த இனக் குரங்குகளைப் போல, மனித குணாம்சங்கள் பலவற்றைக் கொண்டதுதான் கொரில்லாக்கள் எனப்படும் குரங்குகள். வேகமாக அழிந்து வரும் ஓர் இனமாக இது மாறியிருப்பது கவலைக்குரியதே! இவை அதிகமாகக் காணப்படும் ஆபிரிக்க நாடான கொங்கோவின் காடுகளில், 2020ம் ஆண்டளவில் இந்தக் குரங்குகள் பெரும் பகுதிகளில்  அழிந்துவிடலாம்,  என்று ஐ.நா.சபை அதிகாரிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள்....

Read more
வான்வெளியில் வரம்புமீறல்

வான்வெளியில் வரம்புமீறல்

பறந்து பறந்து பணிபுரியும் பணிப்பெண்களை நினைக்கும்போது பாவமாகத்தான் இருக்கின்றது. இரவு பகலென்று பாராது, அந்தரத்தில் பறக்கும் விமானங்களில் ஒடியோடி உழைக்கும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். இந்தத் தடவை, ஒரு 20வயதுப் பயணி வடிவில் பிரச்சினை பறந்து வந்துள்ளது. மலின்டோ எயர் நிறுவனத்தின் விமானமொன்றில்தான் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது கோலாலம்பூர் நகரிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது. ஒரு 20 வயதான பயணி, தனது மடிக் கணனியில், பலான படங்களைப்...

Read more
சாதனைப் பெண் கல்பனா சாவ்லா

சாதனைப் பெண் கல்பனா சாவ்லா

குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள்  ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக்...

Read more