வான்வெளியில் வரம்புமீறல்

வான்வெளியில் வரம்புமீறல்

5 views
0

பறந்து பறந்து பணிபுரியும் பணிப்பெண்களை நினைக்கும்போது பாவமாகத்தான் இருக்கின்றது. இரவு பகலென்று பாராது, அந்தரத்தில் பறக்கும் விமானங்களில் ஒடியோடி உழைக்கும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

இந்தத் தடவை, ஒரு 20வயதுப் பயணி வடிவில் பிரச்சினை பறந்து வந்துள்ளது. மலின்டோ எயர் நிறுவனத்தின் விமானமொன்றில்தான் இச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இது கோலாலம்பூர் நகரிலிருந்து புறப்பட்டு பறந்து கொண்டிருந்தது. ஒரு 20 வயதான பயணி, தனது மடிக் கணனியில், பலான படங்களைப் பார்த்து ரசிக்கத் தொடங்கியிருக்கின்றார். உணர்ச்சி மேலீடு போலும்,. உடைகளைக் களைந்து விட்டு பிறந்த கோலத்திலிருந்து, படத்தை ரசிக்குமளவுக்கு, இவர் உணா்ச்சிகள் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றன. பின்பு விமானப் பணியாளர்கள் வற்புறுத்தலால் மீண்டும் ஆடையணிந்து கொண்டார். இவர் ஒரு மாணவர் என்பதையும் கருத்திற் கொள்க!

பின்பு  அவர் அருகில் வந்த ஒரு விமானப் பணிப்பெண்ணைக் கட்டித் தழுவ முயன்றிருக்கிறார். அவர் எதிர்ப்புக் காட்டியபோது, முரட்டுத்தனத்துடன் அந்தப் பெண்ணைத் தாக்கியும் இரு்ககிறார் இந்த “விளையாட்டுப் பிள்ளை”. இன்னொரு பயணியின் கூற்றின்படி, தனது ஆசனத்தில் இருந்தபடி, சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளதோடு, சிறுநீரகமும் கழித்துள்ளார்  என்று அறியப்படுகின்றது.

பறக்கும் பெண்கள் முகம் கொடுக்கும் இப்படியான  கேவலமான பிரச்சினைகள் பற்பல! ஒரு மருத்துவதாதி போல, இன்முகத்தோடு வரவேற்று, புன்முறுவலோடு பேச்சுக் கொடுத்து, ராஜ உபசரணை செய்யும் இவர்களுக்குத்தான் எத்தனை சோதனைகள்!

காயம் விளைவிக்கும் கன்னியர்

26 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்களின் முழுத் தொகையில்  ஏறத்தாழ பாதித் தொகையினர், தம்மைத் தாமே காயப்படுத்தி இருக்கிறார்கள்.- அதிசயமான ஆச்சரியமான தகவலாக இது உங்களுக்குத் தெரிகிறதா?

இந்தப் புள்ளிவிபரம், பல விடயங்களிலும் நன்கு வளர்ச்சி கண்டுள்ள பிரிட்டனில்தான் எடுக்கப்பட்டுள்ளது.  ஓர் தனியார் அமைப்பு 16 தொடக்கம் 25 வயது வரையிலான  1009 இளைஞர்களையும் யுவதிகளையும் , “நீங்கள் உங்களை எப்போதாவது காயப்படுத்த முயற்சி செய்ததுண்டா”? என்று வினவப்பட்டதில், 27 வீதமான இளைஞர்களும், 45 வீதமான பெண்களும், ”ஆம்” என்ற பதிலை அளித்து, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.. இவர்கள் உளரீதியாகப் பாதிக்கப்படும்போதே, இப்படி தம்மைக்“காயப்படுத்த”  முனைகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்ற வருடம் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் ஆய்வொன்றின்படி, கடந்த 3 வருடங்களில், தம்மைத் தாமே காயப்படுத்திக் கொள்பவர்கள் தொகை 68 வீதத்தால் அதிகரித்திருப்பதாக அறியப்பட்டது. ஒவ்வொரு 10,000 பெண்களில் 32 பேரும், ஒவ்வொரு 10,000 பெண்களில்  12 பேரும் இப்படி தம்மைத் தாமே காயப்படுத்தி மருத்துவ சிகிச்சை பெற்றிருந்ததை இவர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றார்கள்.

காயமே இது பொய்யடா என்று சொல்லி மூடிமறைத்து விடவில்லை. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளாக இருந்தும், உயர்ந்த கல்வி அறிவு அளிக்கப்பட்டும் இளம் பெண்கள் நடந்து கொள்ளும் முறை, இவர்களிலும் மனநோயாளிகளுக்கு பஞ்சமில்லை என்பதையே பறைசாற்றுகின்றன

05.03

 

 

About author

Rajesmanalan

வாசிப்பதை நேசிப்பவன் . வாசிப்பதை பிறரிடம் யாசிப்பவன். மொழிகளில் தீராத நேசம் கொண்டவன் . பயணங்களை வெகுவாய் ரசிப்பவன். படிப்பதில் பிடித்ததை பகிர ஆசைப்படுபவன் .இரு பணக்கார நாடுகளில் 30வருடங்கள் பணியாற்றி அந்தச் சுவையான அனுபவத்தை தாய் மண்ணில் இரைமீட்டுக் கொண்டிருப்பவன் .எழுதுவது என்பது என் இன்னொரு தோலாக ஒட்டிக் கொண்டிருப்பது

Your email address will not be published. Required fields are marked *