உங்களில் எத்தனை பேருக்கு வெண்டைக்காய் பிடிக்கும் ? தினமும் சாப்பிடலாமே

உங்களில் எத்தனை பேருக்கு வெண்டைக்காய் பிடிக்கும் ? தினமும் சாப்பிடலாமே

சும்மா ஒரு பேச்சுக்காகச் சொல்லவில்லை . நான் மருதனாமடம் சந்தைக்கு போகுபோதேல்லாம் வெண்டைக்காய் வாங்க மறப்பதில்லை . எனக்கு மிகவும் பிடித்த மரக்கறி இதுதான் . சிறுவயதில் தோட்டத்தில் காய்த்திருந்த வெண்டைக் காயை அப்பா பிடுங்கி பச்சையாகச் சாப்பிடுவார் . இது ஒரு முட்டைக்கு சமம் என்று சொல்வார் . உண்மைதான் என்று . நான் இப்பொழுது  நம்புகிறேன் . அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்கிறேன் . ஆனால் இந்த அருமையான...

Read more
நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

முக்கனிகளுள் ஒன்று மாம்பழம் நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதில்லை .இதில் மாம்பழம் பெரிதும் கவனிக்கத் தக்கவர் . இலங்கையில் யாழ்ப்பாணம் என்றதும் கறுத்தக் கொளும்பானின் ஞாபகம்தான் வரும் . இவர்தான் இங்கே மாம்பழங்களின் இராஜா !இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் நாளெல்லாம் வாய் இனித்துக்கொண்டே இருக்கும் . யாழ் மண்ணுக்குரிய ஒர் சுவையான பழத்துக்கு, ஏன் கறுத்தக் கொழும்பான் என்று பெயர் வைத்த்தார்கள் என்பது படைத்தவனுக்குத்தான் வெளிச்சம் !...

Read more
முதலாம் இடத்தில் நிற்கும் 2015

முதலாம் இடத்தில் நிற்கும் 2015

கடந்த 137வருடங்களுள் , பூமியைப் பற்றிய நவீன பதிவுகள் மூலம் , இந்த முதல் பாதிப்பகுதிதான் , இரண்டாவது அதி வெப்பமான காலம் என்று, நேற்று புதனன்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். 1880 -2017 காலகட்டத்தில் பதிவாகியுள்ள தரவுகளுக்கு இணங்க , 2016 அதி வெப்பநிலை கொண்ட ஆண்டாக  பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாத வெப்பநிலை , இப்பொழுது 137வருட காலத்திற்குள் , இரண்டாவது இடமாகப் பதிவு...

Read more
ஒழுங்கு தப்பினால் ஓராயிரம் சிக்கல்கள் !!!

ஒழுங்கு தப்பினால் ஓராயிரம் சிக்கல்கள் !!!

மனித வாழ்வில்பாதி ஒழுங்குதான் என்கிறார்கள்.  பலவற்றை ஒழுங்கு செய்வதிலேயே அவனுக்கு பாதி வாழ்நாள் போய்விடுகின்றது. ஒழுங்குதான் அவன்வாழ்க்கையை நெறிப்படுத்துகின்றது. ஒன்றில் ஒழுங்கீனம் ஆரம்பித்தால் அது சங்கிலித்தொடராக, ஏனைய நிகழ்வுகளையும் பாதிக்க, அவன் வாழ்வு,சேறும் சகதியும் கொண்ட குளம்போல கலங்கி விடுகின்றது. உணவில் ஒழுங்கு, படிப்பில் ஒழுங்கு, வேலையில் ஒழுங்கு, உடல்நிலையில் ஒழுங்கு, வீட்டில் ஒழுங்கு, வீதி ஒழுங்கு  என்று நம்வாழ்வில் எதையெடுத்தாலும், ஓர் ஒழுங்குமுறையைப் பின்னிப் பிணைந்தே வாழ்க்கை நகர்வதை...

Read more
பயமுறுத்தும் பதிமூன்று

பயமுறுத்தும் பதிமூன்று

நாள் நட்சத்திரம் பார்ப்பதில் நம்மவரை மிஞ்ச உலகில் வேறு யாருமில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது. இறைவன் படைத்த எந்த நாளும் நல்ல நாள்தான் என்று ஆறுதலுக்காகச் சொல்லிக் கொண்டாலும், ஒரு சுபகாரியம் என்று வந்துவிட்டால், பலதும் பத்தும் பார்த்தே,  அந்த வைபவத்தை அரங்கேற்றுகிறோம்.அட்டமி நவமி, மரணயோகம்,  அமவாசை நாட்கள் என்று வந்துவிட்டால் தமிழர்களாகிய நமக்கு எந்த சுபகாரியங்களையும் நடாத்த முடிவதில்லை. ராகு காலங்களைத் தவிர்த்தே எந்த நிகழ்வையும் நடாத்துவதும் தமிழர்தான்....

Read more
ஒய்யாரமாக  நடந்து வரும்    ஒட்டகச்சிவிங்கிகள் …..

ஒய்யாரமாக நடந்து வரும் ஒட்டகச்சிவிங்கிகள் …..

ஒரு தடவை  குடித்த தண்ணீரை உடம்பில் சேமித்துக் கொண்டு, சில நாட்களுக்கு தண்ணீரே இல்லாமல் வாழும் திறன்,  நீண்ட கழுத்து. அதே போல அசாதாரண நீண்ட கால்கள்,  ஒட்டகத்தை ஒத்த முகம் என்று சில குணாம்சங்கள் பொருந்தி வருவதால்தான் ஒட்டகத்தின் பெயரையும் சேர்த்து,  ஒட்டகச்சிவிங்கி என்று இந்த மிருகத்திற்கு பெயர் கொடுத்தார்களோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது. அறிந்த மிருகம் அறியாத கதை என்ற வரிசையில்,  இப்பொழுது வருவது,  மிருகங்களில் மிக...

Read more
கல்வியில் அசத்தும் பின்லாந்து

கல்வியில் அசத்தும் பின்லாந்து

உலகில் தலைசிறந்த கல்வியில் பின்லாந்து முதல் இடத்தில் உள்ளது அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் ? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது… 😢கருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை… 👍எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில்...

Read more
நிறங்கள் காட்டும் மாயாஜாலங்கள்

நிறங்கள் காட்டும் மாயாஜாலங்கள்

மனிதவாழ்வு வண்ணமயமானது. ஒத்துக் கொள்கிறீர்களா? இந்த நிறங்களைச் சற்றே நோக்குங்கள். எம் அன்றாட வாழ்வுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த வாழ்வு ஏன் வண்ணமயமானது என்பது உங்களுக்குச் சட்டெனப் புரிந்துவிடும். இது வசந்த காலம் . உங்களைச் சுற்றிப் பாருங்கள். மெல்ல மெல்ல இலைகள் மரங்களில் துளிர்க்க ஆரம்பித்து விடுகின்றன. குனிந்து தரையைப் பாருங்கள். பச்சைப் புல் நிறைந்து கிடக்கின்றது. இதோடு பச்சை நிறம் நின்றுவிடவில்லை. பச்சைப் பொய் பற்றி அறிந்திருக்கின்றீர்களா?...

Read more
மூளை இல்லையென்றால், மூலையில்தான்….!!!!!

மூளை இல்லையென்றால், மூலையில்தான்….!!!!!

நம் உடல் உறுப்புகள் எல்லாமே மூளையின் கட்டளைக்கு ஏற்பவே இயங்கி வருகின்றன. மூளை இயங்கவில்லையென்றால், நம் உடலை ஒரு மூலையில் போட்டுவிட வேண்டியதுதான். ஆணா அல்லது பெண்ணா , எத்தனை வயது என்ற விடயங்களைப் பொறுத்து, எமது மூளையிலுள்ள நியூரோன்களின் அளவு மாறுபடுகின்றது. ஆனால் பொதுவாக 15தொடக்கம் 33 பில்லியன்கள் நியூரோன்கள் எங்கள் மூளைகளில் இருக்கின்றன. எங்கள் நரம்பு மண்டலத்தின் மையப் பொருளாக இருப்பதே இந்த நியூரோன்கள் எனப்படும் நரம்புக்...

Read more
புதுமையான ஆயுதம் இந்த பூமராங் ..

புதுமையான ஆயுதம் இந்த பூமராங் ..

வளரி என்று அழகிய தமிழிலும் பூமராங் என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் ஓர் ஆயுதம் பற்றி அறிவீர்களா ? பூமராங் என்ற மிகப் பழமையான ஓர் ஆயுதத்திற்கு, தமிழில் வளரி என்ற அழகான ஒரு பெயர் உண்டு. தமிழ் நாட்டின் மதுரை, சிவகாசி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் முற்காலத்தில் இதை ஒரு போர்க்கருவியாகப் பாவித்துள்ளார்கள். ஓடும் எதிரியின் காலைக் குறிபார்த்து எறிய, கால் இடறிக் கீழே விழுபவனை லபக்கென்று பிடித்து விடுவார்கள்....

Read more