சாதனைப் பெண் கல்பனா சாவ்லா

சாதனைப் பெண் கல்பனா சாவ்லா

குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்டுபவர்கள் அல்ல இன்றை இன்றைய பெண்கள். அவர்கள் உலகம் நன்றாகவே விரிந்து விட்டது. உன்னை விட நான் எந்த விதத்திலும் சளைத்தவனல்ல என்பதுபோல, பெண்கள்  ஆண்களைப் போல பல துறைகளிலும் பிரகாசிக்கத் தொடங்கி விட்டார்கள். உடலமைப்பில் அவர்கள் பலவீனமானவர்களாக இருக்கலாம். ஆனால் மனோபலம் அவர்களிடம் நிறையவே இருக்கின்றது. ஆண்களை விட பொறுமையும் அதிகம் இருக்கின்றது. அழகால் ஆணை மயக்குபவள் பெண் என்ற பூச்சைக் களைந்து, அறிவு சாதுர்யத்தால் ஆண்களைக்...

Read more
தளம்பல்நிலையில் இலங்கையின் உணவுத் தன்னிறைவு!

தளம்பல்நிலையில் இலங்கையின் உணவுத் தன்னிறைவு!

”கணனி மவுஸ் பிடிக்க ஆசைப்படும் கரங்கள், கலப்பையைப் பிடிக்கத் தயாராக இல்லை.. நான்கு சுவருக்குள் கதிரையில்  உட்கார்ந்து, குளிரூட்டப்பட்ட அறைக்குள் வேலை செய்யத் தயாராக உள்ள இன்றைய சமூகத்தினர், வெயிலில் காய்ந்து, வயல்களிலோ, தோட்டங்களிலோ தமது நேரத்தைச் செலவிடத் தயாராக இல்லை. ” உணவு உற்பத்தி விடயத்தில், இலங்கை இன்னமும் தன்னிறைவு காணவில்லை என்பதே யதார்த்தம். இங்கு பிரதான உணவாக இருக்கும்  சோற்றைப் பொறுத்த மட்டில்  அரிசி உற்பத்தியில் ,...

Read more
லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்  லேகோ!

லேட்டாய் வந்தாலும் லேட்டஸ்ட்  லேகோ!

ஐபாட் ஐபோன் என்று குட்டிகள் தங்கள் புலனைக் கெடுத்துக் கொள்வதைத் தடுக்க இருக்கவே இருக்கிறது லேகோ! ஐரோப்பிய நாட்டுத் தமிழ் பிள்ளைகளுக்கு பல பெற்றோர்கள் இந்த லேகோவைக் கொடுத்துத்தான் ஐபாட்டை மெல்ல மெல்ல மறக்க வைத்துவருகிறார்கள். இந்த வியடத்தில் ஐரோப்பாவிலுள்ள பெற்றோர்கள், “லேட்” என்றாலும், இப்பொழுதாவது லேகோ பக்கம் தம் பிள்ளைகள் பார்வையைத் திருப்ப வைத்திருப்பது வரவேற்கத் தக்கதே! தனது 60வது பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது லேகோ. சிறு சிறு...

Read more
வீடுகட்டிக் கொடுக்க விற்பனையாவது பெண்மையா?

வீடுகட்டிக் கொடுக்க விற்பனையாவது பெண்மையா?

  எந்தச் சுவரில் போய் முட்டிக் கொள்வது? தன் பெற்றோருக்கு வீடு கட்டிக் கொடுக்க, தன் பெண்மையை ஏலத்தில் விற்பனை செய்ய முன்வந்துள்ளார் ஒரு 18வயது மொடல் அழகி! மாணவியான இவர் தான் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படிக்கவும், தன் பெற்றோருக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்கவும், தன் பெண்மையை ஒரு மில்லியன் யூரோ பணத்தொகைக்கு ( சுமாராக 19கோடி ரூபாய்) ஏலத்தில் விற்கத் தயார் என்று அறிவித்திருக்கிறார். இது...

Read more
    ஆண்டுக்கொரு குளியலா? ஐயோ வேண்டாமே!

   ஆண்டுக்கொரு குளியலா? ஐயோ வேண்டாமே!

  மனைவியை விவாகரத்துச் செய்ய, ஒரு வினோதமான காரணத்தை  நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளார் கணவர். ஆண்டுக்கொரு தடவை குளியலறைப் பக்கம் தலைகாட்டும் என் மனைவியோடு என்னால்  தொடர்ந்து வாழமுடியாது என்பதுதான் அந்த முறைப்பாடு! தாய்வானின் தலைநகரான ரைபேயின் மாவட்ட நீதிமன்றத்தில்தான்  இந்த முறைப்பாடு செய்யப்பட்டு்ள்ளது.  முறைப்பாட்டுக்குள்ளாகிய பெண்ணின் பெயர் லின். இவர் இடையிடையே பற்களைத் துலக்குவதுண்டு. தலைமுடியையும் கழுவிக் கொள்வாராம். அவ்வளவுதான். திருமணம் செய்த சமயம், இந்தப் பெண் வாரத்திற்கு ஒரு...

Read more
இருபதில் இருக்கின்றது இளமைச் சுகம்

இருபதில் இருக்கின்றது இளமைச் சுகம்

பொதுவாகவே தேசிய வீரர்கள் தினம், மதப் பெருநாட்கள், சுதந்திர தினம், என்பதை நினைவுகூர, உலக நாடுகள் பொதுவிடுமுறை தினங்களைப் பிரகடனப்படுத்துகின்றன. இந்த நாட்கள் தொகை , மதரீதியாக எண்ணுக்கணக்கில், தொகையில் வேறுபடுகின்றன. ஜனவரி பிறந்ததும் பொங்கல் பட்டென நமக்கு நினைவுக்கு வந்து விடும். ஆனால் ஜப்பானிலோ இந்த ஜனவரி மாதம் “வயதுக்கு வருபவர்களுக்கு”  ஒரு பொது விடுமுறை தினத்தையும்  இழுத்துவருகின்றது ஜனவரி மாதத்தின் இரண்டாவது திங்களே இந்த விடுமறை தினமாகப்...

Read more
தீர்த்துக்கட்ட முடியாத தீரரோ இவர்?

தீர்த்துக்கட்ட முடியாத தீரரோ இவர்?

காலத்துக்குக் காலம் பத்திரிகைத் தலைப்புச் செய்திகளை அலங்கரிப்பவர்கள் பலர் வந்து வந்து போகின்றார்கள். சிலர் தொடர்ச்சியாக வருகிறார்கள். 2017இல்  அமெரிக்க அதிபர் டிரம்பும், வட கொரிய அதிபர் கிம் ஜொங்கும் தமது “கோமாளிக் கூத்துக்களால்” அடிக்கடி பத்திரிகைகளில் வந்துபோனார்கள். 2018இன் ஆரம்பத்திலும் “சமாதானப் பேச்சுவார்த்தை” என்று பல்டி அடித்துள்ளார்கள். சமீபத்தில் பதவி ஓய்வுபெற்றுவிட்ட ஒரு தென் கொரிய இராணுவ அதிகாரி , கிம் ஜொங்கை ஆட்சியிலிருந்து துாக்கியெறிய முடியாத அளவு,...

Read more
சதைவெறியும் கொலைவெறியும்-3

சதைவெறியும் கொலைவெறியும்-3

கொலைக்களம்3 உடல் வேட்டை எனவே இவனால் கொல்லப்பட்டவர்களின் “எச்சங்களை“ இவனைக் கொண்டு கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகள் திட்டமிட்டார்கள். இவனை உடனடியாக சிறையில் தள்ளவில்லை.  குறைத பட்சம் இவன்  ஒப்புக்கொண்ட மூன்று பெண்களின் உடல்களின் மிஞ்சிய பகுதியாவது  கிடைத்தால்தான், இவன் கொலைகாரன் என்பது உறுதியாக முடியும். இரு வாகனங்களில் ஒரு பொலிஸ் குழு இவனையும் ஏற்றிக் கொண்டு, மாலை ஒரு மாலை நேரம் வேட்டையைத் தொடங்கியது. தனக்கு நன்கு பரிச்சயமான இடமென்பதால்,...

Read more
சதைவெறியும் கொலைவெறியும்-2

சதைவெறியும் கொலைவெறியும்-2

கொலைக்களம்2 படப்பிடிப்பாளனாக தொடர்ந்த வதை 1957இல்  இவன் நியூயோர்க் நகருக்கு தன் இருப்பிடத்தை மாற்றியபோது. அட்டகாசங்கள் புதுவடிவமெடுத்துள்ளன.  தான் ஒரு தொழில்ரீதியான படப்பிடிப்பாளன் என்று சொல்லிக்கொண்டு, கைகள் பிணைக்கப்பட்ட நியைில் இளம் பெண்களை படமெடு்க்க ஆரம்பித்துள்ளான். இதற்கு இவன் பணமும் கொடுத்துள்ளான்.  பிரபல்யமான கிளுகிளுப்புச் சஞ்சிகைளின் அட்டைப் படமாக இவர்களின் படம் வரும் என்று ஆசைகாட்டி, தன் இருப்பிடத்துக்கு  இளம் பெண்களை அழைத்து வரத் தொடங்கினான். கைகால்களைக் கட்டி படமெடுத்து...

Read more
சதை வெறியும் கொலைவெறியும்

சதை வெறியும் கொலைவெறியும்

கொலைக்களம்-1 ” ரசனைகள் மனிதருக்கு மனிதர் மாறுபடுகின்றன. நிறையச் சாப்பிட வேண்டும் என்ற ஆசையோடு இருப்பவர்கள் ஒரு சாரார். நிறையக் குடிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் இன்னொரு சாரார். நிறையப் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறார்கள் வேறு சிலர். இதையெல்லாம் தாண்டி வேகமாக எதையும் செய்வதையே விரும்புகிறார்கள். இதையெல்லாம் சாதாரணம் என்று ஒதுக்கி விட்டு, குறிப்பிட்ட சிலரின் அசாதாரண ஆசைகளைப் பார்க்கும்போது, அதிர்ச்சிவயப்பட்டு விடுகிறோம். பிறரை வருத்தி...

Read more