காலனாக மாறுகின்ற காலநிலைக் கோலங்கள்

காலனாக மாறுகின்ற காலநிலைக் கோலங்கள்

“இயற்கை இயற்கையாகவே இல்லாமல் செயற்கைத்தனங்கள் புகுந்து அதனுடன் மல்லுக்கட்ட ஆரம்பித்தால், விளைவுகள் பாரதூரமானவையாகவே இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம் .  கண்கூடாகப் பார்க்கிறோம் . இனியும் பார்க்கப் போகிறோம் . அது அதுவாகவே இருந்து விட்டால் , இதுவும் இதுவாகவே இருக்கும் என்பது நிச்சயம்” மேற்கத்தைய நாடுகளில் காலங்கள் நான்கு என்கிறார்கள் .பூ போல பனிகொட்ட , குறுகிய பகலும் நீண்ட இரவும் கொண்ட ஒரு குளிர்  காலம் ..மொட்டை...

Read more

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு உயிர் கொடுத்துள்ள , இரு பெரிய மோதல்கள்

எல்லாமே வேகம் என்ற நிலையில் , ஆமைவேகத்தில் நகரும் டெஸ்ட் போட்டிகள் , தமது சுவாரஸ்ஸியத்தை இழந்து விட்டன என்று சமீபத்தில் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன ,இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மோதல்கள் மூன்று,  நான்கு நாட்களில் நடந்து முடிந்த போது, டெஸ்ட் போட்டிகள் “உயிரிழந்து விட்டன” என்றே எல்லோரும் பரிதாபப் பார்வை பார்த்தார்கள் . இலங்கை அணிக்கு 5நாட்கள் விளையாடும் தகுதி இருக்கிறதா என்ற கேள்வி ஒருபுறம்...

Read more
எகிறும் ஜனத்தொகையை எப்படித் தாங்கும் இந்தப் பூமி ?

எகிறும் ஜனத்தொகையை எப்படித் தாங்கும் இந்தப் பூமி ?

“ஒவ்வொரு 102ஆண்களுக்கும் 100 பெண்கள் இருப்பார்கள். இப்படியே போனால் ஒருவனுக்கு ஒருத்தி என்பதைக்  கைவிட்டுவிட்டு , ஒருத்திக்கு இருவர் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”  உலகின் ஏழு கண்டங்களில் , ஆறு கண்டங்கள் நிரந்தரமாக பெரும் தொகை மக்களுடன் திணறிக் கொண்டிருக்கின்றன. இதில் முன்னுக்கு நிற்பது ஆசியக் கண்டம் . அதனுடைய 4.3 மில்லியன் குடி மக்கள் , உலக ஜனத் தொகையின்      60 வீதமாக திகழ்கின்றார்கள்  , உலகின்...

Read more
செல்பிகள் செய்யும் சேஷ்டைகள்…..

செல்பிகள் செய்யும் சேஷ்டைகள்…..

பறவையைக் கண்டான் விமானம்  படைத்தான்…..சந்தோஷமான விடயம் . இன்று அத விமானத்தால் சொகுசான பயணங்களை மேற்கொள்கிறோம்.. உலகம் சுருங்கி விட்டது  இந்த அவசர உலகில் பல மணி நேரங்கள் மிச்சம் பிடிக்கப்படுகின்றன . விமான விபத்துக்கள் வருகின்றனவே என்று சொல்ல வர வேண்டாம் . கத்தரிக்காய் நறுக்கும் கத்தி கழுத்தை அறுக்கவும் உபயோகிக்கப்படுகிறது என்பதற்காக கத்தி கூடாது  என்று  நீங்கள் கத்தி என்ன பலன் ? செல்போனைக் கண்டான் ....

Read more
மீன்தேவதையோடு ஏன் இந்தப் பிணக்கம் ?

மீன்தேவதையோடு ஏன் இந்தப் பிணக்கம் ?

ஒரு நாட்டைத் தனித்துவப்படுத்தவென , அந்தந்த நாடுகளில் ஏதோவொன்று இருப்பது வழமை . தாஜ்மஹால் என்றால் இந்தியா , இந்தியா என்றால் தாஜ்மஹால் என்றாகி விட்டது .கிமோனா அணிந்த பெண்கள் என்றால் ஜப்பானை விட வேறு எந்த நாடும் இருக்க முடியாது . கழுத்தில் உள்ள பெரிய மணி ஒலி எழுப்ப மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள சீமைப் பசு என்றால் அது நிச்சயம் சுவிஸ் பசுதான் . தொடர்மலைப் பிராந்தியத்தில் முன்னாள்...

Read more
கடிவாளம் இடப்படும் கடுகதி வேகம்

கடிவாளம் இடப்படும் கடுகதி வேகம்

விளையாட்டு இன்று உழைக்கும் தொழிலாகி விட்டது. முன்பெல்லாம் உடல் பயிற்சிக்காக , பொழுது போக்குக்காக என்றிருந்த விளையாட்டுகள் இன்று உழைத்துப் பிழைத்துக் கொள்ளலாம் என்ற தெம்பைப் பலருக்குத் தந்திருக்கின்றன . கிரிக்கெட் , டென்னிஸ் , காற்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகள் கோடி கோடியாக உழைக்கும் வாய்ப்பைத் தந்தாலும் ஏனைய விளையாட்டுகளும் பணம் சம்பாதிக்க வழி சமைத்த வண்ணமாகவே இருக்கின்றன . ஒலிம்பிக் விளையாட்டுகளின் அறிமுகத்தின் பின்னர் எல்லா விளையாட்டுக்களிலும் மின்னும்...

Read more
குவியும் குப்பையும் குழம்பும் பொதுஐனமும்

குவியும் குப்பையும் குழம்பும் பொதுஐனமும்

அரசியலில் குப்பை, நிர்வாக இயந்திரத்தில் குப்பை என்றிருந்த நாட்டில், கழிக்கும் குப்பைகளும் இன்றைய நாட்களில் அரசுக்கு தலைவேதனை தரும் விவகாரமாக மாறியிருக்கின்றது. ஓங்கி உயர்ந்த கட்டடங்களும் தெருக்களை நிறைக்கும் வாகனங்களும், அமளி துமளியாக ஓடித்திரியும் ஜனங்களும் என்ற நிலையிலுள்ள நகர்ப்புறங்களில் குவியும் குப்பைகள்தான் அரசுக்கு பெரும் சிக்கல்களைத் தோற்றுவித்து வருகின்றன. கடந்த காலங்களில் காபனீர் ஒக்ஸைட், தண்ணீர், மீதேன் என்று பிரிக்க முடியாத கழிவுகளின் தொகை இலங்கையில் பெருமளவு அதிகரித்து...

Read more
சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியினரும்

சமூகவலைப் பின்னல்களும் சிக்கித் தவிக்கும் இளஞ்சந்ததியினரும்

இன்றைய நாட்களில் கணணிகளின் இராஜாங்கமே கோலோச்சுகின்றது. எதிலும் கணனி எங்கும் கணனி எதற்கும் கணனி என்றாகி விட்ட நிலையில், கணனி அறிவுள்ளவர்கள்தான் நல்ல தொழில் வாய்ப்பைப் பெறலாம் என்ற நிலை உருவாகி விட்டது. அதிலும் முகநூல் ஆரம்பித்த பின்னர் கணனிக்குள்  மணிக்கணக்காக முகத்தைப் புதைப்பவர்கள் இன்று பல்கிப் பெருகி விட்டார்கள். அதுபோல குறுஞ்செய்திகளை அனுப்பி விட்டு அவற்றின் பதிலுக்காக அடிக்கடி தமது கைத்தொiபேசிகளை வருடிக் கொண்டிருப்வர்களும்  எண்யிக்கையில் அதிகரித்து விட்டார்கள்....

Read more
நாற்றமடிக்கும் ரயில்வே திணைகளத்தின் ரொய்லட் விவகாரம்

நாற்றமடிக்கும் ரயில்வே திணைகளத்தின் ரொய்லட் விவகாரம்

ஒருவர் மணிக்கணக்காக பயணம் செய்யும்போது , இடையிடையே அவருக்கு வரும் இயற்கை உபாதைகளுக்கு பதில் சொல்லியாகவே வேண்டும் . அதிலும் பெண்கள் விடயத்தில் இது மேலும் சிக்கலான விடயமாகி விடுகின்றது . பொதுஜன சேவை என்று வரும்போது , பயணிகளுக்கு கழிப்பிட வசதிகள் கொடுக்க வேண்டியது கட்டாய சேவை என்பதில் எந்தச் சந்தேகமுமே இல்லை . ரயில்வே திணைக்களம் இந்த விடயத்தில் பொதுமக்களை அதிருப்திப்படுத்தி இருப்பதால் அதற்கு கல்லெறி  விழ...

Read more
போதையில் தள்ளாடும் இலங்கை…

போதையில் தள்ளாடும் இலங்கை…

உடலை வருத்தி உழைப்பதில் பலருக்கு இப்பொழுது நம்பிக்கை தொலைந்து வருகின்றது போலும். ஒரு நாள் ஆட்டங்களில் உள்ள விறுவிறுப்பும், சுரண்டி உடன் பணம் எடுக்கும் அதிஸ்ட இலாபச் சீட்டுக்களில் உள்ள வருவாயும் இன்றைய யுகத்தில் பலருக்கு பிடித்தமானதொன்றாக மாறியிருக்கின்றது. காத்திருப்புகளில் நம்பிக்கை ஆட்டங்கண்டிருக்கின்றது. இதன் எதிரொலியாக பெருந்தொகையானவர்களுக்கு தொற்றியிருக்கின்றது. வேகமாகப் பணஞ் சம்பாதிக்கும் பேராசை. ஒரு நாள் ஆட்;ட வெற்றி போல ,சீட்டை சுரண்டிய அடுத்த கணம்  நூறோ ஐந்நூறோ...

Read more